26 ஜனவரி 2019

70வது குடியரசு தினவிழா-தாளவாடி




இந்திய அரசியலமைப்பு என்றால் என்ன?
                                           நிர்வாகத்துறை  (Executive)சட்டமியற்றும் முறை(Legislature)நீதித்துறை (Judiciary).
அரசின் இம்மூன்று உறுப்புக்களின் செயல்பாடு மற்றும் அதன் விதிகளை பற்றித் தொகுத்து கூறும் சட்டமே அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.

   ஒரு நாட்டின் அரசைத் தோற்றுவித்து, குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி, அவற்றை உறுதி செய்து, நிர்வாகம், சட்டமியற்றும்துறை, நீதித்துறை போன்ற உறுப்புகளின் அதிகாரங்களை வரையறுத்து உரைப்பதே அரசியலமைப்புச் சட்டமாகும். அரசியலமைப்பு, ஆட்சியின் அமைப்பு பற்றிக் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டம் அவ்வமைப்பின் உறுப்புகள் அவைகளின் பணிகள், அதிகாரங்கள், அவைகள் செயல்பட வேண்டிய முறைகள் பற்றிக் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டமே நாட்டின் அடிப்படைச் சட்டம்.

                      இதன் விதிகளை மீறுமாறு நாட்டின் வேறு எந்த சட்டமும் இயற்ற இயலாது

                                 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம்நாள் , இந்திய அரசியல் சாசனத்தை நாம் ஏற்றுக்கொண்டு நாமே குடியாட்சியை தேர்வு செய்யும் உரிமை பெற்ற நாளாகும்.சுதந்திர தினத்தைவிட குடியரசு தினம்தான் முக்கியமானது.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மக்களை,மக்களால் தேர்வு செய்து மக்களாட்சி நடத்துவதுதான் குடியாட்சி அதாவது குடியரசு  என்ற உண்மை கூற்றுப்படி மக்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப மக்களை ஆட்சியாளராக தேர்வு செய்ய தேர்வு செய்யும் முழு உரிமை பெற்ற நாள் குடியரசு தினமாகும்.மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆட்சி புரிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ள ஐந்தாண்டுகளுக்கும் எப்படி ஆட்சி செய்யவேண்டும் என்பதை நிர்ணயம் செய்வதுதான்  இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.
  உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகநாடு இந்தியாவாகும். இந்தியா கூட்டாட்சி குடியரசு நாடாகும்.உலகிலேயே மிக நீண்ட அரசியலமைப்பு ஆவணம் நமது இந்திய அரசியலமைப்புச் சட்ட ஆவணமாகும்.
1935 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டத்தின் மறுவடிவமாக இது திகழ்கிறது.
 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த  முனைவர் சச்சிதானந்த சின்கா  என்பவர் தலைமையில் இந்திய அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது.சின்கா அவர்களின் கூற்றான  சுதந்திர இந்தியாவுக்கு புதிய வடிவில் இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும் என்ற அறிவுரைப்படி சட்டமேதை  .B.R..அம்பேத்கார் தலைமையில்,கோபாலசாமி அய்யங்கார்,அல்லாடி கிருஷ்ணமூர்த்தி,K.M.முன்ஷி,சையது முகமது சாதுல்லா,மாதவராவ்,T.B.கைதான் அடங்கிய ஏழு சட்ட வல்லுநர்குழு அமைக்கப்பட்டு இந்திய அரசு சட்டம்1935 னை எடுத்துக்காட்டாக க்கொண்டு சுதந்திரம் பெற்ற நமக்கு சாதகமான சட்ட பிரிவுகளை சேர்க்க  உலக நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை எல்லாம் ஆய்வு செய்து நமக்கு வேண்டிய சட்டங்களை சேர்த்தனர்.உதாரணமாக அடிப்படைக்கடமைகள் ரஷிய நாட்டின் அரசியலமைப்பை ஏற்றும்,அடிப்படை உரிமைகள் அமெரிக்கா அரசியலமைப்பினை ஏற்றும்,திருத்தங்கள் தென் அமெரிக்காவின் அரசியலமைப்பினை ஏற்றும்,கூட்டாட்சி முறை கனடா நாட்டின் அரசியலமைப்பினை ஏற்றும், ஐந்தாண்டு திட்டங்கள் ரஷ்யா அரசியலமைப்பினை ஏற்றும்,ஆட்சிமுறையினை இங்கிலாந்தின் அரசியலமைப்பினை ஏற்றும் நமது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அரசியலமைப்புமுறையை இரண்டு ஆண்டுகள்,பதினொன்று மாதங்கள் பதினெட்டு நாட்கள் அயராது உழைத்து இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கி அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு வசம் ஒப்படைத்தனர்.
              நேருஜி அவர்கள் நாம் சுதந்திரம் பெற்ற ஆண்டுக்கு பதினேழு ஆண்டுகள் முன்னரே காந்தியடிகள் பிரகடனம் செய்த சுதந்திர தினமான 1930ஜனவரி 26 ஆம் தேதியை  நினைவுபடுத்தும்வகையில் 1950ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஜனவரி மாதமும் 26ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
 குடியரசு தினத்தன்று இந்திய நாட்டின் முதல் குடிமகனும்,கூட்டாட்சி நிர்வாக குழுவின் தலைவரும்,மத்திய நிர்வாகக்குழுவின் தலைவரும்,முப்படைகளின் தளபதியுமான   குடியரசுத் தலைவர் அவர்கள் குடியரசுத்தலைவர் மாளிகையில் சுதந்திரக்கொடி ஏற்றி உரை நிகழ்த்துவார்.அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் சுதந்திரக்கொடி ஏற்றி உரையாற்றுவர்.
 முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும்.வீரதீர சாகச  செயல் புரிந்தவர்களுக்கு பாராட்டும்,பரிசும்,விருதும் வழங்கி  கௌரவப்படுத்தப்படும்.எதிர்காலத் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும்.
  1952 ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தேர்தல் நடைபெற்றது.
இந்தியக் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார்.
தமிழ் சென்னை மாகாண முதல் முதலமைச்சராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் பதவி ஏற்றார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...