30 ஜனவரி 2011

உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் 01-12-2010 தாளவாடி

அன்பு நண்பர்களே,                                                                                                                          
          
            வணக்கம், நமது தேனீக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பாக கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து தாளவாடி வட்டாரத்தில் உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்  மேற்கொள்ளப்பட்டது.
                                         அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் திரு;பி.எஸ்.சுப்பராயன் எம்.பி.பி.எஸ்.,அவர்கள் பையனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் எயிட்ஸிலிருந்து நம்மைப் பாதுகாப்பது பற்றியும்,எயிட்ஸ் நோய்க்கு ஆளானவர்களிடம் அன்பாக அணுகி நடந்துகொள்வது பற்றியும் நோயாளிகள் முறையான சிகிச்சை மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழும் முறை பற்றியும் விவரித்தார்.                     
     
             அங்கு சுமார் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.இந்த இயக்கத்தில் கோபி கலை&அறிவியல் கல்லூரி இளஞ்செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் பேராசிரியர்கள் திரு;சீனிவாசன் மற்றும் திரு;விஜயக்குமார் இவர்களுடன் இணைந்து தேனீக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.2000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்தும், தாளவாடி வட்டாரத்தில் சுவற்றில் ஒட்டியும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒரு வார காலம் செய்யப்பட்டது.      என.......
               
HONEY BEES SOCIAL ORGANIZATION                                

                                       SATHY & THALAVADI

1 கருத்து:

  1. அன்பு நண்பர்களே, வணக்கம்.இந்த சமூக சேவை அமைப்பு இன்னும் சிறப்பாக செயல்பட தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.நன்றி!

    பதிலளிநீக்கு

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right To Information Act 2005 - RTI Act, 2005)

   இணையதள வாசகப்பெருமக்களே,  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்திய அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிட்டுள்ள  முக்கி...