தமிழர்கள் கண்டுபிடித்த விளையாட்டுக்கள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம்,
பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை,விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம்முடைய மனதிற்கும், நம்முடைய உடலிற்கும்
நன்மைகளை வழங்கக்கூடிய விளையாட்டாகவே இருந்துள்ளன.
முந்தைய காலத்தில்.......
சிறுவர்களுக்கு அறுபத்தைந்து விளையாட்டுகள் அதாவது மரங்கொத்தி, காயா?பழமா?,
சூ விளையாட்டு,உப்புவிளையாட்டு, ஐந்துபந்து, கால்தாண் என 65 விளையாட்டுகள் இருந்தன.
சிறுமியர்களுக்குஇருபத்தேழு விளையாட்டுகள் அதாவது ஒண்ணாங்கிளி
இரண்டாம்கிளி,பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி
செத்துபோச்சு,மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி,சோற்றுபானை என 27
விளையாட்டுகளும்,
முப்பது விளையாட்டுகள் சிறுவர் சிறுமியர் இருவரும் சேர்ந்து
விளையாடும் வகையில் தொட்டுவிளையாட்டு,குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி,
நொண்டி,குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற 30விளையாட்டுகளும்,
ஆண்கள் மட்டும் விளையாடும் வகையில்முப்பது விளையாட்டுகள் அதாவது ஜல்லிகட்டு,
வாடிவாசல்,சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம்,மோடிவிளையாட்டு, பானை
உடைத்தல் போன்ற 30 விளையாட்டுகளும்,
குழந்தைகளுக்கு ஐந்து விளையாட்டுகள் அதாவது தென்னைமர
விளையாட்டு,பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என 5 விளையாட்டுகள் இருந்தன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்:
1)கிட்டிபுள்ளு
2)கிளித்தட்டு
3)சடுகுடு
4)எட்டுக்கோடு
5)வழுக்குமரம் ஏறுதல்
6)கயிறு இழுத்தல்
7)உறியடி
8)பாரிவேட்டை
9)சங்கீத கதிரை
10)போர்த்தேங்காய்
11)பல்லாங்குழி
12)ஒப்பு
13)மோடி விளையாட்டு
14) கண்ணாமூச்சி
15)குழைஎடு
16)பேணிஅடித்தல்
17)அம்பெறிதல்
18)சில்லிகோடு
19)கிச்சுகிச்சு தாம்பலம்
20)போளையடி
21)மணல் வீடு கட்டுதல்
22)தோணி விடுதல்
23) தனி நீச்சல்
24)துணை நீச்சல்
25) ஆழ் கல் எடுத்தல்
26) கால் கட்டி நீச்சல்
27)படகு ஓட்டுதல்
28) பரிசல் ஓட்டுதல்
29)பச்சை மரம் ஏறல்
30)தனி ஓட்டம்
31) துணை ஓட்டம்
32) கூட்டு ஓட்டம்
33) தொடர் ஓட்டம்
34) சாக்கு ஓட்டம்
35) நொண்டி ஓட்டம்
36) கண்கட்டி ஓட்டம்
37) கண்ணாமூச்சி
38)கள்ளன் காவல்
39) புதையல் தேடல்
40) ஏறு குதிரை
41) ஏறு யானை
42)தட்டாமாலை
43)கயிறு பாய்தல்
44)சமநிலை பேணுதல்
45)கிடுகு கோர்த்தல்
46) ஊசிநூல் கோர்த்தல்
47) மா கோலம்
48) பல்லாங்குழி
49) கிரகாட்டம்
50)ஊஞ்சல் விழுது
51) குரங்கு தாவல்
52)பன வண்டி உருட்டி
53) நாட்டு பாடல்
54) தாயகட்டை
55) கோலிகுண்டு
56)பம்பரம்
57)ஒத்தையா ரெட்டையா?
58) நொண்டி
59)சிலம்பம்
60) புலி வேடம்
61) தட்டாங்கல்
62)மஞ்சள் நீர் தெளித்தல்
63)எசைப்பாட்டு
64) விடுகதை
இவை கிராம மக்கள் போட்டிகள்.
மற்ற போட்டிகளான..
ஜல்லிக்கட்டு,
மாட்டுசண்டை,
ஆட்டுச்சண்டை,
கோழிச் சண்டை,
மாட்டுவண்டி பந்தயம் ,
காளை கட்டல்,
சேவல் விடுதல்
போன்றவை விலங்குகள் விளையாட்டு ஆகும்..
============================================================
கழங்கு அல்லது ஏழாங்கல் விளையாட்டு.
பெண்கள் வட்டமாக அமர்ந்து ஆடும் விளையாட்டு. வட்ட வடிவிலான ஏழு கூழாங்கற்கள்.
மேலே தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றையும் சேர்த்து அள்ள வேண்டும்.
ஒன்றான், இரண்டான், மூன்றான் என அள்ள வேண்டிய கற்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும். எல்லாவற்றையும் சரியாக விளையாடியவர்கள் இறுதியில் பழம்
வைப்பார்கள்.
ஒவ்வொரு காய் ஆடும்போதும் ஒவ்வொரு பாட்டு உண்டு!
ஒன்றான்:
அலசல் அலசல் பாட்டிமா
தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்
தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்
அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்
அம்மியிடுக்குல படுத்திட்டேன்
படுத்த பாயில சுருட்டிட்டேன்
ரெண்டான்:
ஈரெண்டு எடுக்கவும்
இளந்தம் பழுக்கவும்
பழுத்து தின்னவும்
மூன்றான்:
சிக்குட்டு
மூன்றாம் படிக்கட்டு
நான்காம
நாக்கொத்தி செங்கொத்தி
நாகம் பழங்கொத்தி
அஞ்சாம்:
ஐப்பால் அரங்கு
பம்பாய் சிலுக்கு
ஆறாம்:
ஆக்கூர் முறுக்கு
அள்ளிப்போட்டு நொறுக்கு
ஏழாம்:
ஏழதாள எங்க நீ போற
எட்டாம் நம்பர் சேல
===========================================================
கில்லி விளையாட்டு....
கிட்டிபுள்ளு எனும் விளையாட்டானது கிட்டிதக்கா, கில்லி தாண்டா,
குச்சிக்கம்பு, சிங்காங்குச்சி, குச்சி அடித்தல், எனப் பல பெயர்களில்
அழைக்கப்படுகிறது. சிறுவர்கள், சிறுமியர்கள் என அனைவரும் இவ்விளையாட்டினை
விளையாடுவார்கள். இவ்விளையாட்டினை விளையாடுவதற்கு கிட்டிபுள், கிட்டிகோள்
என இரு கருவிகளை கொண்டு விளையாடுவார்கள். கிட்டிபுள் எனப்படும்
குச்சியானது சுமார் மூன்று விரல் கொண்ட பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம்
கொண்டது. இதன் இருமுனைகளும் கூராக இருக்கவேண்டும். கிட்டிகோளானது ஒருவிரல்
பருமனும் சுமார் 50 சென்டிமீட்டர் நீளமும் இருக்கவேண்டும். விளையாடுவதற்கு
ஏற்ற குச்சியாக வலுவான மரத்திலில் இருந்து வெட்டப்பட்ட குச்சியின் கிளைகளை
வைத்தே விளையாடலாம். ஆனால் குச்சியானது அடிக்கும்போது உடையாமல் திடமானதாக
இருக்கவேண்டும்.
எப்படி ஆடவேண்டும்:
இவ்விளையாட்டை இரண்டு விதமாக விளையாடலாம்;
1. மண் தரையில் ஒரு சிறிய குழியைத் தோண்டி அதன் மேல் புள்ளு குச்சியை
வைக்கவேண்டும். பின்னர் கிட்டி குச்சியை புள்ளுக்குச்சிக்கு அடியில்
இருக்குமாறு வைத்து தூக்கி அடிக்க வேண்டும். அடிக்கப்பட்ட புள்ளுக்குச்சியை
குழுவில் உள்ள மற்றவர்கள் துணியாலோ அல்லது கைகளாலோ பிடிக்கவேண்டும்.
2. மண் தரையில் ஒரு சிறிய குழியைத் தோண்டி அதன் மேல் புள்ளு குச்சியை
வைக்கவேண்டும். பின்னர் விளையாடும் நபர் இரண்டு கால்களையும் விரித்து
குழியானது கால்களுக்கு இடையில் இருக்குமாறு சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கீழே குனிந்து கிட்டி குச்சியை புள்ளுக்குச்சிக்கு அடியில்
இருக்குமாறு வைத்து விரித்த கால்களுக்கு இடையில் உள்ள இடைவெளியின் வழியாக
தூக்கி வீச வேண்டும். அதனை குழுவில் உள்ளவர்கள் துணியாலோ அல்லது கைகளாலோ
பிடிக்கவேண்டும். புள்ளு குச்சியை பிடித்து விட்டால் விளையாடிய நபர்
வெளியேறி அடுத்த நபர் ஆட்டத்தை தொடரவேண்டும்.
இவ்விளையாட்டை விளையாடுவதற்கு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களும் விளையாடலாம்.
==================================================================
பூப்பறிக்க வருகிறோம்
இரண்டு குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள்.
இரு அணியிலும்
சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும்.
ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக்கொண்டு
எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள்.
‘பூப்பறிக்க வருகிறோம், வருகிறோம்!,
எந்த
மாதம் வருகிறீர், வருகிறீர்!!,
டிசம்பர் மாதம் வருகிறோம், வருகிறோம்!!!,
யாரைத் தேடி
வருகிறீர்?,
பூவைத் தேடி வருகிறோம்!,
எந்தப் பூவை தேடுவீர்??,
மல்லிகையை
தேடுவோம்’
இப்படி பாடியதும் ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து
இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க,
குழந்தைகளுக்குஒரே ஆர்ப்பாட்டமும் கொண்டாட்டமுமாக இருக்கும் விளையாட்டு இது.
==============================================================
கள்ளன் வாரான்… களவாணி வாரான்
மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள்.
மற்ற அனைவரும் ஒரே வரிசையில் கீழே
சம்மணமிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால்
வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார்.
, கையில்
ஒரு கல்லை எடுத்துக்கொண்டு.....
‘காயே கடுப்பங்கா,
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா,
உப்பே புளியங்கா,
ஊறவச்ச நெல்லிக்கா,
கல்லன் வாரான் காரைக்குடி,
கல்லை நீயும் கண்டுபிடி’
என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி
யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார்.
வைத்தபின் எல்லாரும் தலையை
வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்வார்கள்.இப்போது
யாருடைய
கையில் கல் இருக்கிறது என்பதை எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்தால் ஒரு மதிப்பெண் கிடைக்கும்.
கண்டுபிடிக்கமுடியாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்!
===============================================================
மெல்ல வந்து கிள்ளிப்போ
இரண்டு அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணிகளின் தலைவர்களும் தங்கள்
அணியினருக்கு பூவின் பெயரையோ,பழத்தின் பெயரையோ ஒரே மாதிரியான இனத்தில் ஒவ்வொரு பெயர் வைப்பார்கள்.
பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு
வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார்
(உதாரணத்துக்கு… ‘ரோஜாப்பூவே
ரோஜாப்பூவே மெல்ல வந்து
கிள்ளிப்போ…’).
ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக
அமர்ந்துவிடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்று
ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன்பிறகு கண்களை
திறந்து
விடுவார்.
இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!
====================================================================
தட்டான் விளையாட்டு என்றும் உப்புக்கோடு என்றும் விளையாடுவது
உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக
கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று கைநீட்டி
தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள்.
தொடங்கும்
அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார். மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில்
நிற்பார்கள்.
எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து
வெளியில் செல்ல வேண்டும்.
முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில் ஓடி
எதிராளியை அவுட் செய்யவும் அதிகாரம் உண்டு.
இவரது கவனத்தைத் திருப்ப,
மற்றொரு கட்டத்தில் நிற்பவர், நடுக்கோட்டில் கால்வைத்து தண்ணி தண்ணி என்று
அழைப்பார்.
இவர் அவரைத் தொட ஓடவேண்டும். யாராவது ஒருவரைத் தொட்டாலும்
ஆட்டம் முடிந்துவிடும்.
முதலில் கோடுகளைக் கடந்து வெளியேறும் ஒருவர்
கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு என்று சத்தமிட்டபடி ஒவ்வொரு
கட்டத்திலும் நிற்கும் தம் அணியினரைத் தொட்டு திரும்பவும் கோட்டைக் கடந்து
முகப்புக்கு வரவேண்டும். பரபரப்பான விளையாட்டு!
===============================================
ஆடு புலி ஆட்டம்
இது பெரியவர்கள் திண்ணையில் அமர்ந்து விளையாடும் விளையாட்டு ஆகும். இது
குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. ஊர்புறங்களில்
தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி
வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், மற்றும் சிறப்பாக
தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி
ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி
விளையாட்டு.
ஆடு புலி ஆட்டக்கோடு விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்த பகுதியில் முக்கோணக்
கூம்புக் கோடு ஒன்றை வரைந்து, கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே
தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3
கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால்
இணைக்கப்பட்டிருக்கும்.
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டில் மொத்தம் பதினெட்டு ஆட்டக்காய்கள் இருக்கவேண்டும். அதில் மூன்று
காய்கள் புலிகளாகவும், மீதமுள்ள பதினைந்து காய்களை ஆடுகளாகவும்
வைத்துக்கொள்ளவேண்டும். இந்த இரண்டு காய்களையும் வித்தியாசப்படுத்தும்
விதத்தில் காய்களானது இருக்கவேண்டியது அவசியம்..
மூன்று புலிகள், பதினைந்து ஆடுகள் கொண்ட இந்த விளையாட்டில் புலிகள் ஆடுகளிடம்
சிறைப்படுதல் அல்லது ஆடுகளை புலிகள் விழுங்குதல் என்பது விளையாட்டின்
நோக்கமாகும். ஆடுகளை ஒவ்வொன்றாக விழுங்கும் புலிகள், புலிகளை
முற்றுகையிட்டு அசையவிடாமல் அடைக்கும் ஆடுகள் என்று வகுக்கப்பட்டுள்ளது.
1. முதலில் புலி, அடுத்து ஆடு என்று சட்டகத்தின் இணைப்புகளில் வைக்க
வேண்டும். மற்ற விளையாட்டுகளைப் போல் இது கட்டத்துக்குள்
வைக்கப்படுவதில்லை. புலிகளை அடைப்பது போல ஆடுகளை அடுக்க வேண்டும். அதை
தடுப்பது போல புலிகளை நகர்த்த வேண்டும்.
2. புலிக்கு அருகில் ஆடு இருந்து அதற்கு அடுத்த கட்டம் வெற்றிடமாக
இருந்தால் புலி அங்கே தாவுவதன் மூலம் ஆட்டை விழுங்கும். எனவே புலிக்கு
அருகில் தொடர்ச்சியாக இரு ஆடுகள் வரிசையில் இருந்தாக வேண்டும்.
3. புலிகள் சிறைப்படும் போது எத்தனை ஆடுகள் விழுங்கப்பட்டுள்ளன என்பதைப்
பொறுத்து ஆடுகள் தரப்பில் விளையாடுபவர் புள்ளிகளைப் பெறுவார். அதுபோல
புலிகளை சிறைப்படுத்த முடியாத அளவுக்கு ஆடுகளை இழந்தால் புலிகள் தரப்பில்
விளையாடுபவர் வெற்றிபெறுவார்.
=======================================================
பம்பரம்..
இந்த பம்பர விளையாட்டிற்கு இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று
வரைமுறையில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்.
முதலில் ஒரு வட்டம் போட்டுக்கொள்ளவேண்டும். அந்த வட்டத்தை சுற்றி நின்று
பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்காக தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.
பிறகு ஒன்று,இரண்டு,மூன்று என சொல்லியவுடன் அனைவரும் பம்பரத்தை சாட்டையால்
சுற்றிக்கொண்டு வட்டத்திற்குள் பம்பரத்தை சுழலவிட வேண்டும்.
பின்பு சாட்டையை பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு
எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும்.
வெளியே உள்ளவர்கள் வட்டத்திற்குள்ளிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப்
பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள்
விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்தப் பம்பரத்தை பிடித்துவிட்டால் அந்தப்
பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும். சுழற்றுபவரின் பம்பரம் சுழலவில்லை
எனில், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். வட்டத்தில் உள்ள
அனைத்துப் பம்பரங்களும் வெளியே வந்து விட்டால் மீண்டும் ஆட்டத்தைத் துவங்க
வேண்டும்.
======================================================
நொண்டி விளையாட்டு.
ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது
நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது
குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும்.. நொண்டி விளையாட்டு குழந்தைகளின்
உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை
குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.
இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தருவதோடு, தன்னம்பிக்கையையும்அதிகரிக்கிறது.
நொண்டி விளையாட்டிற்கு இத்தனை பேர் விளையாட வேண்டும் என வரைமுறை எதுவும்
இல்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்..
வட்டம் அல்லது சதுரம், இதில் ஏதேனும் ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும்
விளையாட்டில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் ஓடவேண்டும்.
அவர்களை ஒருவர் நொண்டி அடித்துச் சென்று தொடவேண்டும். நொண்டி அடித்து
செல்பவரின் கால் வலித்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் (காலை வைத்து)
போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தினுல் நின்று கொள்ளலாம். வட்டத்தை தவிர
மற்ற பகுதியில் காலை ஊன்ற கூடாது. நொண்டி அடித்துச் செல்பவர் ஒருவரைத்
தொட்டால், தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். குறிப்பிட்ட
எல்லைக்குள் காலை ஊன்றினால் அதற்கு முன் தொடப்பட்டவர் உள்ளே மீண்டும் வந்து
ஓடும் வாய்ப்பை பெறுவார். இவ்வாறு நொண்டி விளையாட்டு தொடரும்.
இப்படி, கொண்டாட்டமும் நட்புணர்வும் நம்பிக்கையும் தவழும் நூற்றுக்கணக்கான
விளையாட்டுகள் நம் கிராமங்களில் உண்டு. பல்லாங்குழி, தாயம், நாடு
பிடித்தல், ஆடுபுலியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, டிக் டிக்,
கண்ணாமூச்சி, நாலுமூலை, ஊதுகாய், கிட்டிப்புள், பளிங்கி, நொண்டியாட்டம்,
ஐஸ்பால், பச்சகுதிரை, குளம்கரை, சின்னப்பானை-பெரியபானை, பரமபதம்,
கரகரவண்டி, கவன், ராஜா ராணி, பம்பரம் விடுதல், செதுக்கு சில்லு, கல்லா
மண்ணா, நூத்துக்குச்சி, பூப்பந்து எறிதல் என மூளைக்கும் உடலுக்கும் வேலை
கொடுக்கும் விளையாட்டுகள் நிறைந்திருந்தன. இன்றுள்ள பிள்ளைகளுக்கு இந்த
விளையாட்டு அனுபவங்கள் கிட்டுவதேயில்லை!
ஓவியக்கலை
எல்லைகளையெல்லாம்
கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக்கொள்ளைகொண்டு வியக்க
வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத்
தன்வயப்படுத்தும் உயர்ந்தகலை ஓவியக்கலை.
ஓவியம் பேசும் செய்திகள் பல, உணர்த்தும் கருத்துகளோ மிகப்பல.
தமிழகத்தில்
தொன்றுதொட்டு விளங்கிவந்த பாரம்பரியக் கலைகள் பல. அவற்றுள் பல,
காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு அழிந்துபோயின. எஞ்சிய சில,
தமிழர்களின் கலைத்திறன்களையும் கலை நுட்ப அறிவையும் உலகோர்க்கு
எடுத்துகாட்டும் ஒளி விளக்குகளாகத் திகழ்கின்றன.
தமிழர் வளர்ந்த
நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது.பழங்கால
மக்கள் தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி
எழுதினர்.
தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப்படுதினர்.
இவற்றை
தொல்பொருள் ஆய்வுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர்.
தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.எனவே, பழங்கால மக்கள் சித்திர எழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர். அவையே நாளடைவில் மொழிக்குறியீடுகளாக வளர்ந்துள்ளன.ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் எனப்படும்.இலக்கியங்களில் ஓவியக்கலை:தொல்காப்பியம் ”நடுகல் வணக்கம்” பற்றிக்
கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர்,
பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது. சிற்பி,
தான் செதுக்கருவிக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே,
அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு. இதன்படி ஆராய்ந்து
நோக்கினால் செதுக்குவதற்கு ஓவியம் துணை புரிந்தையும், ஓவியம் முன்னரே
வளர்ந்திருந்ததையும் உணர முடிகின்றது.ஆடல் மகள் மாதவி, ”ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்” எனச்சிலம்பு பகர்கிறது.புறநானூற்றில், “ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஓப்ப வைத்து” கவிஞர் போற்றுகிறார்.நாச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.ஆண் ஓவியர் “சித்திராங்கதன்” என்றும் பெண் ஓவியர் “சித்திரசேனா”எனவும் பெயர் பெற்றிருந்தினர்.ஓவியக்கலை ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்படுகிறது.ஓவியக்கலைஞர் ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.வரைகருவிகள்பல்வகைக் காட்சிகள், உருவங்கள் வரைய ஓவியர் அக்காலத்தில் பல்வகைக் கருவிகளைப் பயன்படுத்தினர்.வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயரிட்டிருந்தனர்.வரைவிடங்கள்அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்திருந்தன. ஓவியங்கள் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் எனப்
வழங்கப்பட்டன. அரசர் வாழும் அரண்மனை அந்தப்புரங்கள், செல்வர் வாழும்
வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள்
முதலிய இடங்களில் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் ஓவியங்களை
வரைந்தனர். ஓவியத்தால் மக்கள் வீடுகளை அலங்கரித்தனர்.சித்தன்னவாசல் ஓவியம்மகேந்திரவர்மன்
காலத்திற்குப் பின்னர்த் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசர்கள் ஓவியகலையை
வளர்த்து வந்துள்ளார்கள். பல்லவர் கால ஓவியங்கள், பனமலை, திருமலை,
மாமல்லபுரக் குகைக்கோவில், மாமண்டூர், காஞ்சிக் கைலாசநாதர் கோவில் முதலிய
இடங்களில் ஓவியங்கள் சிதைந்த தோற்றத்தோடு காணப்படுகின்றன.
புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்க்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தகுந்தன. அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் நம் கண்னைக் கவர்வன,
கணையாளிக்கு நன்றிங்க.