11 ஏப்ரல் 2015

மருத்துவத்தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்.ஈரோடு மாவட்டம்.

                                 மூலிகை வளம் பாதுகாப்பு இயக்கம் 
                                                          அல்லது
                      மருத்துவத்தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம் 
                                               விரைவில் துவக்கம்........

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு வருகை புரிந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
   அடுத்த மாதத்தில்  ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி,கேர்மாளம் மலைப்பகுதி,கடம்பூர் மலைப்பகுதி,பர்கூர் மலைப்பகுதிகளை ஒருங்கிணைத்து நம்ம சத்தியமங்கலத்தில்
 மருத்துவத்தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம் துவக்க உள்ளோம்.
 அதுசமயம்
 (1)வனத்துறை,
(2)சித்த மருத்துவத்துறை, மற்றும் சித்த மருத்துவர்கள்,
(3)கல்வித்துறை,
(4)நாட்டு மருந்தகங்கள்,
(5)நாட்டு வைத்தியர்கள்,
(6)சித்த மருத்துவ வலைதளங்கள் ,
(7) இயற்கை ஆர்வலர்கள் உட்பட
விருப்பமுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து
  (1)நமது உடலமைப்பும் நோய்களும்
(2) நோய்களுக்கான காரணங்கள்,
(3)மருத்துவ தாவரங்களை கண்டறிதல் மற்றும் அறிமுகம் செய்தல்,(4)நாட்டு மருந்துக்கடைகள் அறிமுகம்,
(5)இயற்கை வைத்தியம்,
(6)நாட்டு வைத்தியம், 
(7)உணவே மருந்தாகுதல்,
(8)அறிந்த தாவரங்களின் அறியாத மருத்துவக்குணங்கள்,
(9)சித்த மருத்துவத்தை விரும்பாமைக்கான காரணங்கள்,(10)மருத்துவத்தாவரங்கள் கண்காட்சி,
(11)கிழங்குவகை மற்றும் வேர் வகை மருத்துவத்தன்மை,
(12)பூ வகை மருத்துவத்தன்மை,
(13)பட்டை வகை,
(14)இலை வகை,
(15)கசாயம்,
(16)சமூலம்,
(17)சூரணம்,
(18)எண்ணெய் வகை,
(19)ஊறவைத்தல்,
(20)காயவைத்தல்,
(21)உட்கொள்ளல்,
(22)வெளிப்பூச்சு,
(23)பற்று போடுதல்,
(24)மூலிகைக்குளியல்,என
            பல்வேறு தளங்களில் கருத்தரங்கம்,ஆய்வுகள்,கண்காட்சி நடத்த திட்டமிட்டு வருகிறோம். 
      கடந்த ஆண்டு சித்த மருத்துவம் பற்றிய ஆலோசனை கொடுத்த SRN மெட்ரிக் பள்ளி தாளாளர் திரு.S.சசிக்குமார் B.E.,அவர்களுக்கும்,
 மருத்துவத்தாவரங்களை கண்டறிந்து அறிமுகம் செய்வோம் என ஊக்கம் கொடுத்த அரசு சித்த மருத்துவர் திருமிகு. பாலசுப்ரமணியம் -அரசு மருத்துவமனை சித்தா தலைமை மருத்துவர் அவர்களுக்கும்  நன்றி கூறிக்கொள்கிறோம்.
மூலிகைத்தாவரங்கள் பண்ணை அமைக்க இடம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ள SRN மெட்ரிக் பள்ளி தாளாளர் அவர்களுக்கு சமூகம் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
 மேலும் விவரங்களுக்கு
  அன்பன்
 பரமேஸ்வரன்.C. 
செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
 சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு.
மாநில அலுவலகம் சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு  9585600733 
 paramesdriver@gmail.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...