சுதந்திரப் போராட்ட தியாகி லட்சுமண அய்யர் கோபி செட்டிபாளையம்
அன்பு நண்பர்களே,வணக்கம்.
சுதந்திரப் போராட்டத் தியாகி மரியாதைக்குரிய லட்சுமண அய்யர் அவர்கள் 2011ஜனவரி02-ந்தேதியன்று கோபியில் மறைந்தார்.(இவருக்கு வயது 94).
லட்சுமண அய்யர் அவர்கள் சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி அனைவரிடமும் சமமாகப் பழக்கம் உள்ளவர்.
தீண்டாமையைக் கடுமையாக எதிர்த்தவர்.

1931-ல் மகாத்மா காந்திஜியின் அழைப்புக்கிணங்க
அய்யர் அவர்களால் அரிஜன மக்கள் வீட்டுக்குள்ளும் அழைக்கப்பட்டனர்.விருந்தும் வழங்கப்பட்டது.
இதனால்அவரது சமூகத்தாலும்,உயர் ஜாதியினராலும்,சொந்தங்களாலும் 1931முதல் 1936வரை ஒதுக்கப்பட்டார்.
கேவலமான பேச்சுக்களுக்கும் அவரது குடும்பமே ஆளானது.

1938முதல்1944வரையிலான காலகட்டத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில்பங்கேற்றார். அதனால் தியாகி லட்சுமண அய்யர் அவர்கள்
கோவை,அலிப்பூர்,பெல்லாரி,வேலூர்,பவானி எனப் பல்வேறு சிறைகளில் மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.
இவரது மனைவி,மாமனார்,மாமியார் கூட போராட்டத்தில் ஈடுபட்டு அய்யருடன் சிறை சென்றுள்ளனர்.

1944-ல் சுதந்திரப் போராட்டத்திற்காக வார்தா சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்த லட்சுமண அய்யர் அவர்கள் காந்திஜி அவர்களைச் சந்தித்தபோது
மகாத்மா காந்தி அவர்கள் மதிப்பிற்குரிய லட்சுமண அய்யர் அவர்களைப் பார்த்து ''நீ பிராமணன் தானே '' இங்கு சுதந்திரப் போராட்டத்திற்கு என்னுடன் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
ஆகவே,நீ உடனே ஊருக்குத் திரும்பு! ஊருக்குத் திரும்பியதும் ஹரிஜன சேவை செய்யத் தொடங்கு.அதுவே 'எனது விருப்பம்' என ஆணையிட,
காந்தியடிகளாரின் ஆணைப்படி
தனது இறுதி ஆயுள்வரை காந்திஜியின் கட்டளையை நிறைவேற்றுவதில் அய்யர் அவர்கள் கவனமாக இருந்தார்.
துப்புரவுத் தொழிலாளர்களை ஊருக்குள் அழைத்து வந்து இலவசமாக குடியிருப்புகளைக் கட்டித் தந்தவர் அய்யர் அவர்கள்.

அரசியல் தலைவர்களைப் பொருத்தவரையில் அந்த நாட்களில் இவரது வீடு ஒரு சத்திரம் போலத்தான்.
இவரது வீட்டில் எந்நேரமும் சமையல் நடந்து கொண்டே இருக்கும்.
சித்தரஞ்சன் தாஸ்,பாபு ராஜேந்திரபிரசாத்,ராஜாஜி,அருணா ஆசப்அலி,டாக்டர் அன்சாரி,காமராஜர், தந்தைபெரியார் -என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

பிரிட்டிஷ்காலக் குற்றப்பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்த போது நரிக்குறவ இனத்தைச் சார்ந்த ஒரேயொரு சிறுவனைக் கொண்டு
கோபி வாய்க்கால் ரோட்டில் ஹரிஜன விடுதி ஒன்றினை இலவசமாக தனது இடத்தில் ஆரம்பித்தார் அய்யர் அவர்கள். அந்த விடுதியில் இன்றுவரை தலித் சமுதாய மாணவர்களே அதிகப் பயனடைந்து வருகின்றனர்.

இவரது தாராள உள்ளத்தால் இவரது நன்கொடையால்- இன்று கோபி வட்டாரத்தில் வைரவிழா மேல்நிலைப் பள்ளி,பழனியம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி,டி.எஸ்.சாரதா வித்யாலயம்,விவேகானந்தா ஐ.டி.ஐ.
மற்றும் ஸ்ரீராமாபுரம் ஹரிஜனக் காலனி,துப்புரவுத்தொழிலாளர்களுக்கானகாலனி என இயங்கி வருகின்றன.
1952முதல்1955வரை மற்றும் 1986முதல்1992வரை ஆக
இரண்டுமுறை
கோபி நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார்.
1955ல் கோபி நகர் குடிநீர்த் திட்டம் நஞ்சைப் புளியம்பட்டி ரோட்டிலுள்ள இவரது பூமியில்தான் நீரேற்று நிலையம் அமைத்து குடிநீர் கொண்டுவரப்பட்டது.
இவ்வாறாக கோபி நகரம் மற்றும் அனைத்து தரப்பு சமூகத்தவரும் கணக்கில்லாத பயன்கள் அடைந்தனர்.

இவ்வாறாக சமூகப் பணியாற்றி வந்த தாராள உள்ளம் கொண்ட சுதந்திரப் போராட்டத் தியாகி திரு;லட்சுமண அய்யர் அவர்கள் மறைவு இந்த சமூதாயத்திற்கு பேரிழப்பாகும்.
அய்யர் விருப்பப்படி அவரது இரண்டு கண்களும் தானம் செய்யப்பட்டது
.மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி அய்யர் அவர்கள் இயற்கையின் விதிப்படி இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அன்னாரது புகழ் என்றென்றும் மாறாது...இனியொரு தியாகி இவர் போல வரமாட்டார்.
தியாகி லட்சுமண அய்யர் அவர்கள் அவரது சமூகசேவையின் பயனாக நமது கோபி வட்டாரம் மிகவும் பயனடைந்துள்ளது.
மரியாதைக்குரிய தியாகி அவர்கள் நமது நினைவில் நீங்காது இருக்க வேண்டும் என அவரை வணங்கிடுவோமாக..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக