16 ஏப்ரல் 2015

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடி கிளை மேலாளர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். 

            கடந்த 2015ஏப்ரல்19 ஆம் தேதியன்று தாளவாடியில் மருத்துவத்தாவரங்களை பாதுகாப்போம் என உறுதி ஏற்ற தாளவாடி கிளை மேலாளர் அவர்கள்


           22ஏப்ரல் 2015 இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
      
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை களங்கிட நின்றவர்
வாழ்க
  பூமியில் ஜனனத்தைப்போல் ஒரு  புதியது
இல்லை மரணத்தை
போல் ஒரு பழையது இல்லை
இரண்டும் இல்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உளாவிய கண்களும்
எங்கே
மகிழ்ந்து குழாவிய கைகளும்
எங்கே
தேசம் உளாவிய கால்களும்
எங்கே
தீயுண்டது என்றது சாம்பலும்
இங்கே
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை
வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொள்வோம்
நித்திரை கொள்வது நியதி
என்றாலும் யாத்திரை
என்றும் தொடர்கதையாகும்
கண்ணில் கண்டது காற்றுடன்
போக
மண்ணில் முளைத்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களாய் அந்த இன்னுயிர் வாழ்க
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க
பார்வைகள் அனைத்தும்
சூரியனில் சேர்க
போனவர் புண்ணியம்
நம்முடன் சேர்க
நீரில் மிதக்கும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம்
சேர்க.

            ஐயா அவர்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...