12 ஜனவரி 2019

விதைகள் - இதழ் வெளியீடு15-01-2019

அறிவும் ஆனந்தமும் பெருக விதைகள் இதழை வாசியுங்க!!


பொங்கல்விழா,விதைகள் இதழ் வெளியீட்டுவிழா,ஓவியக் கண்காட்சி..

அன்பு வாசகர்களே,
 .


























                                         இன்று காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை
 சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜேம்ஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் விதைகள் இதழ் வெளியீட்டுவிழா,பொங்கல் விழா,ஓவியக் கண்காட்சி நடைபெற்றன.
  விழாவிற்கு விதைகள் இதழின் மதிப்பியல் ஆசிரியர் திரு.இரா.காளியண்ணன்B.Sc.,M.A.,M.A.,M.Ed., மாவட்ட கல்வி அலுவலர் (பணிநிறைவு) அவர்கள் தலைமை தாங்கினார்.
சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் திரு பெருமாள்சாமி அய்யா அவர்களும்,
அரிமா.கு.லோகநாதன் அவர்களும்,
சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் சரவணன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
திரு.யாழினி ஆறுமுகம் விதைகள் வாசகர் வட்டம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
கோபி பசுமை  கார்த்திகேயன் அவர்கள் ஓவியக் கண்காட்சியை திறந்துவைத்தார்.
கவிஞர்.பழ.ஈஸ்வரமூர்த்தி M.A.,M.Ed.,M.Phil.,DTJ அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.
இதழின் நோக்கம் பற்றி சிறப்பாசிரியர் தமிழறிஞர் எழுத்தாளர்.முத்துரத்தினம்B.E., அவர்கள் எடுத்துரைத்தார். எழுத்தாளர்.வா.மணிகண்டன் ,நிசப்தம் அறக்கட்டளை நிறுவனர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விதைகள் இதழை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
'எழுத்தும் ஓவியமே' என்ற தலைப்பில் மாணவப்படைப்பாளர் திரு.கோ.மோ.க.தருண்ராஜா இயற்பியல் இரண்டாம் ஆண்டு,கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவர் ஓவியத்தின் சிறப்பு பற்றி உரையாற்றினார்.உழவுக் கவிஞர் உமையவன் அவரது புகைப்படத்தைப் பார்த்து ஒரு மணி நேரத்தில் அவரைப்போன்றே ஓவியம் வரைந்து காட்டி அசத்தினார்.
தொடர்ந்து......
(1) திரு.தென்னவன் அவர்கள் ,துணை மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பணிநிறைவு,
(2)திரு. ந.பரமேஸ்வரன் இலக்கிய ஆர்வலர் குன்னத்தூர்,
(3)ஈரோட்டிலிருந்து வருகைபுரிந்த கவிஞர் ஈஸ்வரன் அவர்கள்,
(4)திரு.பரமாத்மா பங்களாப்புதூர்,
(5)திரு.அரசுதாமஸ் தலைமையாசிரியர்,கோபி,
(6)திரு.மோகன் கோபி,
(7)திரு.முருகானந்தன் ஆசிரியர்,
 (8)வழக்குரைஞர் சரவணன்சட்ட ஆலோசகர் ,
(9)பசுமை கோபி கார்த்திகேயன்,
(10)அரிமா.கு.லோகநாதன்,
(11)திரு.ஏ.ஜே.அப்துல்ஜப்பார் சைக்கிள்கடை,
ஆகிய சமூக சிந்தனையாளர்களும் வாழ்த்துரை நிகழ்த்தினர். ,
சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி,
 சத்தியமங்கலம் ஜேம்ஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளி,
கோயம்புத்தூர் SGP கல்லூரி,
கோயம்புத்தூர் PSGகல்லூரி,,
கோயம்புத்தூர் SRI SAKTHI கல்லூரி மற்றும்
கோபி கலை அறிவியல் கல்லூரிகளின்
மாணவ,மாணவியரும் பங்கேற்று சிறப்பு செய்தனர்.
திரு.பொன்.பிரபாகரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.நிறைவாக தேசிய கீதம் இயக்கத்துடன்விழா இனிதே நிறைவுபெற்றது.
            
                     பின்னர் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் திரு.ர.கருப்புசாமி அவர்கள் அனுப்பிவைத்த சர்க்கரைப் பொங்கலை சத்தி A.J.ஜப்பார் அவர்கள்  அனைவருக்கும் வழங்கி இன்றைய தமிழ் திருநாளாம்   பொங்கல்விழா கொண்டாடப்பட்டது.

                    மாணவ ஓவியர் திரு.தருண்ராஜா அவர்களின் ஓவியக் கண்காட்சி மதியம் ஒரு மணிவரை நடைபெற்றது.
 வருகிற புத்தகத் திருவிழாவில் விதைகள் இதழ் சார்பாக மாணவ,மாணவியரிடையே பட்டிமன்றம்,பேச்சுப்போட்டி,ஓவியப்போட்டி,செஸ்போட்டி,ஒருநிமிடக்கதை சொல்லும் போட்டி, நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...