08 நவம்பர் 2016

சத்தி புத்தகத் திருவிழா-2016

                             தொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்
                                                           கற்றனைத்தூறும் அறிவு  - குறள்.

   

 ''நான் சார்ந்துள்ள அரசியலையோ,மதத்தையோ,இனத்தையோ  பயன்படுத்தமாட்டேன்''.விதைகள் வாசகர் வட்டத்தில் இணைந்து எந்த பலனும் எதிர்பாராமல் இயன்றளவு பணிசெய்கிறேன்.இதை மனதார சம்மதிக்கிறேன்''-உறுதிமொழி
                  
                   சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம்
                             வழங்கும் மாபெரும் புத்தகத்திருவிழா.
                           மறு பரிசீலனைக்கூட்டம்.
                                நாள்; 2016நவம்பர்8 ந் தேதி  மாலை5.00மணி.
                              இடம்; பி.வி.லாட்ஜ் கூட்ட அரங்கு.
 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.இன்று மாலை 5.00மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பி.வி.லாட்ஜ் கூட்ட அரங்கில் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக நடத்தும் புத்தகக்காட்சி திருவிழா பற்றிய மறு பரிசீலனைக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் கூடுதலாக  சமூக ஆர்வலர்கள் இருபது நபர்கள் பங்கேற்றனர்.
இன்றைய கூட்டத்தின் சிறப்பு என்னவென்றால்,

சமூக வளர்ச்சிக்காக பயன்படும் சத்தி புத்தகத் திருவிழாவில்
  ''நான் சார்ந்துள்ள அரசியலையோ,மதத்தையோ,இனத்தையோ  பயன்படுத்தமாட்டேன்''.விதைகள் வாசகர் வட்டத்தில் இணைந்து எந்த பலனும் எதிர்பாராமல் இயன்றளவு பணிசெய்கிறேன்.இதை மனதார சம்மதிக்கிறேன்''
என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இத்துடன் அனுசரித்தும் விட்டுக்கொடுத்தும் ஒற்றுமை காப்பதாக ஏற்றுக்கொண்டதும் வரவு,செலவு உட்பட செயல்பாட்டில் குறைகளை சுட்டிக்காட்டவும்,தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளவும் வேண்டும் என்ற ஒருமித்த கருத்து ஏற்பும்.சமூக வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி. 
என அன்பன்,
பரமேஸ்வரன், 9585600733
செயலாளர், 
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக