|
2013 டிசம்பர் 01 புதுச்சேரி முகநூல் சந்திப்பு
போதையில்லா திருவிழா-
நல்ல பாதை காட்டும் திருவிழா.....
நிகழ்ச்சி நிரல்:
09:30 நண்பர்கள் வருகை பதிவு அடையாள அட்டை மற்றும் டி-ஷர்ட் வழங்குதல் 10:30 தமிழ்த்தாய் வாழ்த்து 10.35 வரவேற்புரை (முகம்மது அலி ) 10:50 காலை சிற்றுண்டி 11.00 நண்பர்கள் அறிமுகம் 12:00 ரத்ததான முகாம் 01.00 பல் பராமரிப்பு முகாம் ( Dr இளையராஜா& Dr.எழிலன்) 01.30 மதிய உணவு (சைவம் & அசைவம் ) 02.30 புத்தக வெளியீடு 03.00 நண்பர்கள் கொண்டாட்டம் (விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசு வழங்குதல் ) 05.00 வாழ்த்துரை 06:30 நன்றிஉரை நாட்டுப்பண்
எனது முதல் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஈரோடு மாநகரில்
அதற்கான ஏற்பாடு செய்த சான்றோர்கள் விவரம்;-
தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி (செயலர்) 90037-05598,
கார்த்திக் (பொருளர்) 97881-33555,
ஆரூரன் - 98947-17185 ,
கதிர் – 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர் - 98658-39393,
ராஜாஜெய்சிங் - 95785-88925,
சங்கவி – 9843060707
ஆகிய சான்றோர்கள்
ஏன் சங்கமம்?
ஏன்
இப்படியான நிகழ்வை மிகுந்த பொருட்செலவோடு, கடினப் பணிக்கிடையிலும் நடத்த
வேண்டும் என்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தாலும், இணைய உலகத்தில்
இதயத்திற்கு நெருக்கமாகக் கண்டெடுத்த எம் தமிழ்சொந்தங்கள் அந்தக் கேள்விகளை
அகற்றி ஆண்டுக்கொருமுறை கூடிப் பழகவேண்டும் என்று ஆவலை நிறையவே
ஊட்டுகிறது.
எல்லாச்
சன்னல்களையும் திறந்துவிட்டு, இந்த இணைய சமூக வலைத்தளம் நம் பசிக்குத்
தீனி போட்டு, உள்ளே உருண்டு, புரண்டு கொண்டிருப்பதை நம்மிலிருந்து வெளியே
எடுத்து, தனக்குள் தாங்கி, பலதரப்பட்ட வகையில் அங்கீகாரம் அளித்து,
புதியதொரு உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது. வெறும்
எழுத்துகளாலும், படங்களாலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள்
எப்போதாவது நேரிலும் சந்தித்து மகிழலாமே என்ற ஆசையின் வெளிப்பாடுதான்
இந்தக் கூடல்.இவ்வாறான நோக்கத்தில் நடத்தினார்கள்.
அடுத்தது சென்னை
ஈரோடு பதிவர்கள் சங்கமம், கோயம்புத்தூர் பதிவர்கள் சந்திப்பு என்ற வரிசையில் உருவாகியதுதான் சென்னைப் பதிவர் சந்திப்பு திருவிழா..
மாநிலத் தலைநகர் சென்னையில் நடந்த இந்த பதிவர் சந்திப்பு விழாவுக்காக
அரும்பாடுபட்டு வந்தவர்கள் பலர்.. அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால்
திரு.மதுமதி.திரைப்படப்பாடலாசிரியர் அவர்கள்.
விழாவிற்காக முனைப்புடன் செயல்பட்ட சென்னைப் பதிவர்கள்:
மெட்ராஸ் பவன் சிவக்குமார், வீடு திரும்பல் மோகன்குமார், மின்னல்
வரிகள் பாலகணேஷ், கவிதை வீதி சௌந்தர், பட்டிக்காட்டான் பட்டிணத்தில்
ஜெயக்குமார், கரைசேரா அலை அரசன், தென்றல் சசிகலா, டி.என்.முரளிதரன், புலவர்
இராமானுசம், கேபிள் சங்கர், ஆரூர் மூனா செந்தில், பிலாசபி பிரபாகரன்,
அஞ்சாசிங்கம் செல்வின், டீக்கடை சிராஜுதீன் மற்றும் சென்னைப் பித்தன் ஐயா
அவர்கள். (இதில் பெயர்கள் விடப்பட்டிருக்கலாம்.. )
பெரும்பாலான வலைப்பதிவர்களை இணையவழி உரையாடலில் அழைத்தும், தொலைபேசி,
மின்னஞ்சல்கள் வழியாக அழைத்தும், யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும்
பொது வலைத்தளங்களில் விளம்பர அழைப்பை வைத்தும் எத்தனையோ வழிகளில் அனைத்து
வலைப்பதிவர்களையும் சென்னை பதிவர்கள் சந்திப்புக்கு வரவழைத்துவிட வேண்டும்
என முயற்சிகள் மேற்கொண்டவர் மரியாதைக்குரிய மதுமதி அவர்கள்..
பதிவர்கள் சந்திப்பு(Bloggers meeting) என்பது இன்று நேற்று அல்ல.... கடந்த
சில வருடங்களாகவே நடந்துகொண்டிருக்கிறது. பதிவர்கள் சந்திப்பை
நிகழ்த்தியுள்ளார்கள்.. அவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே
கலந்துக்கொள்ளக் கூடிய சிறிய சிறிய சந்திப்பாக இருந்தது. ஆனால் ஈரோடு கதிர்
அவர்கள் ஆரம்பித்த ஈரோடு பதிவர்கள் சங்கமம்தான் எனக்குத் தெரிந்தவரை முதன்
முதலில் அதிகபட்ச பதிவர்கள் சந்தித்துக்கொண்ட பதிவர்கள் சந்திப்பு
நிகழ்ச்சி என நினைக்கிறேன்.
ஆம் நண்பர்களே..! திருவிழாதான்.. சுற்றம் எல்லாம் கலந்துகொண்டு கூடிப் பேசி
மகிழ்ந்து, மீண்டும் பிரிவதைப்போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்துவதுதான்
திருவிழாக்கள்.. திக்கொரு பக்கம் இருக்கும் உறவினர்கள் ஒரு நாளில் ஓர்
இடத்தில் கூடி, வேண்டிய செய்திகளைப் பரிமாறி, விருந்துண்டு, கூடி கலந்துப்
பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே ஏற்பட்டன திருவிழாக்கள்.
இணையத்தில் இன்பத்தமிழை வளர்ப்போம்
என
உங்கள் டிரைவர்
பரமேஸ்வரன்-
தாளவாடி -
ஈரோடு மாவட்டம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக