23 பிப்ரவரி 2017

தானியங்கள் பதினெட்டு வகை..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். தானியங்கள் பதினெட்டு வகைகள் உங்களது கவனத்திற்காக..
 நெல்லு,புல்லு,வரகு,சாமை,திணை,இராகி,எள்ளு,கொள்ளு,பயறு,
உளுந்து,அவரை,துவரை,கடலை,மொச்சை,சோளம்,கம்பு,இறுங்கு,தோரை,இவைகளை இணையத்தில் படித்தது.இவற்றில் இறுங்கு மற்றும் தோரை என்பவை பற்றி எனக்குத் தெரியவில்லை.தெரிந்த அன்பர்கள் இங்கு கருத்துரை இட வேண்டுகிறேன்.
 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன், 9585600733
சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.

அரிசி சாதம் குக்கரில்சமைத்துப் பழகுங்க!

  புத்தகத்தில் மட்டும்படித்து விட்டு நீந்தவோ,வாகனம் ஓட்டவோ முடியாத காரியம். அனுபவமே சிறந்த பயிற்சிக் களமாகும்.

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.குக்கரில் சாதம் வடிப்பது பற்றி காண்போம்.
 நபருக்கு அரை டம்ளர் அரிசி வீதம் தேவைக்கேற்ப எடுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக களைந்தெடுங்கள்.
 குக்கரில் அரிசி ஒரு பங்கு மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி விசில் மூடி குக்கரில் வைத்து வேகவிடுங்கள்.மூன்று விசில் வந்த பிறகு இறக்கிவைத்து குளிர்ச்சியாகும் வரை காத்திருங்கள்.பிறகு மூடியை திறந்து சாப்பாட்டை பரிமாறுங்கள்.அனுபவத்திற்கேற்ப தண்ணீரின் அளவு குறைக்கவோ,கூட்டவோ செய்து உங்களது விருப்பத்திற்கேற்ப சமைத்துப்பழகுங்க..
==============
 அடுத்த பதிவுகளில் .என் இல்லாளின் துணைகொண்டு சமையல் பாத்திரங்கள்,சமைத்தலில் உள்ள அளவுகள்,செய்முறைகள்,இத்துடன் காய்கறிகள் பட்டியல்,,கிழங்குகள்பட்டியல்,கீரைகள் பட்டியல்,மூலிகை உணவுகள்,ஆரோக்கிய உணவுகள்,இயற்கை உணவுகள்,தானியங்கள் பட்டியல்,பருப்புகள் பட்டியல்,கொட்டைகள் பட்டியல்,சுவைபொருட்கள் பட்டியல்,மீன் வகைகள் பட்டியல்,மாமிச உணவுகள் பட்டியல்.என சமையலறையில் இருக்க வேண்டிய பொருட்களை பட்டியலிட்டு பயன்படுத்தும் முறைகள் பற்றி பதிவிட வேண்டும்.முயற்சிக்கிறேன்..
என அன்புடன், 9585600733
செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுநர்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம். 

சமையலுக்கான பொடி வகைகளில் சில...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
               இன்றைய காலத்தில்  சமைப்பதிலும் நேரத்தை மிச்சப்படுத்தும் இயந்திரமான நிலையில் உள்ளோம்.அதனால் சமையலுக்குத்தேவையான பொருட்களை ஏற்கனவே பொடி செய்துகொண்டால் சமைப்பது எளிதாகும்.
பருப்புப்பொடி
                   தேவையானவை:
                           துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                  வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும்.

 செட்டிநாடு குழம்பு மிளகாய்ப்பொடி..
தேவையான பொருட்கள்; காய்ந்த சிவப்பு மிளகாய்- 35 முதல் 40 ,கொத்தமல்லி விதை - 1 கப், கடலை பருப்பு - 2 டீஸ்பூன்  துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் , சீரகம் - 2 தேக்கரண்டி,  கருப்பு மிளகு - 1  டீஸ்பூன்,   பெருங்காயம் பொடி - 1 தேக்கரண்டி,  மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை;
           வாணலியில்  மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும். பின் கொத்தமல்லி விதை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், மிளகு, இவை அனைத்தையும் கலந்து ஒன்றாக வறுக்க வேண்டும். கருகிவிடாமல் பார்த்து பதத்திற்கு வறுக்க வேண்டும். பின் மஞ்சள், பெருங்காயம், கலந்து கிளறி ஆறவைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். குழம்பு செய்யும் போது தேவையான அளவு பயன்படுத்தலாம்.

சாம்பார்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் – 250 கிராம், தனியா – 500 கிராம், துவரம்பருப்பு – 200 கிராம், கடலைப் பருப்பு – 100 கிராம், வெந்தயம், மிளகு – தலா 50 கிராம், மஞ்சள் – 2.

செய்முறை:
               வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை லேசாக வறுத்து (தனித்தனியாக வறுக்கவும்), மெஷினில் கொடுத்து அரைக்கவும் .
குறிப்பு: வெயிலில் காயவைத்து அரைப்பதைவிட வறுத்து அரைத்தால், சாம்பார் பொடி வாசனையாக இருப்பதுடன், நீண்ட நாள் கெடாது.

பூண்டுப்பொடி
              தேவையானவை:
                        பூண்டு – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

                      செய்முறை:
                        பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்… மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.

நெல்லிக்காய் பொடி
தேவையானவை:
                பெரிய நெல்லிக்காய் – 10, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                      நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.
நெல்லிக்காய்… வைட்டமின் ‘சி’, இரும்புச்சத்து மிக்கது.

தேங்காய்ப்பொடி
தேவையானவை:
                   முற்றிய தேங்காய் – ஒன்று, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                        தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து… தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

இட்லி மிளகாய்ப்பொடி
தேவையானவை:
                            காய்ந்த மிளகாய் – 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், எள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                          வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்… இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.


கொத்தமல்லிப் பொடி
தேவையானவை:
                பச்சை கொத்தமல்லி – ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, புளி – பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

 செய்முறை:
          வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.
(குறிப்பு: இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு சேர்க்கலாம்.)
மிளகு  சீரகப்பொடி
தேவையானவை:
              மிளகு, சீரகம் – தலா 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                   வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு – சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.
குறிப்பு: ‘சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.

கூட்டுப்பொடி
தேவையானவை:
                   கடலைப் பருப்பு, தனியா – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை:
                   வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்… சுவை அதிகரிக்கும்.
ரசப்பொடி
தேவையானவை:
               தனியா – 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10.
செய்முறை:
                       வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.(குறிப்பு: புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்… மணம், ருசி ஆளை அசத்தும்.)

மூலிகைப்பொடி
தேவையானவை:
            வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.(குறிப்பு: வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி – தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.)


எள்ளுப்பொடி
தேவையானவை:
                    எள், உளுத்தம்பருப்பு – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                   வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.


சுண்டைக்காய்பொடி
தேவையானவை:
         சுண்டைக்காய் வற்றல் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                 வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.(குறிப்பு: சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்)

கொள்ளுப்பொடி
தேவையானவை:
                 கொள்ளு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உளுத்தம்பருப்பு – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை:
               வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.
(குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.)


தனியாப்பொடி (கொத்துமல்லிவிதை பொடி)
தேவையானவை:
          மல்லிவிதை என்னும்   தனியா – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                   வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலை பொடி
தேவையானவை:
                கறிவேப்பிலை (ஆய்ந்தது) – 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                        வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.(குறிப்பு:  இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.)


ஓமப்பொடி
தேவையானவை:
         ஓமம் – 100 கிராம், மிளகு – 10, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
                வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.(குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.)

1. பருப்புப் பொடி
தேவையானவை
துவரம் பருப்பு                1 கப்
வரமிளகாய்                   1 (அ) 2
கருப்பு மிளகு                 1 டீஸ்பூன்
உப்பு                                    1 டீஸ்பூன்
புளி                                      1 கோலிகுண்டு அளவு
பெருங்காயம்                1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்         2 டீஸ்பூன்
செய்யும் முறை

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு அதில்  பெருங்காயம், புளி இரண்டையும் தனித்தனியே ஒன்றன் பின் ஒன்றாக  வறுத்துக் கொள்ளவும்.
மிச்சம் உள்ள  எண்ணெயில் துவரம் பருப்பு, மிளகாய், மிளகு இவற்றை சிவக்க வறுத்துக் கொண்டு நன்றாக ஆற வைக்கவும்.
வறுக்கும் சமயம் மிதமான தீயில் வறுப்பதும், ஆறிய பின்னே மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
காற்றுப்புகாத ஜாடியில் வைத்து கைகளால் தொடாமல் பயன் படுத்தவேண்டும்.
பயன்படுத்தும் முறை;
வடித்த சாதத்தில் நெய் அல்லது, நல்லெண்ணெய் சேர்த்து, இந்த பொடியோடு சாப்பிடலாம்.
   என அன்புடன்
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.

14 பிப்ரவரி 2017

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!! என உரக்கசொல்லும் துணிச்சல்.


சாமானியனின் எதிர்பார்ப்பு நடுநிலை தவறாமை!
              http://www.linesmedia.in/ ஓங்கி வளர  வாழ்த்தி வரவேற்கிறோம்!!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
         ஜனநாயகத்தின் நான்கு தூண்களான, ஊடகத்துறை,நீதித்துறை,அரசுத்துறைகள்,ஆட்சியாளர்கள், ஆகிய வைகள் ஆங்காங்கு சறுக்கலில் சிக்குண்டு அல்லது சறுக்கி செல்வதைக்காணும்போதெல்லாம் நான் மிகவும் வேதனைப்பட்டதுண்டு..இன்று எனது முகநூல் நண்பர் திரு.கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் சுதந்திரமாக பத்திரிக்கை நடத்துவதில் ஆர்வம் கொண்டு அறிக்கைவிட்டதைக்கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன்.திரு.கார்ட்டூனிஸ்ட் பாலா போன்ற அன்பர்களால் ஜனநாயகத்தின் தூண்கள் சரிவிலிருந்து மீட்கப்படும் என எதிர்பார்க்கிறோம்!

புள்ளியிலிருந்து...!
------------------------------
14-2-17.. இன்றைய தினம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தினம். அரசியல்வாதிகளையே சுற்றிவரும் எனக்கும் இன்று முக்கியமானதினம்..
இன்று நானும் என் நண்பர்களும் புதிய ஊடக பயணத்தை துவங்குகிறோம்.
வாழ்க்கை மிக சுவாரஸ்யமானது. அதை அதன் போக்கில் எதிர்கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமானது.
மும்பையில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவன் நான். ``உனக்கு ஓவியமே வரையத்தெரியவில்லை.. பேசாமல் கார்ட்டூனிஸ்ட்டாகிரு..” என்று நண்பர் பாலபாரதி சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு ஓவர் நைட்டில் கார்ட்டூனிஸ்ட் ஆனேன்.
குமுதத்தில் கார்ட்டூனிஸ்ட் ஆவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் குமுதம் 12 ஆண்டுகள் கார்ட்டூனிஸ்ட்டாக என்னை அரவணைத்துக்கொண்டது.
பிடித்தமான கார்ட்டூனிஸ்ட் பணிக்காகதான் மத்திய அரசின் ரயில்வே பணியை நிராகரித்தேன். இப்போது குமுதத்திலிருந்து வெளி வந்திருப்பதும் அதே கார்ட்டூன்களின் சுதந்திரத்திற்காகதான். பணிபுரிந்த எல்லா இடங்களிலும் என் சுயத்தோடவே இருந்திருக்கிறேன். நானாகவே விரும்பி வெளியே வந்திருக்கிறேன்.
``நாம எப்பவும் `அலக்கா’ இருக்கணும்டா..” என்று
என் தாத்தா பொன்னையா அடிக்கடி ஒரு வாசகம் சொல்வார். அதில் வரும் அலக் என்ற இந்தி வார்த்தைக்கு தனித்துவம் என்று அர்த்தம். அந்த வார்த்தைதான் என்னை எப்போதும் இயக்குகிறது.
இப்போதும் தனித்துவமாக புதிய பயணத்திற்கு ஆயத்தமாகிறேன். கூட சில பத்திரிகை நண்பர்களும் இணைக்கிறார்கள்.
தமிழக அரசியல் களம் செம சூடாக இருக்கிறது. ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக எனக்கு மிகவும் பிடித்த களம் இது.
போர்களில் மிக பலம் வாய்ந்தது ஊடகப்போர். ஊடகப்போர் தந்திரத்தின் வலிமை அறியாத.. அல்லது அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத தமிழ் சமூகத்திலிருந்து வந்தவன் என்பதால் எனக்கு தெரிந்த ஊடகப்போரையும்.. தந்திர அரசியலையும் என் கோடுகளின் வாயிலாக மக்களுக்கு கடத்த விரும்புகிறேன். இதுநாள் வரை அதைதான் செய்திருக்கிறேன்.
செல்போனில் இணையம் வந்தப்பிறகு பிரிண்ட் மீடியாக்களின் அந்திம காலம் ஆரம்பமாகிவிட்டது இப்போது. இனி வரும் காலங்களில் பத்திரிகைகள் வாழ்ந்து கெட்ட ஒரு ஜமீன்தார் குடும்பத்தைப்போல் காட்சி அளிக்கும்.
இப்போதிருப்பது இணைய ஊடகங்களின் சாம்ராஜ்யம். சமூக வலைதளங்களின் வரவுக்குப்பின் ஊடகங்கள் என்பது மக்கள் வசம் வந்துவிட்டது. அதை சமீபத்தில் மெரினாவில் தமிழ் பிள்ளைகள் நடத்திய போராட்டத்தின் மூலம் நேரடியாகவே பார்த்தோம்.
இந்த காலத்தில் பத்திரிகை ஆரம்பிப்பது என்பது முதலை வாயில் நாமே தலையை கொண்டுப்போய் விடுவது அல்லது.. மலை உச்சிக்கு சென்று தற்கொலை செய்வது போன்றது அது.
ஆக என்னுடைய பணக்கார நண்பர்கள் முதலீடு செய்வதாக இருந்தாலும் கூட, அடுத்தவர் பணம் என்பதற்காக தெரிந்தே அந்த தவறை செய்ய மாட்டேன்.
இந்தியாவின் அரசியல் கார்ட்டூன் பிதாமகர்களில் ஒருவரான சங்கர் என்னைப்போல் பத்திரிகை பணியிலிருந்து வெளி வந்தபோது, `சங்கர்ஸ் வீக்லி’ என்று கார்ட்டூன்களுக்காக தனியாக அந்த காலத்தில் பத்திரிகை ஒன்றை நடத்தினார். அவர் பொருளாதாரரீதியில் செழிப்பாக இருந்ததால் அதை செய்தார்.
ஆனால் பாலாவோ.. பாலாவின் அப்பாவோ கோடிஸ்வரர்கள் இல்லை என்பதால், அரசியல் கார்ட்டூன்கள் வாயிலாக செய்திகளை பேசும் ஒரு சிறப்பான இணைய ஊடகத்தை ஆரம்பிக்கிறோம்.
linesmedia என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர்.
www.linesmedia.in என்பது எங்கள் இணையதள முகவரி. கோடுகளையும்.. பயணத்தின் பாதையையும் குறிக்கிறது என்பதால் நான் மிகவும் விரும்பி தேர்ந்தெடுத்த பெயர்.
வரலாற்று சிறப்பு மிக்க தினமான இன்று இந்த புதிய பயணத்தை அறிவிக்க வேண்டும் என்பதால் அவசரமாக என் கார்ட்டூன் கேரக்டர்கள் சுவரில் கிறுக்கி அறிவித்திருக்கிறார்கள்.
இன்னும் முழுமையாக வடிவமைப்பு பணிகள் முடியவில்லை. தற்போதைக்கு என்னுடைய பழைய கார்ட்டூன்களும் எழுத்துகளும் மட்டுமே இடம்பெற்றிருக்கும். சில நாட்களில் சரிசெய்யப்படும்.
இன்று துவங்கியிருக்கும் எங்களது ஊடக பயணத்தை தொடர்ந்து நடத்தப்போவது ஏதேனும் ஒரு தனி முதலாளி அல்ல.. நீங்கள்தான்.. பங்களிப்பு செய்யப்போவதும் நீங்கள்தான்.
இன்றைய அடாவடி அரசியல் சூழலில் கார்ட்டூன்களை கண்டு அரசியல்வாதிகள் பயப்படுவதைவிட அதிகமாக பத்திரிகை முதலாளிகள் பயப்படுகிறார்கள் என்பதால் பாரபட்சமில்லாமல் அரசியல்வாதிகளை விமர்சிக்கும் பணியை துணிச்சலுடன் நாங்கள் துவங்குகிறோம்.
ஒவ்வொரு செயலுக்கும் பொருளாதரா பலம் என்பது மிக முக்கியமானது. ஒரு படைப்பாளி தோற்றுப்போவது அந்த பொருளாதர பலமில்லாததால்தான்.
நான் பணியிலிருந்து விலகிவிட்டேன் என்றதும் பொருளாதாரரீதியில் எனக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக உலகெங்கிலிருந்தும் நண்பர்கள் பலர் தொடர்பு கொண்டார்கள்.
அவர்களின் அன்பை பெற்றிருப்பதை இந்த தருணத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறேன். அவர்கள் என்றும் என் நினைவில் இருக்கிறார்கள். என்னுடைய கோடுகளும் எழுத்துகளும் சம்பாதித்து கொடுத்த சொத்துக்கள் அந்த நண்பர்கள் மட்டுமே.
எங்களைப்போன்ற பத்திரிகையாளர்களுக்கு சம்பளம் வாசகர்களாகிய நீங்கள் காசு கொடுத்து புத்தகம் வாங்குவதிலிருந்தும் விளம்பரதாரர்கள் விளம்பரம் கொடுக்கும் வருவாயிலிருந்துதான் வழங்கப்படுகிறது.
யாரோ ஒரு முதலாளிகள் முதலீடு செய்வதால் தங்களது வியாபார நலனுக்காக, அண்னா அறிவாலயத்திலோ, போயஸ்தோட்டத்திலோ சென்று பத்திரிகையாளர்களை அடகு வைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள்.
அதனால் முதலாளிகள் சொல்வதற்கு ஏற்ப பத்திரிகையாளர்கள் அடியாட்களாக செயல்பட வேண்டியிருக்கிறது .
ஆக இந்நிலையில் இருந்து நானும் என் கோடுகளும், என் போன்ற நண்பர்களும் சுதந்திரமாக இயங்க வேண்டுமானல் அது உங்கள் பங்களிப்பில்தான் இருக்கிறது.
சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது. சித்திரம் வரைய நான் தயார். பொருளாதாரம் என்ற சுவர் எங்களுக்கு பலமாக இருக்க வேண்டுமானால் அதற்கு நிச்சயம் உங்கள் பங்களிப்பு எங்களுக்கு சந்தா தொகையாக மாற வேண்டும்.
அந்த தொகை சிறியதாக.. பெரியதாக.. என எவ்வளவாகவும் இருக்கலாம்.. அது பிரச்னை இல்லை. ஆனால் எங்கள் பயணத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
அதை ஒரு இயக்கமாக செய்ய விரும்புகிறோம். அடுத்தாண்டு இதே நாள் எங்களுக்கான சந்தா தொகையை அறிவிக்கும் அளவுக்கு வளர்வோம் என்று நம்புகிறேன்.
என்னுடைய ஒவ்வொரு கார்ட்டூனும் 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்படுகிறது. 60 ஆயிரம் நண்பர்கள் என்னை பின் தொடர்கிறார்கள்.
இவர்களில் போகிறப் போக்கில் நடிகை போட்டோவுக்கு சும்மா லைக் போட்டுவிட்டு கடந்து செல்பவர்கள் என்று நினைத்து ஒரு 55 ஆயிரம் பேரை கழித்து விட்டுவிடலாம்.
மீதி இருக்கும் 5 ஆயிரம் பேரில் ஒரு ஆயிரம் பேர் எங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரரீதியில் துணை நின்றால் போதும். தயங்காமல் நின்னு விளையாடலாம். என்ன.. அந்த ஆயிரம் பேரில் நீங்களும் ஒருவராக இருந்தால் போதும் நாங்களும் நண்பர்களும் நின்னு விளையாடுவோம்.
இது எங்கள் நிறுவனத்தின் வங்கி கணக்கு எண்.
LINES MEDIA
C/A : 6499827223
INDIAN BANK
BRANCH : PORUR
IFSC: IDIB000P047
சந்தா தொகை அனுப்பும் நண்பர்கள் மறக்காமல் cartoonistbala@gmail.com அல்லது editorlinesmedia@gmail.com என்ற முகவரிக்கு விபரங்களை அனுப்பவும். அவர்களுக்கு முறையான ரசிது அனுப்பி வைக்கப்படும். மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் 8300187099 என்ற எனது எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
எங்களின் இந்த பயணத்தை நாங்கள் ஜீரோவிலிருந்து ஆரம்பிக்கவில்லை.. புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறோம்..
ஏனெனில் புள்ளியில் இருந்துதான் கோடுகள் உதிக்கின்றன.. அந்த கோடுகள் மக்களின் கோடுகளாக பயணிக்கும்..
நன்றி.. :)
-கார்ட்டூனிஸ்ட் பாலா
14-2-17
http://www.linesmedia.in/
விரும்பு

08 பிப்ரவரி 2017

புதிய வருமான வரி அளவீடுகள்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.  வருமான வரி செலுத்துவோரின் கவனத்திற்காக.......(
             .வெளியிட்ட குட்ரிட்டன்ஸ் செய்திக்கு நன்றி)

                     2017 ஏப்ரல் முதல் யாரெல்லாம் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்..? ..! 50 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை வருமான இருப்பவர்களுக்கு 30 சதவீத வரிக்குக் கூடுதலாக 10 சதவீதம் கூடுதல் கட்டணமாக விதித்துள்ளது. Written by: Tamilarasu Updated: Tuesday, February 7, 2017, 14:29 [IST] Subscribe to GoodReturns Tamil 
 
           வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர்களின் வருமானம் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாயாக இருக்கும் போது 10 சதவீதமாக இருந்த வருமான வரியை 5 சதவீதமாகக் குறைத்து 2017 பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். கூடுதல் கட்டணம் கூடுதல் கட்டணம் இதுவே 50 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை வருமான இருப்பவர்களுக்கு 30 சதவீத வரிக்குக் கூடுதலாக 10 சதவீதம் கூடுதல் கட்டணமாக விதித்துள்ளது. 2017 பட்ஜெட்டில் அறிவித்துள்ள வருமான வரி அளவீடுகள் ஏப்ரல் 1 முதல் எப்படி இருக்கும் என்று இங்குப் பார்ப்போம். பொதுப் பிரிவினர் (60 வயதுக்கு உட்பட்டோர்) பொதுப் பிரிவினர் (60 வயதுக்கு உட்பட்டோர்) 60 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினர் 2.5 லட்சம் வரை வருமான உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை. 2,50,001 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும், இதுவே 5,00,001 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும். மூத்த குடிமக்கள் மூத்த குடிமக்கள் 60 வயது முதல் 80 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை, இதுவே 3,00,001 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமான உள்ளவர்கள் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதுவே 5,00,001 ரூபாய் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும். அதி மூத்த குடிமக்கள் அதி மூத்த குடிமக்கள் 80 வயதுக்கும் அதிகமான அதி மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 500,001 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமான உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.

Read more at: http://tamil.goodreturns.in/news/2017/02/06/income-tax-slabs-here-are-new-tax-rates-applicable-from-apr/slider-pf28852-007009.html

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...