09 மே 2015

சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம்

             வாள் முனையைவிட 
                              பேனா முனை வலுவானது!.
                             ஈரோடு மாவட்டம்,''சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள்  சங்கம்'' இன்று உதயம் ஆனது.
தலைவர் உட்பட  நிர்வாகிகளுக்கு 
       ''கொங்குத்தென்றல்'' வலைப்பதிவு  சார்பாக வாழ்த்துக்கள்.

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். 
          ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிக்கை என்றால் அவற்றின் உயிரோட்டம் செய்தியாளர்களே!....
சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம் - 
திரு. S.N.கோபால்சாமி அவர்கள், கௌரவத்தலைவர் -
SATHYAMANGALAM TALUK REPORETERS ASSOCIATION - 
SATHYAMANGALAM.
 ERODE DISTRICT.-638402
சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம்.
ரிப்போர்ட்டர் வேலு என்கிற 
திரு. N.வேலுச்சாமி  அவர்கள், தலைவர்.-
SATHYAMANGALAM TALUK REPORETERS ASSOCIATION - 
SATHYAMANGALAM.
 ERODE DISTRICT.-638402



கிப்ளிங் (Kipling)  என்பவரின் புகழ்பெற்ற பாடல் வரிகளான
''என்ன?ஏன்?எப்போது?
எப்படி?எங்கே?யார்?எனும்
அன்புத்தொண்டர்கள் ஆறுபேர்
 அறியச்செய்வார்  செய்தியினை,''
அதாவது
(1) (What)என்ன?
 (2)(Why)ஏன்? 
(3)(When)எப்பொழுது? 
(4) (How)எப்படி? 
(5)(Where)எங்கே? 
 (6)(Who)யார்?
 என்ற ஆறு கேள்விகளையும் கேட்டு விடைகளைப் பெற்று கடலில் முத்துக்குளிப்பது போன்ற அருமையான சமூகப்பணியினை செய்து முழுமையான உண்மையான செய்திகளை இனங்கண்டு திரட்டி வெளியிட வேண்டுகிறேன். மேலும்,

'' காரிருள் அகத்தில் நல்ல
 கதிரொளி நீதான்! இந்தப்
 பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
 பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
 உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்
 பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே''

மற்றும்

 ''அறிஞர் தம்இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச்செய்வாய்!
நறுமண இதழ்ப்பெண்ணே உன்
நலம் காணார் ஞாலம் காணார்,''

 மற்றும்

''தெருப்பெருக்கிடுவோருக்கும்
 செகம் காக்கும் பெரியோருக்கும்,கை
 இருப்பிற் பத்திரிக்கை நாளும்
இருந்திடல் வேண்டும்!மண்ணிற்
கருப்பெற்றுருப்பெற்றிளநடை
பெற்றுப் பின்னர் ஐந்தே ஆண்டு
வரப்பெற்றார்,பத்திரிக்கை நாளும்
உண்டென்றால் வாழ்க்கை பெற்றார்''
என்ற புரட்சிக்கவிஞர் பைந்தமிழ்ப்  பாவேந்தர் பாரிதாசனாரின் வாழ்த்துரைக்கேற்பவும்,

 திரு.லார்டு கிரே (Lord Gray)  அறிஞரின் கூற்றான,
     ''பத்திரிக்கைதான் நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி''  
      என்ற வரிகளுக்கேற்பவும்,

        ஹெரால்டு பெஞ்சமின் (Harold Benjamin) என்ற புகழ்பெற்ற அமெரிக்க இதழியல் பேராசிரியரின் கூற்றான,
         ''பொது நோக்குடைய இதழியல்துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும்.அதன் மூலம்தான் இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் தெளிவாக வரையறுக்கப்பெற்ற வளரும் மனித நலன் என்னும் இலட்சியத்தை நோக்கி நடைபயில்கின்றது'' 
என்ற வரிகளுக்கேற்பவும்,

ஜி.எப்.மோட்(G.F.Mott) என்பவரின் கூற்றான, 
          '' இதழியல் என்பது,பொதுமக்கள் தொடர்புக்குரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி பொதுச்செய்திகளையும்,பொதுக்கருத்துகளையும்,பொது பொழுதுபோக்குகளையும்,முறையாக நம்பிக்கைக்குரிய வகையில் பரப்புவதாகும்''
 என்ற வரிகளுக்கேற்பவும்,

   அண்ணல் காந்தியடிகளாரின் கூற்றான,
         ''செய்தித்தாளின் நோக்கங்களில் ஒன்றாக,மக்களின் உணர்வினை அறிந்து,அதனை வெளியிடுவது இருக்க வேண்டும்.மற்றொன்று,மக்களிடம் சில மிகவும் வேண்டிய உணர்வுப்பூர்வமான எண்ணங்களை உருவாக்க வேண்டும்.மூன்றாவதாக,பொதுமக்களிடம் இருக்கும் குறைகளையும் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்''  
 என்ற வரிகளுக்கேற்பவும்,

    இங்கிலாந்தின் பத்திரிக்கை மன்றத்தின்(Press Council) கூற்றான,
              ''அநீதியை வெளிக்காட்டுவது,தவற்றைத் திருத்துவது,ஆலோசனை வழங்குவது,நண்பர்களில்லாதவர்களோடு நட்புக் கொள்வது,ஆதரவற்றவர்களுக்கு உதவுவது,செய்திகளையும் கண்ணோட்டங்களையும் துல்லியமாக நடுநிலையில் வெளியிடுவது  ஆகியவை செய்தித்தாள்கள் செய்யும் சேவைகளில் ஒன்றாக விளங்க வேண்டும்''. 
          என்ற வரிகளுக்கேற்பவும்,
மக்களிடம் எல்லா விவரங்களையும் உடனுக்குடன்,உண்மையாக,விருப்பு-வெறுப்பின்றி, சிதைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும்.நாட்டில் சமுதாயம்,அரசியல்,பொருளாதாரம்,கலை,பண்பாடு,சமூக நலசேவைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் விளக்கிகூற வேண்டும்.


தமிழ்த்தென்றல்.திரு.வி.க. அவர்களின் கவிதை வரிகளான,
 ''தமிழைப்போல் உயர்ந்த மொழி
 தரணியெங்கும் கண்டதில்லை;
தமிழரைப்போல மொழிக்கொலையில்
 தலை சிறந்தோர் எவருளரே''
என்ற வரிகளின் பொருள் உணர்ந்து சமுதாயத்தொடர்புகள் உயிரோட்டமானதாக அமையக்காரணமான செய்திகளை புரிகிற தமிழில் எழுதுவதோடு பேசுகிற தமிழிலும் எழுத வேண்டும்.படிக்கத்தெரிந்தவர்கள் அனைவரும் எளிதாகப் படித்து புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழிக்கலப்பில்லாமல் அதே நேரத்தில் தமிழைக்கொலை செய்யாமல் மக்களின் மொழிநடையில் செய்திகளை எழுத வேண்டும். என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன் ,
அன்பன்,
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
paramesdriver@gmail.com ., 
+91 9585600733 .,
 http://paramesdriver.blogspot.com 


  

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...