27 ஜூன் 2021

எலக்ட்ரானிக்ஸ் ஒரு கலை!....

 


மரியாதைக்குரியவர்களே,

வணக்கம். 

கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

கொரோனா பெருந்தொற்று சமுதாயத்தொற்றாக நம்மை மட்டுமின்றி உலகமக்கள் அனைவரையும் பாடாய்ப்படுத்துகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தியிருத்தி இருப்பதை

பயனுள்ளதாக கழிப்பதற்காக எடுத்த முயற்சிதாங்க மின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றிய அடிப்படை அறிவை வளர்க்கும் செயல்பாடு....

எலக்ட்ரானிக்ஸ் ஒரு கலை...

ஆமாங்க! எலக்ட்ரானிக்ஸ் ஒரு கலைபோல அணுகவேண்டும்.

 மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக்கு  அடிப்படையே மின்சாரம்தாங்க.மின்சாரமும் காந்தமும் உயிரும் உடம்பும்போல..இரண்டும் இணைபிரியாதவர்கள்....

அந்த மின்சாரமும்,காந்தமும் எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்பதை ஆரம்பத்திலிருந்து தெரிந்துகொள்வோம் வாங்க!.

பிரபஞ்சத்திலுள்ள திட,திரவ,வாயு நிலையிலுள்ள அனைத்து பொருட்களுமே  அணுக்களால் ஆனவை...

அவ்வாறான அணுக்களை மேலும் சிதைத்தால் மையப்பகுதியான உட்கருவில் புரோட்டான்களும்,அதே எண்ணிக்கை நியூட்ரான்களும் இருக்கின்றன. உட்கருவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையளவு எலக்ட்ரான்கள்  உட்கருவைச்சுற்றி வெளியே  ஆர்பிட் என்னும் சுழல்தடம் அமைத்து  புரோட்டான்களுக்கு கட்டுப்பட்டு சுற்றி வருகின்றன.

புரோட்டான்கள் பாஸிட்டிவ் சார்ஜ் ஆகவும்,எலக்ட்ரான்கள் நெகட்டிவ் சார்ஜாகவும் ஒன்றுக்கொன்று ஈர்க்கப்பட்டு நிலைகொள்ளுகின்றன.

அதாவது அனைத்துப் பொருட்களிலும் பாஸிட்டிவ் சார்ஜஸ் மற்றும் நெகட்டிவ் சார்ஜஸ்கள் இயற்கையாகவே இருக்கின்றன.நாமாக உருவாக்குவதில்லை .

அந்த பாஸிட்டிவ் சார்ஜஸ்களும் நெகட்டிவ் சார்ஜஸ்களும் சம எண்ணிக்கையில் பொருட்களிலுள்ள அணுக்களில் இருப்பதால் நமக்குப் பயன்படாது.ஆதலால் அணுக்களிலுள்ள எலக்ட்ரான்களை வெளியே கொண்டுவந்தால்தான்  மின்சாரமாக நமக்குப் பயன்படும்.நெகட்டிவ் சார்ஜாக இருந்தாலும் பாஸிட்டிவ் சார்ஜாக இருந்தாலும்  பொதுவாக சார்ஜ் என்றே சொல்கிறோம். அதனை அளவிட கூலும் அலகு பயன்படுத்துகிறோம்.

எலக்ட்ரிகல்ஸ் பொருத்துவரை வோல்ட்டேஜ்,கரண்ட்,ரெஸிஸ்டன்ஸ் இன்ற மூன்று பற்றி நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். 

 முதலாவதாக வேல்ட்டேஜ் எனப்படும் மின்னழுத்தம் பற்றி அறிவோம்.

எலக்ட்ரிகல் பொருத்தவரை   எலக்ட்ரான்களாகிய நெகட்டிவ் சார்ஜ்களை மட்டுமே சார்ஜ் என்றழைக்கிறோம்.

 அ,ஆ, என இரு முனைகளை எடுத்துக்கொண்டால்  அ முனையில் எலக்ட்ரான்களை சேர்த்துக்கொண்டே இருந்தால் தெகட்டிவ் சார்ஜ் அதிகமாகிக்கொண்டே இருக்கும்.அதே நெகட்டிவ் சார்ஜ்-ஐ குறிப்பிட்டளவு வரை மட்டுமே அ என்ற (புள்ளியில்) முனையில்  சேமிக்க முடியும்.இவ்வாறு சேமித்த எலக்ட்ரான்களில் குறிப்பிட்ட எலக்ட்ரான்கள் போக மீதமுள்ள எலக்ட்ரான்கள் இணைவதற்கு....

 ொொடுு்்இ்்ுு ோோ்்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...