17 அக்டோபர் 2023

kolappalur book fair -2023 oct 14 & 15

   kolappalur book fair - 2023 கொளப்பலூர் புத்தகத்திருவிழா-2023

மரியாதைக்குரியவர்களே, 

    வணக்கம்.ஈரோடு மாவட்டம் கொளப்பலூரில் முதன்முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா-2023 மற்றும் ஓவியக்காட்சி நடைபெற்றது.

ஒவ்வொரு நிகழ்வும் மிகச்சரியான நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

அடுத்தபக்கத்தில் விரிவாக காண்போம்.










தொடரும்.....

27 செப்டம்பர் 2023

KOLAPPALUR BOOK FAIR-2023

 

கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2023

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 



23 செப்டம்பர் 2023

23-09-2023 சனிக்கிழமை கொளப்பலூர்புத்தகத் திருவிழா-2023 மூன்றாவது ஆலோசனைக்கூட்டம்.

 


மரியாதைக்குரியவர்களே,

                  வணக்கம்.

                               இன்று காலை 10 மணியளவில் கொளப்பலூர் மஞ்சரி தேனீ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருமிகு.M.G. K.P.முத்துசாமி அவர்கள்,திருமிகு.ராமன் அவர்கள்,ஜவஹர்ராஜா அவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டத்தில்கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2023 இருநாட்களும் நடத்துவதற்கான  செயல்பாடுகளுடன் நிதியாதாரம் பற்றிய ஆலோசனையும் நடத்தப்பட்டது.

                         அறிமுக துண்டறிக்கை 2000 இருபக்க பிரிண்ட் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பாக அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது.


                          விளம்பர பேனர் 2அடி 3அடி அளவுபேனர் 20 எண்ணிக்கை கோபிசெட்டிபாளையம்  சஞ்ருத் தையல் மெஷின்கள் சேல்ஸ் & சர்வீஸ் நிறுவனத்தார் சார்பாக அச்சிடப்பட்டு ஆட்டோக்களிலும் கொளப்பலூர் சுற்றுவட்டார கிராமங்களிலும் கட்டப்பட்டது.


2அடி 3அடி அளவுள்ள பேனர் கூடுதலாக 20 எண்ணிக்கை கோபிசெட்டிபாளையம் ஸ்ரீராம் பேஷன்ஸ் பாய்ஸ்&மென்ஸ் விளம்ரதாரர் சார்பாக  பிரிண்ட் போட்டு வழங்கி  உதவினர்.

                                10அடி 10அடி விளம்பர பேனர் ஒன்று கொளப்பலூர் பேருந்து நிலையத்தில் கட்டுவதற்கு MGR கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழிக்கடை  JJ பட்டாசுக்கடை உரிமையாளர் திருமிகு தங்கராசு அவர்கள் உதவி பெறப்பட்டது.


10அடி 10அடி விளம்பர பேனர் கூடுதலாக வசந்தம் ஆயில்மில் நிறுவனத்தார் வழங்கினர்.

                         விளம்பர துண்டறிக்கை 4000எண்ணிக்கை இருபக்க பிரிண்ட் திருமிகு. இராம. இளங்கோவன் அவர்களது மலர் மருத்துவமனை மற்றும் மலர் மருந்தகம் சார்பாக அச்சிடப்பட்டு பெறப்பட்டது.


             கொளப்பலூர் வாசிக்கிறது பேனர் ஒன்று கொளப்பலூர் ஆட்டோ நண்பர்கள் சார்பாக அச்சிடப்பட்டு தயாராக உள்ளது.


இன்னும் பல அச்சிடல்பணிகள் மயில் ஆப்செட் அச்சகத்தில் நடைபெற்று வருகின்றன.விரைவில்வெளியிடப்படும்.



12 செப்டம்பர் 2023

கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2023 ஆலோசனைக்கூட்டம்.

   


வாசகர் வட்டம் & சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும்
                  கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2023
நாள் ;14-10-2023 சனிக்கிழமை மற்றும் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை
 தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை.
ஓவியக் கண்காட்சியும் நடைபெறும்.
இடம்; J.S.மஹால்,கொளப்பலூர்.
தினசரி மாலை 6 மணிக்கு சிறப்புரைகள் நடைபெறும்.


இன்று மாலை 6 மணிக்கு கொளப்பலூர் நாடார் மஹாஜன சங்கத்தின் புதிய கட்டடத்தில் 2வது ஆலோசனைக்கூட்டம் திருமிகு.M.G.  என்றழைக்கப்படும்K.P. முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஊர் முக்கிய பிரமுகர்களும்,சமூக ஆர்வலர்களும்,கொளப்பலூர்  நூலக வாசகர் வட்டமும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



 கடந்த 5-9-2023 செவ்வாய்க்கிழமைமாலை 6 மணிக்கு கொளப்பலூர் நாடார் மஹாஜன சங்கத்தின் பழைய கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் ஒன்பது  தீர்மானங்களை C.பரமேஸ்வரன் அவர்கள் வாசித்தார்.நிகழ்விலுள்ள குறைகள் மற்றும் ஆலோசனை கேட்டு விவாதம் செய்யப்பட்டது. திரு.பார்த்திபன் அவர்கள் கொளப்பலூர் கிளை நூலக வாசகர்கள் பற்றிய அறிக்கை வாசித்து  கூட்டத்தில் ஒப்புதல் பெற்றார்.
நிறைவாக திரு.ராமன் அவர்கள் நன்றிகூறினார்.
இன்றைய ஆலோசனைக்கூட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாக சிலரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. திரு. சிவராஜ் அவர்களின் அறக்கட்டளையின் பெயர் ( M.சின்னச்சாமி கொத்துக்கார கவுண்டர் அறக்கட்டளை,கொளப்பலூர்..நிர்வாகம் திரு.K.C.சிவராஜ்   S.ஈஸ்வரிதம்பதியினர் ) சேர்க்கப்பட்டது.
அரசு உயர்நிலைப்பள்ளி, ஓடக்காட்டூர் என்ற பள்ளியின் பெயரும் சேர்க்கப்பட்டது. 





31 ஆகஸ்ட் 2023

தாளவாடி கிளை அரசுப் பேருந்து ஓட்டுநரும், சமூகநலப்பணிகளும்...

விரைவில் சுயசரிதை (தொடராக)......

 



 





 


 மரியாதைக்குரியவர்களே,


      வணக்கம்.  கடந்த 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்க கழகம்,ஈரோடு மண்டலம், தாளவாடி கிளையில் ஓட்டுநராக பணியில் சேர்ந்து திரு. சாகுல் அமீது நடத்துநருடன் தாளவாடி கொங்கள்ளி தலமலை சத்தி கோடிபுரம் தங்கல் பேருந்து  TN 33 N 0051 க்குபதிலாக மாற்றுப் பேருந்து எண்TN 33/ N 0066 ல் பணியினை தொடங்கினேன்.1993 ஆண்டுகளில் தாளவாடி மிகவும் பின்தங்கிய வட்டாரம். அரசுப் பேருந்துகள் மட்டுமே சேவை செய்து வந்தன. பள்ளி வேலைகளில் கூரைமீது மாணவர்களை ஏற்றி போக்குவரத்து செய்த கடினமான காலம் .பேருந்தின் அனுமதிக்கப்பட்ட  அளவு 55 ஆக இருந்தாலும் ஒரு தனிநடைக்கு குறைந்தபட்சம் 200பயணிகள்வரை ஏற்றி க்கொண்டு சேவைசெய்த காலம் அது.சாலை வசதி என்பது திரைப்படங்களில்தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.அந்தளவு மோசமான பள்ளங்களும்,குழிகளும்,நிறைந்த பராமரிப்பே பார்த்திடாத  குறுகிய
சாலைகள்.தாளவாடி-பனகஹள்ளி தூரம் 25கி.மீ.பயணநேரமோ ஒன்றரைமணி நேரம்.அந்தளவு மெதுவாக ஓட்டவேண்டிய கட்டாயம்.

(மோட்டார் வாகன சட்டம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ளாமல் சேவை செய்த காலம். மக்களின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்க)

      பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு சமூகத்தை புரிந்துகொள்ளும் அற்புதமான பணி அதுவும் தாளவாடிமலைப்பகுதியில் பேருந்து ஓட்டும் பணி மனநிறைவினை வழங்கிய அற்புதமான பணி.

      தாளவாடி வட்டார பொதுமக்களுக்கும்,அனைத்து பள்ளிகளுக்கும்,மீண்டும் நன்றியினை பதிவு செய்து பெருமையடைகிறேன்....

 சத்தி கிளைக்கு மாறுதலாகி (அங்கும் ஓட்டுநர் பணிதாங்க) சென்றேன்.சத்தி கிளையிலும் சுமார் ஏழு ஆண்டுகள் ஓட்டுர் பணியாற்றிவந்த சூழலில் .நிர்வாக காரணங்களுக்காக மீண்டும் தாளவாடிகிளைக்கே அயல்பணி அடிப்படையில் சத்தி கிளை கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு  தாளவாடிகிளையில் பேருந்து ஓட்டுநர் பணி.அயல்பணியின் சிரமம் மற்றும் குறைபாடு என்னவெனில் மலைப்பிரதேசப் படி இல்லை..ஆனால் எல்லா பேருந்துகளிலும் பணியாற்ற வேண்டும்.

           இந்தச்சூழலிலும் சிக்கல் எழுந்தது.? நான் சத்திகிளையின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு தாளவாடியில் பணிபுரிகிறேன்.ஆதலால் எனக்கு தாளவாடி கிளைக்கே பணி இடமாறுதல் செய்து உதவ வேண்டும்.இல்லையேல் சத்திகிளையிலேயே  பணிபுரிய அனுமதியளித்திட வேண்டும். என  உரிமை கேட்டு விவாதம் செய்து சத்திகிளையிலேயே பணியாற்ற மீண்டும் அனுப்பப்பட்டேன்.மீண்டும் நிர்வாக உத்தரவுப்படி தாளவாடிக்கே அனுப்பப்பட்டு 30 ஆண்டுகள் முழுமையாக பணிநிறைவு செய்து கடந்த 2023 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியுடன் அறுபது வயது கடந்தவனாக பணிநிறைவு அடைந்தேன்.

         இந்த இடத்தில் கிளைமேலாளர்களான  திரு.முருகேசன் BM அவர்கள்,  திரு.நடேசன்BM,அவர்கள்,திரு.தென்னவன்BM அவர்கள்,திரு.ஆறுமுகம் BM இன்னும் சிலர்....இவர்களுக்கு ஜால்ரா பிடிக்காது.அவரவர்பணியினை அவரவர் செய்ய வேண்டும் என்பதில் கடமையாக இருந்த அதிகாரிகள். 

(  நேர்மையாக பணியாற்றிய இன்னும் சில அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டு அவர்களையும் சிக்கலில் ஆளாக்க விரும்பவில்லை)

    இவ்வாறான ஓட்டுநர் பணிக்கு    இடையில் சுமார் பத்து ஆண்டுகளாக அதாவது 2010ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் அவர்களது அறிவுறுத்தல்படி, எழுத்தறிவுஇயக்கம் தொடங்கிய தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்கற்கும் பாரதம் நிகழ்ச்சியில்  திரு.A.P.ராஜூ நடத்துநருடன் பங்கேற்று சமூகப்பணியில் என்னை இணைத்துக்கொண்டு பணிக்கு அப்பால் பத்து ஆண்டுகளாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு சவாலாக ஏற்றுசமூகப்பணிகளோடு ஓட்டுநர்  பணியாற்றினேன்.

       இப்படியான02-02-1993 முதல் 30-04-2023 வரையிலான  முப்பது ஆண்டுகால மலைப்பிரதேச ஓட்டுநர் பணியில் மது,போதை,புகைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தனியாளாக என்று கூறுவதைவிட திரு ராஜூ நடத்துநர் போன்ற சமூக அக்கறையாளர்களின் ஆதரவுகளை போற்றியும்,

    

           எனவே விரைவில் எனது ஓட்டுநர் பணியில் நேர்மையாக ,மக்களுக்காக,பயணிகளுக்காக,மாணவச்செல்வங்களுக்காக அத்தியாவசியபணி சேவகனாக பணியாற்றிய போது எனக்கு சமூகத்தைப்படித்து சமத்துவம் பெறு  என்று வழிகாட்டிய சமூக சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள்,கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ,ஊடக நண்பர்கள், காவல்துறை அதிகாரிகள்,போக்குவரத்துத்துறை அதிகாரிகள்,தனியார் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள், நான் பணியாற்றிய போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றிய மிகச்சில அதிகாரிகள்,உடன் பணியாற்றிய நடத்துநர்கள், பற்றியும் பதிவிட்டு நன்றிக்கடன் செலுத்த உள்ளேன். இனி வருங்காலத்தில் மற்றவர்களுக்கும்  சேவைப்பணி பற்றிய புரிதல் ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் எனது ஓட்டுநர் பணியுடன் சமூக சேவைப்பணி பற்றிய தொடர் விரைவில் எழுத உள்ளேன்.

 

    என்றும் மக்கள் சேவகன்,

செ.பரமேஸ்வரன்,

சத்தியமங்கலம்.

தேதி 31-0802023



16 ஆகஸ்ட் 2023

மீண்டும் வந்தாச்சு

 மரியாதைக்குரியவர்களே,

வணக்கம். 


      நீண்டநாள் இடைவ்ளிக்குப்பிறகு இன்று புத்துணர்வுடன் வலைப்பக்கம் வந்தாச்சுங்க .....இனி தினந்தோறும் எழுதப் போகிறேன்.