கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்படன் வரவேற்கிறோம்.
சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் சார்பாக மாணவக்குழந்தைகளுக்கு தமிழ்மொழியில் வளம்பெறுவதற்கான தனிப்பயிற்சிகளை இலவசமாக நடத்தி வருகிறோம். அதற்கான தேடலில் புணர்ச்சி விதிகள்...
நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம்.
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்படன் வரவேற்கிறோம்.
சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் சார்பாக மாணவக்குழந்தைகளுக்கு தமிழ்மொழியில் வளம்பெறுவதற்கான தனிப்பயிற்சிகளை இலவசமாக நடத்தி வருகிறோம். அதற்கான தேடலில் புணர்ச்சி விதிகள்...
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...
ஆப்ரகாம் லிங்கன் தன்னுடைய மகனின்
பள்ளி ஆசிரியருக்கு எழுதிய அற்புதமான கடிதம்
அனைவருமே படிக்கவேண்டிய கடிதம்
அன்பு மிக்க ஆசிரியருக்கு,
எனது மகன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது
எல்லா மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல. ஆனால் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்… ஒவ்வொரு போக்கிரி உள்ள இடத்திலும் ஒரு வீரன் உண்டு; ஒவ்வொரு சுயநலமான அரசியல்வாதி உள்ள இடத்திலும் ஒரு தன்னலம் கருதாத தலைவன் உண்டு. ஒவ்வொரு பகைவனுக்கு இடையிலும் ஒரு நண்பன் உண்டு.
இதற்குக் காலம் அதிகம் எடுத்துக் கொள்ளும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களால் முடியுமானால் அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நாம் ஈட்டியது ஒரு டாலர் என்றாலும் கண்டெடுத்த ஐந்து டாலர்களைக் காட்டிலும் அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவனை விலகி இருக்கச் சொல்லுங்கள்.
மனம்விட்டு சிரிப்பதன் ரகசியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நயவஞ்சகர்களை எளிதில் அடையாளம் காணவும் ஆரம்பத்திலேயே அவன் கற்றுக் கொள்ளட்டும்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். மேலும், வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரடர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி அளியுங்கள்.
கும்பலோடு கும்பலாகக் கரைந்து போய் விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
எல்லா மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என்றாலும் அதையெல்லாம் வடிகட்டி நல்லவற்றை மட்டுமே பிரித்து எடுத்துக் கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.
கண்ணீர் சிந்துவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
நம் திறமையையும், அறிவாற்றலையும் விற்பதில் தவறே இல்லை; ஆனால் அது நமது மனசாட்சியையும் ஆன்மாவையும் பணயம் வைப்பதாக இருந்து விடக்கூடாது என்பதை அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
பெருங்கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை அளியுங்கள்.
அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் கொடுத்து மற்றவர்களைச் சார்ந்திருக்க வைத்து விட வேண்டாம். ஏனென்றால் புடம் போட்ட இரும்பு மட்டுமே மிகச் சிறந்ததாக மாறுகிறது.
தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அதே வேளையில்தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அவன் தன்மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் மகத்தான நம்பிக்கை கொள்வான்.
இது ஒரு மிகப் பெரிய சவால்தான்; இருந்தாலும் இதில் உங்களுக்குச் முடிந்ததையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுத்து விடுங்கள்.அவன் மிக நல்லவன், எனது அன்பு மகன்.
ஆப்ரஹாம் லிங்கன்.
2.1 இதழ்கள்
பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம்.
2.1.1 இதழ்களின் வரையறை
உலக ஆங்கில என்சாட்ரா அகராதி பின்வருமாறு இதழ்களை வரையறை செய்கிறது:
செய்திகளைச் சேகரிப்பதும், சேகரித்த செய்திகளைச் செம்மையாக்கி, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முதலிய தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் பிற இலக்கிய வகைகளாகவும் வெளியிடுவதும் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வன இதழ்கள் என்று உரைக்கப்படுகின்றது. தகவல் தொடர்புச் சாதனங்களின் வழி இலக்கிய வகைமைகளாகச் செய்திகளைத் தனித்த நடையில் எழுதுவதும் வெளியிடுவதும் ஆகிய செயல்கள் முதலியவற்றை மேற்கொள்வனவற்றையும் இதழ்கள் எனலாம். இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் வகைப்படுத்தி வரையறுக்கலாம். சான்றாக நாள்தோறும் வெளியாகும் இதழ்களை நாளிதழ்கள் எனலாம்.
2.1.2 இதழ்களின் வகைகள்
இதழ்கள் பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலும், இடம்பெறும் செய்திகள் மற்றும் யாருக்காக வெளியிடப்படுகின்றன என்ற அடிப்படையிலும், தர அடிப்படையிலும் (Quality) வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்களின் உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபடுத்தி வகைகளாக்கப்படுகின்றன.
பெரும்பாலும் இதழ்கள் வெளியாகும் காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் வெளியானால் நாளிதழ் என்றும், வாரந்தோறும் வெளியானால் வார இதழ் என்றும், மாதந்தோறும் வெளியானால் மாத இதழ் என்றும், ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ் என்றும் அழைக்கப்படுகின்றன.
கால அடிப்படையிலான இதழ்களின் பகுப்பை வரைபடம் மூலம் விளக்கலாம். 
வெளியாகும் செய்திகள் மற்றும் எவ்வகையான வாசகர்களுக்காகப் பிரசுரமாகின்றன என்ற அடிப்படையில் இதழ்களைப் பகுக்கலாம். (1) தரமான இதழ்கள் (2) பொது மக்கள் இதழ்கள் (3) நச்சு இதழ்கள் எனப் பிரிப்பர்.
துறை சார்ந்த ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என்றும், பொழுதுபோக்கிற்காகப் பொது மக்கள் படிக்கும் இதழ்களைப் பொது மக்கள் இதழ்கள் என்றும் படிப்பவர்களின் உள்ளத்தை நஞ்சாக்கும் இதழ்களை நச்சு இதழ்கள் என்றும் வரையறுக்கலாம்.
இதழ்களில் இடம் பெறும் செய்திகள் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் இதழ்களை வரையறைப்படுத்தலாம். அதாவது வெளியிடப்படும் செய்திகள் மற்றும் படைப்புகள் எதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்ற அடிப்படையில் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான பகுப்பு மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளமையைப் பாடத்தின் போக்கில் காணலாம்.
2.1 இதழ்கள்
பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம்.
2.1.1 இதழ்களின் வரையறை
உலக ஆங்கில என்சாட்ரா அகராதி பின்வருமாறு இதழ்களை வரையறை செய்கிறது:
செய்திகளைச் சேகரிப்பதும், சேகரித்த செய்திகளைச் செம்மையாக்கி, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முதலிய தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் பிற இலக்கிய வகைகளாகவும் வெளியிடுவதும் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வன இதழ்கள் என்று உரைக்கப்படுகின்றது. தகவல் தொடர்புச் சாதனங்களின் வழி இலக்கிய வகைமைகளாகச் செய்திகளைத் தனித்த நடையில் எழுதுவதும் வெளியிடுவதும் ஆகிய செயல்கள் முதலியவற்றை மேற்கொள்வனவற்றையும் இதழ்கள் எனலாம். இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் வகைப்படுத்தி வரையறுக்கலாம். சான்றாக நாள்தோறும் வெளியாகும் இதழ்களை நாளிதழ்கள் எனலாம்.
2.1.2 இதழ்களின் வகைகள்
இதழ்கள் பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலும், இடம்பெறும் செய்திகள் மற்றும் யாருக்காக வெளியிடப்படுகின்றன என்ற அடிப்படையிலும், தர அடிப்படையிலும் (Quality) வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்களின் உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபடுத்தி வகைகளாக்கப்படுகின்றன.
பெரும்பாலும் இதழ்கள் வெளியாகும் காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் வெளியானால் நாளிதழ் என்றும், வாரந்தோறும் வெளியானால் வார இதழ் என்றும், மாதந்தோறும் வெளியானால் மாத இதழ் என்றும், ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ் என்றும் அழைக்கப்படுகின்றன.
கால அடிப்படையிலான இதழ்களின் பகுப்பை வரைபடம் மூலம் விளக்கலாம். 
வெளியாகும் செய்திகள் மற்றும் எவ்வகையான வாசகர்களுக்காகப் பிரசுரமாகின்றன என்ற அடிப்படையில் இதழ்களைப் பகுக்கலாம். (1) தரமான இதழ்கள் (2) பொது மக்கள் இதழ்கள் (3) நச்சு இதழ்கள் எனப் பிரிப்பர்.
துறை சார்ந்த ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என்றும், பொழுதுபோக்கிற்காகப் பொது மக்கள் படிக்கும் இதழ்களைப் பொது மக்கள் இதழ்கள் என்றும் படிப்பவர்களின் உள்ளத்தை நஞ்சாக்கும் இதழ்களை நச்சு இதழ்கள் என்றும் வரையறுக்கலாம்.
இதழ்களில் இடம் பெறும் செய்திகள் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் இதழ்களை வரையறைப்படுத்தலாம். அதாவது வெளியிடப்படும் செய்திகள் மற்றும் படைப்புகள் எதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்ற அடிப்படையில் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான பகுப்பு மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளமையைப் பாடத்தின் போக்கில் காணலாம்.
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு
வருகைபுரிந்துள்ள இணையதள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
உலகின் முதல் தொழிற்நுட்ப வல்லுநர் மண்ணை நயம்பட பிசைந்து பக்குவமாக்கி மட்பாண்டங்களையும்,உருவங்களையும் வடிவமைக்கும் மட்பாண்டத்தொழிலாளர்தாங்க. அதனால்தாங்க சங்க இலக்கியமான புறநானூற்றுப்பாடல்களில் கோவே என அழைக்கப்படுகின்றனர்.
இதில் தனிச்சிறப்பு என்னவெனில் உலகத்திலேயே மட்பாண்டம் செய்வோரை அரசனுக்கு இணையாகப் போற்றி கொண்டாடியது சங்க இலக்கியத்தமிழ்நூல்கள்தாங்க.
கோ என்றால் தலைவன் எல்லாவற்றுக்கும் மேலானவன்,உயர்ந்தவன் என்று பொருள்.தலைவன் இருக்கும் இடம்தான் கோயில். அதன்பொருள் வருகின்ற சொற்கள் எல்லாம் கோ,கோன்,கோட்டை என வரும்.இது ஆளுமையுடைய , ஆற்றலுடைய, அதிகாரமுடைய அதனால்தாங்க கடவுள் வழிபடும் இடத்தை கோவில் அல்லது கோயில் என்கிறோம்.
நமது முனோர்களின் வாழ்வியல் மற்றும் வரலாற்றுச்சான்றுக்கு ஆதாரமாக விளங்குபவை...
(1)அகழ்வாராய்ச்சி,
(2) கல்வெட்டுகள் ஆராய்ச்சி,
(3) செவிவழிச்செய்திகள்,
(4) சங்கத் தமிழ் இலக்கியங்கள்...
ஒரே நிகழ்வு, ஒரு சாவு, ஒரே போன்ற துயரம், அதனால் ஒரே போன்ற கோரிக்கை. அதிலும் ஓன்று போலவே தொடங்கும் இரண்டு பாடல்கள், இரண்டும் மரணத்தைப் பற்றிப் பேசுகிறது.இரண்டிலும் மண் வினைஞர்களான மட்பாண்டத்தொழில் செய்வோரை தலைவனாக விளிக்கும் ஓரசைச்சொல்லான 'கோ' என அழைத்து கோரிக்கை விடுக்கின்றனர்.ஏனென்றால் மன்னனுக்கும் பானை செய்பவன் குயவனே, சாமான்யனுக்கும் பானை செய்பவன் குயவனே.... சங்க இலக்கியத்தில் இறையாண்மைக்குத்தலைவனாக போற்றப்பட்டவன்..ஆன்மீகத்துக்குத் தலைவனாக போற்றப்பட்டவன்...(அன்றாட வாழ்க்கையில் திருவிழாவினை மக்களுக்கு அறிவிப்பவனாகவும்இருந்துள்ளான்) உலகத்தில் சிறந்த விஞ்ஞானியாக அன்றாடம் மட்பாண்டம் செய்வோன் இருந்துள்ளான்.சுரையில் தண்ணீர் கொண்டுசெல்லும்நிலைக்கு மாற்றாக மண்பானை செய்து உலக நாகரீகத்துக்கு முன்னோடியாக இருந்துள்ளான்.சிந்துச்சமவெளியில் கட்டிடங்கள் எல்லாம் சுட்ட செங்கற்களால் ஆக்கப்பட்டிருந்தன.அனைத்து செங்கள்களும் ஒரே அளவில் சிறிதளவும் பிசகாமல் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன.அவ்வாறு மூதறிஞனான குயவனை சங்கஇலக்கியத்தமிழ்ச்சமூகம் தலைவனாக கொண்டாடப்பட்டு வந்த நிலையை அதன்பின்னர் வந்த கி.பி.7நூற்றாண்டுகாலமான வேதகாலத்தில் புறக்கணிக்கப்பட்டு தூற்றப்பட்டனர்.சிந்துவெளி நாகரீகத்தில் மிக உயர்வாகப்போற்றப்பட்ட குயவன் வேதகாலத்தில் சூத்திரனாக மாற்றப்பட்டு சரிந்துவிழச்செய்துவிட்டனர்.ஆக நாம் மன்னர் வரலாறு மட்டும் தெரிந்துகொண்டால் போதாது.மக்களின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.அதற்கு சங்க இலக்கியங்களை வாசிக்கவேண்டும். இனி கலம்செய் கோவே என குயவனை போற்றிய சங்க இலக்கியப்பாடல்கள் இரண்டினை பார்ப்போம். |
சங்கத்தமிழ்இலக்கிய நூலான புறநானூற்று நூல் 228 வது பாடலில் புலவனுக்கு ஆதரவளித்த அரசன் இறந்து போகின்றான்.அதனால் அந்தப்புலவன் 'கலம் செய் கோவே' என குயவனிடம் கீழ்கண்டவாறு கோருகிறான்.
புறநானூறு 228
பாடியவர்: ஐயூர் முடவனார்,
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,
திணை: பொதுவியல்,
துறை: ஆனந்தப் பையுள்.
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
5. அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
10. கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை
15. மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?
இறந்த மன்னன் அதாவது நாட்டின் தலைவனுடைய பெருமையை புலவர் பாடத் தொடங்குகிறார். எப்படிப்பட்ட தலைவன் இவன் தெரியுமா ? நிலப்பரப்பு முழுவதும் பரந்து விரிந்த படையின் தலைவன் இவன், புலவர்கள் பாடும் பொய்யே இல்லாத புகழ் பெற்றவன், புகழில் வானில் கதிர் வீசி ஒளிரும் ஆதித்யனுக்கு சமமானவன், செம்பியன் ( சோழ ) குலத்தில் பிறந்தவன். யானையின் மீது வலம் வரும் நெடுமாவளவன் இவன். இன்று இவன் அமரர் உலகம் சென்றுவிட்டான்,
இருள் கவ்வுவது போல புகையை எழுப்பி நீ இவனுக்கு ஈமத்தாழி செய்யத் தொடங்கி இருக்கிறாயே, இவன் புகழுக்கு ஏற்ற அளவில் தாழி செய்யவேண்டுமென்றால் இந்த நிலம் அளவுக்கு சக்கரம் செய்து, மலையளவு மண்ணை வைத்தல்லவா செய்ய வேண்டும். அதனை பெரிய தாழியை, ஈமத்தாழி செய்யும் கோமகனே ! உன்னால் செய்ய முடியுமா ? முடிந்தால் அத்தனை பெரிய தாழியை செய் என்று 'கலம்செய் கோவே' என கோருகிறான்.
இன்னொரு பாடல் 256 வது பாடல்...
தலைவன் இறந்து விடுகிறான். அநேகமாக போரில்தான் அவன் இறந்தது போய் இருக்கவேண்டும். அவனுக்கான இறுதிச் சடங்குகள் தொடங்கப் போகின்றது. அன்றய பழக்கத்தில் அவனை மண்ணில் புதைக்க ஈமத்தாழி செய்யவேண்டும். அப்போது தலைவனை இழந்த தலைவி குயவனிடம் ..
புறநானூறு 256,
பாடியவர்: பெயர் தெரியவில்லை,
திணை: பொதுவியல்,
துறை: முதுபாலை
கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு| பொருள் விளக்கம்... வண்டிச்சக்கரத்தில் உள்ள பல்லிபோல என் வாழ்க்கை அவனை மட்டுமே சுற்றி வந்துள்ளது. அவனில்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன், அதனால் என்னையும் உடன் வைத்துப் புதைக்கும் அளவுக்கு பெரியதாக ஒரு தாழியை செய்து கொடு. அதாவது... வண்டியின் ஆரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு வண்டியும் அதன் ஆரமும் போகும் வழி எது என்பதை அறியாது அது போகும் போக்கில் தானும் ஒட்டிக் கொண்டு சென்ற சிறிய வெண்ணிறம் உடைய பல்லியைப் போலவே இந்தத் தலைவனுடன் நானும் அவனை அன்றி வேறு வெளி உலகம் அறியாது இத்தனை காலம் வறண்ட பல நிலங்களை அவனுடன் ஒட்டிக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக என் வாழ்க்கையையும் கடந்து விட்டேன். இப்பொழுது அவனை இழந்த பின் நான் தனியே வாழ்வது எங்கனம்? ஆகவே அவனுடன் கூடவே எனக்கும் ஒரு இடத்தை அந்தத் தாழியில் இருக்குமாறு அதை அகலமாகச் செய்வாயாக என்கிறாள். இதில் இருக்கும் சோகம் மனதை கலங்க அடிக்கும் ஒரு மாபெரும் சோகம். ஆழியை விடப் பெரிய ஒரு சோகத்தை இத்தனை சிறு வரிகளில் அடைத்துவிட்டிருக்கிறார் புலவர்.... | ||
திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு
திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதில் பிழைகள் இருக்கக்கூடாது என்பதற்காக சைவத்திருமடங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்
திருக்குறள் முதல் பதிப்பு
திருக்குறளின் மூலப் பதிப்புகளுள் தமிழில் மிகத் தொன்மையான பதிப்பாக இன்று நமக்குக் கிடைப்பது கி.பி. 1812-இல் வெளியான
“திருக்குறள் மூலபாடம் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்தது ”
என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும்.
’இலக்கணவிலக்கிய வாராய்ச்சியுடையவர்கலிகிதப் பிழையற வாராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டது’
என்னும் குறிப்புடனும்
‘கலியுகாப்தம் ௪த௯௬ சி. ககு ஆங்கீர ௵ தொண்ட மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம்-மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிக்கப்பட்டது
மாசத் தினச்சரிதையின் அச்சுக்கூடம்.
இ.ஆண்டு ௬௮ளய௨
( 1812 எனத் தமிழ் எண்ணில் தரப்பட்டுள்ளது )
என்னும் குறிப்புடனும்
தலைப்புப்பக்கம் திகழ்கின்றது. இந்நூலுடன் நாலடியார் மூலபாடமும், திருவள்ளுவமாலை மூலபாடமும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன.
மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டுள்ள இப்பதிப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் நூலாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் முதன் முதலாக கி.பி. 1712-இல் தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் ஏற்பட்டது. எனவே, அச்சுக்கூடம் ஏற்பட்டுச் சரியாக ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பதிப்பு நமக்குக் கிடைத்துள்ளது.
‘வரலாறு’ என்னும் தலைப்பில் அந்நூல் தரும் செய்தி வருமாறு.
‘கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையினியற்றிய – இலக்கண விலக்கியங்களாகிய- அரிய நூல்களெல்லாம் – இந்நாட்டில் – அச்சிற் பதிக்கும் பயிற்சியின்றிக் கையினாலெழுதிக் கொண்டு வருவதில் – எழுத்துக்கள் குறைந்தும் மிகுந்தும் – மாறியுஞ் சொற்கடிரிந்தும் – பொருள் வேறுபட்டும் பாடத்துக்குப் பாடம்- ஒவ்வாது பிழைகள் மிகுதியுமுண்டாகின்றவால் – அவ்வாறு பிழைகளின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி – அச்சிற் பதித்தலை வழங்குவிப்பதற்கு உத்தேசித்து – நூலாசிரியர்களுள் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார ருளிச் செய்த – அறம் பொரு ளின்ப மென்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்கவுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் – முனிவர்க ளருளிச் செய்த நீதி நூலாகிய நாலடி மூலபாடமும்- இப்போதச்சிற் பதிக்கப்பட்டன’
பதிப்பு நெறிகள்
இந்நூலின் அச்சிற்பதிப்பதற்கு முன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்தப் பகுதி எடுத்துரைக்கும்
“ இவை அச்சிற்பதிக்குமுன் தென்னாட்டில் பரம்பரை – ஆதீனங்களிலும் வித்வ செனங்களிடத்திலுமுள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்குமி ணங்கப் பிழையற- இலக்கண விலக்கிய வாராய்ச்சியுடையவர்களாலா ராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டன.
இந்தக் குறிப்பு திருக்குறளின் அனைத்துச் சுவடிகளையும் தொகுத்துப் பார்த்த செய்தியை அறிவிக்கும்
சுத்த பாடங்களைத் தீர்மானிப்பதற்குத் தனி ஒருவரின் முயற்சி பெரிதும் பயன் தராது; எனவே அறிஞர் குழு கூடி முடிவெடுத்தமையும், அவ்வாறு எடுத்த முடிவையும் பல்வேறு அறிஞர்களுக்கு அன்னுப்பி கருத்துரை பெற்றதையும் முதல் பதிப்பின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.
“இஃதுண்மை பெற – திருப்பாசூர் முத்துசாமிப் பிள்ளை, திருநெல்வேலிச் சீமை – அதிகாரி – ம. ராமசாமி நாயக்கர் முன்னிலையி லன்னாட்டிலிருந் தழைப்பித்த சுத்த பாடங்களுட னெழுதி வந்த வரலாறு. ”
” இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார ருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் – நாலடியார் மூலபாடமும் திருவள்ளூவ மாலையும் – ஆக – மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள்- உரை பாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் – இலக்கண விலக்கியங்களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடந்தீர்மானஞ் செய்து – ஓரெழுத்து ஓர்சொல் நூதனமாகக் கூட்டாமற் குறையாமல னெக மூல பாடங்களுரைப் பாடங்களுங் கிணங்கனதாகத் தீர்மானம் பண்ணிய ந்தப்பாடம் பார்த்தெழுதிச் சரவை ( பிழை )பார்த்த பாடமாகையாலும் – அந்தப்படி தீர்மானம் பண்ணி யெழுதின பாடமென்பதும் – இவடங்களலிருக்குந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்றோன்றப்படும் ஆகையாலும் பாடங்களி லெவ்வளவேனுஞ் சந்தேகப்பட வேண்டுவதினன்று –
இப்படிக்கு
திருநெல்வேலி
அம்பலவாணக் கவிராயர்.”
இந்தப் பாடங்களை இவடம் வந்திருந்த திருவாவடுதுறை – ஆதீன வித்துவான்- அம்பலவாணத் தம்பிரான் சீர்காழி வடுகநாத பண்டாரம் இவர்களாலு மறுபடி கண்ணோட்டத்துடனா ராயப்பட்டன”.
எனவே பல்வேறு அறிஞர் குழாம் கூடி மூலபாடம் தெளிந்த முயற்சி இவற்றால் புலனாகும்.
—————————————————————————————————————————————————————————————
”இது பொத்தகம் கலியுகாப்தம் 4900-க்கு ஆங்கிரச தொண்டை மண்டலம் சென்னைப் பட்டணத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. மாசத் தினச் சரிதையின் அச்சுக்கூடம், ஆண்டு 1812. திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் பிழைதீர்த்துச் சென்னைப் பட்டினத்துக்கு அனுப்புவிச்சு, அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற்பதித்த காகிதப் பொத்தகத்தை ஆழ்வார் திருநகரியில், தேவர்பிரான் கவிராயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேடு எழுதியிருப்பது மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாணக் கவிராயரிடத்தில் தீர்மானமானது. ஆழ்வார் திருநகரியில் சோதித்தது 999 தை மீ……. நம்முடைய ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது
என்னும் குறிப்பினால் அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பிலும் மூலபாடங்களைத் திருத்தி மீண்டும் பதிப்பாசிரியருக்கே அனுப்பித் தீர்மானம் செய்த பதிப்பு வரலாறு தெரிய வருகின்றது. பிழையான பாடங்கள் நூலில் புகுந்து விடக்கூடாது என்னும் உயரிய நோக்கம் இதனால் தெளிவாகும். இவ்வோலைச் சுவடியில் பிழை திருத்தங்கள் பற்றி விரிவான குறிப்புகள் இருப்பதுமல்லாமல் அட்டவணைப்படுத்தியும் எழுதியுள்ளனர்.
அதிகாரம், குறள், ஆழ்வார்திருநகரி ஏடு, அச்சடி-பிழை -என்னும் நான்கு தலைப்புகளின் கீழ் அமைக்கப்ப்பட்டுள்ளது. எனவே, இச்சுவடி “திருக்குறள் பாட பேத ஆராய்ச்சி ஏடு” எனலாம்.
திருக்குறளுக்குக் கிடைத்த முதல் அச்சுப்பதிப்பு நூலிலேயே, பதிப்பு நெறிகள், குறித்த பல அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்னையோர் ஒரு நூலினைப் பதிப்பிக்குமுன் மேற்கொண்ட குழு முயற்சிகள் புலனாகின்றன. அச்சு நூலினும் வரும் பிழைகளைக் களைகின்ற ஆய்வு நெறி “பாட பேத ஆராய்ச்சி ஏடு” ஒன்றினாலும் நமக்குத் தெளிவாகும்.
—————————————————————————————————————————————————————————————
1.ஆ.விநாயகமூர்த்தி, மூலபாட ஆய்வியல்.
2. திருக்குறள் மூலபாடம் ( 1812 ) பக்கம் 2
3. சரவை – எழுத்துப்பிழை ( தமிழ்ப் பேரகராதி தொகுதி 3. பக்கம் 1315 )
4. கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச் சுவடிகள் ( மு. சண்முகம் பிள்ளை & இ.சுந்தரமூர்த்தி ) பக்கம் 30
———————————————————————————————————————————————
வெள்ளி விழா மலர் , 1970-1975 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
கட்டுரை எண் 31. திருக்குறள் முதல் பதிப்பு
பேராசிரியர் டாக்டர் இ.சுந்தரமூர்த்தி
தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம் ( 1995 )
ஒரு மொழியில் எழுதப்பெற்ற எல்லாப் பனுவல்களையும் அம்மொழியைப் பேசும்/ எழுதும் மனிதர்கள் வாசித்து விடுவதில்லை; தங்கள் வாழ்வியலுக்குத் தேவையென ஏற்றுப் பயன்படுத்திக்கொள்வதுமில்லை. அவரவர் விருப்பம், அவரவர் தேவை, அவரவர் பயன்பாடு போன்றனவே அவரவர் மொழியில் எழுதப்படும் பனுவல்களை வாசிக்கச் செய்கின்றன; பயன்படுத்தச் சொல்கின்றன; கொண்டாடவும் தூண்டுகின்றன. அனைத்து வகையான அறிவுத்துறைப் பனுவல்களுக்கும் சொல்லப்படும் இக்கருத்துநிலை இலக்கியப் பனுவல்களுக்கும் பொருந்தும் என்பதை ஒருவர் மறுத்து விடமுடியாது. அதே நேரம் ஒரு மொழியில் தோன்றிய சிலவகைப் பனுவல்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன; பேசப்படுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இலக்கியப்பனுவல்கள் பலதரப்பினரிடமும் அறிமுகம் பெறுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் கிடைக்கும் பனுவல்களில் திருக்குறள் அப்படியானதொரு பனுவலாக இருக்கிறது. ஆகவே திருக்குறளைத் தமிழர்கள் திரும்பத்திரும்ப மறுவாசிப்புச் செய்கிறார்கள். கொண்டாடுகின்றார்கள். இக்கட்டுரை திருக்குறள் மறுவாசிப்பு செய்யப்படுவதின் காரணங்களையும் அதனைத் தொடர்ந்து,பல தளவாசிப்புகள் ஏன் தேவை என்பதையும் முன்வைக்கிறது. அத்துடன் அப்படியான வாசிப்புக் கொண்ட இரண்டு கட்டுரைகளையும் இணைத்துத் தருகிறது.
உலகப் பரப்புக்குள் ஊடாட்டம்
ஒரு மொழியில் கூடுதல் கவனம் பெறும் பனுவல்களை அம்மொழி பேசும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கான வேலைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள நினைக்கிறார்கள். தனிநபர்களாக மேற்கொள்ளப்படும் பணிகளோடு, அரசும் பொறுப்பேற்றுச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அரசு அமைப்புகளிடம் அத்தகைய கோரிக்கையை வைக்கும்போது சொந்தமொழி பேசுகின்றவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணிகளோடு, உலக மக்களுக்கும் கொண்டுபோய்த் தரவேண்டும் என்ற விருப்பமும் வெளிப்படுகிறது. அதன் மூலம் தனது மொழி உலகத்தவர்க்குத் தந்த கொடை இது எனக் காட்ட நினைக்கிறார்கள்.