12 ஜூலை 2015

parames driver - BEST AWARD-2015

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். 
       20ஜூலை12 ந் தேதி இன்று புன்செய்ப்புளியம்பட்டியில் விடியல் சமூக நல இயக்கம் நடத்திய விடியல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் எனக்கு வழங்கிய விருது.....




என 
அன்பன் 
பரமேஸ்வரன். 
சத்தியமங்கலம்-638402

09 ஜூலை 2015

இந்தியா அடிமை நாடா?

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம். கி.பி.1835ல் வளமிக்க இந்திய திருநாட்டின் பெருமையும் இன்றைய ?????????????????????

   லார்டு மெக்காலே ஆற்றிய உரை
                                   1835 - ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 - ம் தேதியன்று பிரிட்டிஷ் பார்லிமெண்டில் லார்டு மெக்காலே ஆற்றிய உரை இது:
" நான் இந்திய நாட்டை குறுக்கிலும் நெடுக்கிலுமாகச் சுற்றுப் பயணம் செய்து பார்த்துவிட்டேன். 


            எங்கும் ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ நான் காணவில்லை! இந்திய நாடு ஏராளமான செல்வம் கொழிக்கும் நாடு! உயர்ந்த பண்புநலன்கள் கொண்ட நாடு! சிறந்த மனநலமும், குணநலமும் கொண்ட மக்கள். இவ்வளவு சிறப்பான நாட்டை நாம் வெற்றி கொள்ள முடியும் என்று நான் எண்ணவில்லை. அவ்வாறு நாம் இந்திய நாட்டை வெற்றி கொள்ள வேண்டுமானால், நாம் முதலில் அந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள, இந்தியர்கள் காலம் காலமாக வளர்ந்து வந்த ஆன்மீகத்தையும், பண்பாட்டையும் உடைத்து எறிய வேண்டும்.

             அதற்காகத்தான்  இந்தியாவின் பழமை மிக்க கல்வி முறையையும் இயல்பான பண்பாட்டையும் நாம் மாற்றி விட வேண்டும் என்று யோசனை கூறுகிறேன். இந்தியர்கள் தங்களது நாட்டையும், தங்கள் மொழியையும் விட இங்கிலாந்து நாடும், ஆங்கில மொழியும் சிறந்தது என நினைக்கும்படி நாம் செய்துவிட்டால் இந்தியர்கள் தங்கள் கௌரவத்தையும் சொந்த கலாச்சாரம், பண்பாடு முதலியவற்றையும் இழந்து விடுவார்கள். பிறகு நாம் எப்படி நினைத்தோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள். அடிமைகளாகிவிடுவார்கள். 
    இந்தியா ஓர் உண்மையான அடிமை நாடு ஆகும்"

               திருடர்களும் பிச்சைக்காரர்களும் இல்லாத நாடு இந்தியத் திருநாடு என்பது 1835 - ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்தில்
பதிவு செய்யப்பட்ட உண்மை. இது வரலாறு. 


          இந்த உரை நிகழ்த்தப்பட்ட 180 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் நிலை எவ்வளவு நலிவுற்று
நாசமாகிப் போய்விட்டது? நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு நாடாளுமன்றத்திலும்
சட்டப் பேரவைகளிலும் உறுப்பினர்களாக இருக்கக் கூடியவர்களில் பல பேர் கொடிய குற்றவாளிகள் என்பது தேர்தல் ஆணையப் புள்ளி விவரம்!

உறவுகள் மேம்பட.......

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
உறவுகள் மேம்பட இந்தப்பதிவு பயனுள்ளதானதாதலால் பகிருகிறேன்.
 
ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -
“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்

அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –

அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !
அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான்.

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.

இறுதிச் சடங்கில்,
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.
மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -
“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.

ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -
“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,

ஆம்,என் இனிய நண்பர்களே.,
இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.
எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.
ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.

கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !
நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வ ு அதிகப்பட உதவும்.
மனிதர்களை மேலும் நல்லவர்களாக
உருவாக்க இது உதவும்.

இந்திய ராணுவம்-வியக்கவைக்கும் தகவல்கள்.

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.இந்திய ராணுவம் பற்றி ......
இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!
1) உயரமான போர்களத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கிறது:: உலகிலேயே உயரமான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்சென் கிளேசியர் (Siachen Glacier) இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 5,000 மீட்டர்களுக்கும் மேலாகும். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இங்கு போரிட்டதுக் குறிப்பிடத்தக்கது.
2) தன்னார்வம் அதிகம்:: உலகிலேயே அதிகமான தன்னார்வ வீரர்கள் கொண்ட ராணுவப்படை இந்தியாவுடையது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
3) மலை பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் செயல்படுவதில் நமது இந்திய ராணுவ வீரர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர்.
4) கடந்த 2013 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய மீட்புப் பணியாகக் கருதப்படும் ஆப்ரேஷன் ராஹத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்கள் நமது இந்திய ராணுவப்படை வீரர்கள். இது, உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக நடந்தது.
5) கேரளத்தில் இருக்கும் எழிமலாக் கப்பற்படை (Ezhimala Naval Academy) தான் இதன் பிரிவில் ஆசியாவிலேயே பெரியது ஆகும்.
6) உலகிலேயே மிகவும் பழையப் படையாக கருதப்படும் மூன்றில் ஒன்றான குதிரைப்படை இன்னமும் நமது இந்திய ராணுவத்தில் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
7) இந்திய ராணுவம் கட்டமைத்த பெய்லி பாலம் தான் உலகிலேயே ராணுவ வீரர்களால் மிக உயரத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும். இது கடந்த 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டமைக்கப்பட்டது ஆகும்.
9) கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் 93,000 எதிர் நாட்டு (பாகிஸ்தான்) வீரர்கள் சரணடைன்ததே, ஓர் போரில் சரணடைந்த வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கை ஆகும்.
10) உலகிலேயே பெரிய ராணுவ பிரிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும், சீனாவும் இருக்கின்றன. நமது நாட்டில் 13,25,000 பட்டாளங்களும், 9,60,000 ரிசர்வ் படைகளும் இருக்கின்றன.
11) அக்னி ஏவுகணை உலகிலேயே சிறந்த ஏவுகணைகளில் இந்தியாவின் அக்னி எவுகனைவும் ஒன்றென்பதுக் குறிப்பிடத்தக்கது.
12) வேகமான ஏவுகணை ப்ராஹ் மோஸ் 2 (BrahMos-2) என்ற நமது ஏவுகணை தான் உலகிலேயே வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.
13) இந்திய ராணுவப்படை கடந்த 1776ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தினால் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது.
14) உலக அமைதிகாக ஐ.நாவிற்கு பங்களிப்பு தரும் பட்டாளங்களில் இந்திய பட்டாளம் தான் பெரியது என்பது பெருமைக்குரியது.

வாட்ஸ்அப் --தெரியாத தகவல்கள்..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
         வாட்ஸ்அப் செயலியின் சிறப்பு அம்சங்களை அறிந்துகொள்வோம்.

வாட்ஸ் அப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்..
1.ஆர்ச்சிவ் சாட்(Archive chat)
இந்த அம்சம் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சாட்டினை தற்காலிகமாக மூடி வைத்து 
அதனை பின்னர் பயன்படுத்த வழி செய்யும்
இதை மேற்கொள்ள நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து 
ஆர்ச்சிவ் சாட் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
 (பரமேஸ்வரன் டிரைவர்)
2.ம்யூட் க்ரூப் சாட் (Mute Group chat)
சில சமயங்களில் க்ரூப் சாட்களின் நோட்டிபிகேஷன்கள் வெறுப்பேற்றலாம்
அது போன்ற நேரங்களில் Menu button - Mute Button - Group Name - க்ளிக் செய்யலாம்.
 
3.லாஸ்ட் சீன் (Last seen)
நீங்கள் கடைசியாக வாட்ஸ் அப் பயன்படுத்திய நேரத்தினை 
வாட்ஸ் அப் தானாகவே காண்பிக்கும்
இதை நிறுத்த Settings-- Account -- Privacy --Last seen Option- க்ளிக் செய்து 
Nobody என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
 
4.ஷார்ட்கட் (Shortcut)
சாட் மெனுவினை அழுத்தி பிடித்தால் 
அவை ஷார்டகட்டாக ஹோம் ஸ்கிரீனில் தெரியும்
ஒரு வேலை சைனோஜென் இயங்குதளத்தினை பயன்படுத்தினால் 
செயலியை டிராக் செய்து தனி ஃபோல்டரில் 
பாஸ்வேர்டு செட் செய்தும் வைத்து கொள்ளலாம்.
 
5.ஆட்டோ டவுன்லோடிங் (Auto Downloading)
வாட்ஸ் அப் மீடியா ஃபைல்கள் தானாக டவுன்லோடு ஆவதை தடுக்க 
Setting -- Chat Setting -- Media Auto Download 
என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.
 
6.குறுந்தகவல் (Message)
நீல நிற அம்பு குறி தெரிந்தால் உங்களது குறுந்தகவல் படிக்கப்பட்டு விட்டது என அர்த்தமாகும்
ஆனால் சரியான நேரத்தினை அறிந்து கொள்ள 
குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.
 
7.பேக்கப் (Backup)
வாட்ஸ்அப் சாட்களை பேக்கப் செய்ய 
Settings--chat settings-- backup conversation Option - க்ளிக் செய்தால் போதுமானது.
லாக் வாட்ஸ்அப் தகவல்களை பாதுகாப்பாக வைக்க 
சந்தையில் கிடைக்கும் செயலிகளை கொண்டு 
வாட்ஸ் அப் செயலியை லாக் செய்து கொள்ளலாம்

8.புகைப்படங்கள் (Photos)
வாட்ஸ் அப் புகைப்படங்களை கேலரி அல்லது கமெரா ரோலில் வைத்து கொள்வது 
சில சிலருக்கு பிடிக்காமல் இருக்கும்
அவ்வாறானவர்கள் புகைப்படங்களை 
வாட்ஸ்அப் செயலி மூலம் மறைத்து வைத்து கொள்ளலாம்.
 
9.போன் நம்பர் (Phone number)
சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை 
UNINSTALL செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்
மாற்றாக Settings -- Account -- Change Number Option-ல் 
புதிய நம்பரை என்டர் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
என அன்பன் 
C. பரமேஸ்வரன் டிரைவர் 
9585600733  சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்)

08 ஜூலை 2015

போதையின் விபரீதம்--நம்ம கோவையிலா?






கோவையில் மது போதையில் பள்ளி மாணவி செய்த அட்டகாசம்புதன்கிழமை , ஜூலை 08, 2015கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாய் பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகள் வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திய போது செல் போனில் செக்ஸ் படம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து நேற்று மதியம் சமூக வளைத்தளங்களில்  3 வயது  சிறுவன் மற்றும் 5 வயது சிறுவனுக்கு மது கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்புக்கு உள்ளாக்கியது.
இந்த பரபரப்புகள் அடங்கு வதற்குள் கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர்  16 வயதான பிளஸ்-2 மாணவி திவ்யா (பெயர் மாற்றப் பட்டுள்ளது).கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சீருடையில் பள்ளிக்கு கிளம்பினார்.இருந்த போதிலும் திவ்யாவுக்கு காதல் தோல்வியால் பள்ளி செல்ல பிடிக்கவில்லை. இதையடுத்து காதல் தோல்வியை சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள -முடிவு செய்தார்.

தனது செல்போனை எடுத்து தோழிகள் 3 பேருக்கு அழைப்பு விடுத்தார். தோழிகளும் திவ்யா அழைத்த பீளமேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு வந்தனர். அங்கு   அவர்களுக்கு திவ்யா மதுவிருந்து கொடுத்தார். பின்னர் திவ்யாவும் அவரது தோழிகளும் அங்கேயே பொழுதை கழித்தனர். தொடர்ந்து மாலையில் மீண்டும் மது அருந்தினர்.
தோழிகள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் மதுவாடை வெளியே தெரியாத  அளவுக்கு அளவாக  குடித்தனர். ஆனால் காதல் தோல்வியில் இருந்த    திவ்யாவோ எதைப் பற்றியு-ம் கவலைப்படாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். போதை தலைக்கேறியதும்  திவ்யாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தோழிகளிடமே தகராறில் ஈடுபட்டார். இதனால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தோழிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி இருந்தனர். நேரம் செல்ல செல்ல திவ்யாவின் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியது.

அவரது தோழிகளில் ஒருவர்  தனது  ஆண் நண்பருக்கு போன் செய்து திவ்யாவின் ரகளை குறித்து விளக்கமாக கூறினார். இதைத் தொடர்ந்து அந்த மாணவர் தனது  பைக்கை எடுத்துக் கொண்டு பீளமேட்டில் உள்ள வணிக வளாகத்துக்கு வந்தார். அங்கு போதையில் இருந்த திவ்யாவை மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினார்.

ஆனால் திவ்யாவோ அந்த வாலிபரை ஆபாசமாக திட்டி மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்தார். இதையடுத்து தோழிகள் 3 பேரும் சேர்ந்து திவ்யாவை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றினர். பின்னர் அந்த மாணவர் திவ்யாவை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதற்காக பீளமேட்டில் இருந்து குறுக்கு பாதையில்  துடியலூர் நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது திவ்யா போதையில் பாட்டுப் பாடியபடி ரகளை செய்து கொண்டே வந்துள்ளார். சேரன் நகர் தாண்டி துடியலூர் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த திவ்யா ரோட்டில் தவறி கீழே விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவர் மோட்டார் சைக்கிளை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு திவ்யாவை எழுப்ப முயன்றார். அந்த மாணவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய திவ்யா போதையில் தகாத வார்த்தைகளால் வசை பாட தொடங்கினார். நடுரோட்டில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் பள்ளி சீருடையில் மாணவி ஒருவருடன் மாணவர் மல்லுகட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவி அருகே சென்று பார்த்த போது தான் அவர்களுக்கு மாணவி போதையில் இருப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்க முயன்றனர். பொதுமக்களையும் காலால் எட்டி உதைத்து ரோட்டில் வட்டமடித்தார். பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி, மாறி ஆபாசம் கலந்த தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார்.

தகவலறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு குவிந்தனர். ஒருவரையும் விடாமால் வளைத்து வளைத்து திட்டிக் கொண்டிருந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் துடியலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் பெண் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.மாணவியின் நிலை கண்டு பதறிய போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர். ஆனால் மாணவியோ போலீசாரை கூட அடையாளம்  தெரியாமல்  தனது வேலையை தொடர்ந்தார்.

சகட்டுமேனிக்கு வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார். அவரிடம் போராடிய போலீசார் இனிவிட்டால் சரிப்படாது என்று கருதி அங்கு இருந்த டாக்ஸி ஒன்றில் திவ்யாவை குண்டு கட்டாக தூக்கி காருக்குள் போட்டனர்.பின்னர் துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.அங்கு போதையை தெளிய வைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் வீட்டு முகவரி மற்றும் பெற்றோரின் செல்போன் எண்ணை பெற்று அவர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

போதையில் இருந்த மகளின் நிலையை கண்டு அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர். போலீசார் திவ்யாவுக்கு அறிவுரைகள் கூறி அவரது நலன் கருதி வழக்கு ஏதும் போடாமல் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 முறை மதுஅருந்தி தகராறில் திவ்யா ஈடுபட்டு உள்ளார். ஆனால் அவை வீட்டுடன் முடிந்து உள்ளதால் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் நேற்று அளவுக்கு அதிகமான போதையால் துடியலூர் பகுதியையே ரணகலமாக்கி விட்டார்.

இந்த சம்பவம் காரணமாக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது இன்று தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பள்ளி பருவத்திலேயே மாணவ, மாணவிகள் தகாத செயல்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர். எனவே பெற்றோர் பள்ளியில் படிக்கும் தங்களது பிள்ளைகளின் செயல்களை கண்காணித்தபடி இருக்க வேண்டும். இல்லை யென்றால் அவர்களிள் எதிர்காலம் சீரழிந்து விடும் என்று கூறினர். 

தின மணி நாளிதழ் செய்தி  கோவையில் பரபரப்பு: போதையில் ரகளை செய்த பள்ளி மாணவி

First Published : 08 July 2015 12:19 PM IST

















                கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர்  16 வயதான பிளஸ்-2 மாணவி .நேற்று சீருடையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்ட்டு தனது  தோழிகள் சிலருடன் பீளமேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு சென்று மது குடித்தார்.
போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தோழிகளிடமே தகராறில் ஈடுபட்டார். இதனால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தோழிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி இருந்தனர். நேரம் செல்ல செல்ல அந்த மாணவியின் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியது. சேரன் நகர் தாண்டி துடியலூர் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த அந்த ரோட்டில் தவறி கீழே விழுந்தார். அவர் காதல் தோல்வியால் தான் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாணவியின் காதலனை அவர் தகாத வார்த்தையில் திட்டி தகராறு செய்துள்ளார். நடுரோட்டில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் பள்ளி சீருடையில் மாணவி ஒருவருடன் மாணவர் மல்லுகட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவி அருகே சென்று பார்த்த போது தான் அவர்களுக்கு மாணவி போதையில் இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்க முயன்றனர். பொதுமக்களையும் காலால் எட்டி உதைத்து ரோட்டில் வட்டமடித்தார்.
பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி, மாறி ஆபாசம் கலந்த தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார்.தகவலறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு குவிந்தனர். ஒருவரையும் விடாமால் வளைத்து வளைத்து திட்டிக் கொண்டிருந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் துடியலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் பெண் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவியின் நிலை கண்டு பதறிய போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.
ஆனால் மாணவியோ போலீசாரை கூட அடையாளம்  தெரியாமல் திட்டியுள்ளர். இதையடுத்து அந்த மாணவியை குண்டு கட்டாக தூக்கி காருக்குள் போட்டு  துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.பின்னர் அவரின் பெற்றோருக்கு  தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
போதையில் இருந்த மகளின் நிலையை கண்டு அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர். போலீசார் அந்த மாணவிக்கு  அறிவுரைகள் கூறி அவரது நலன் கருதி வழக்கு ஏதும் போடாமல் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

05 ஜூலை 2015

சித்த மருத்துவத் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வு கொள்வோம்.

          சித்த மருத்துவமே உணவுக்கும்,மருந்துக்கும் பயனளிப்பவை

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். நம் முன்னோர்களின் தமிழ் மருத்துவமுறைகளை பரப்புரை செய்வதை நோக்கமாக கொண்டு இயன்றளவு சித்த வைத்தியர்களை ஒன்றிணைப்போம்.அனைவரின் முகவரி மற்றும் தொடர்பு எண்களை தொகுத்து அளிப்போம்.
கல் தோன்றி மண் தோன்றா முன்
தோன்றிய மூத்த குடி தமிழ் குடி


என்ற பழமொழிக்கு ஏற்ப  தமிழன் ஆதியில்
கண்டறிந்த மருத்துவமாம் தமிழ் மருத்துவ முறையினை
சித்தர் பெருமக்கள் தங்களின் ஞானத்தால் மென்மேலும்
சீர்படுத்தி வடிவமைத்த "சித்த மருத்துவ" முறையினில்
மனித உடலில் தோன்றும் நோய்களை 4448 -என வகை
பிரித்து இந்த நோய்களை நீக்கும் பொருட்டு மூலிகைகள்,சம்பைச்
சரக்குகள்,உப்பு வகைகள்-25
,பாசான வகைகள்- 64,உலோகங்
கள்-9
,உபரசங்கள்-120,என்று அவைகளைக் கண்டறிந்து சூரணம்,
குடிநீர்,இளகம்,தைலம்,பஸ்பம்,செந்தூரம்,சுண்ணம்,பாசாணக்
கட்டு,களங்கு என்ற மருந்துகளாகவும்
செய்து நமக்கு அளித்து நாட்பட்ட
கொடிய நோய்களையும் இலகுவாக நீக்கும் முறைகளை மனித குல
நலனுக்கென அர்ப்பணித்த மருத்துவ முறைகள் ஏராளம் .

மூலிகைகள் மற்றும் சித்த மருத்துவ முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு
ஏற்படுத்துவதே நமது நோக்கம்...

  என அன்பன்,
C. பரமேஸ்வரன்.செயலாளர்,
மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்.
(நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
          சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு).