10 நவம்பர் 2013

தொற்றாநோய்கள்-இதய நோய்.

மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.
     கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
                         தமிழ்நாடு சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள''தொற்றாநோய்களுக்கான தடுப்பு,கண்டறிதல் மற்றும் சிகிச்சைத் திட்டம்''குறித்த களப்பணியாளர்கள் பயிற்சி கையேட்டிலிருந்து சமுதாய நலனுக்காக  விழிப்புணர்வுப் பதிவு

                   தொற்றா நோய்களில் நான்குவகை நோய்கள் அதிக அளவில் மக்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு (1)இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்,(2)நீரிழிவு நோய்,(3)மார்பக புற்றுநோய்,(4)கருப்பைவாய் புற்றுநோய் ஆகிய நான்கு நோய்களை பற்றிய பல்வேறு தகவல்களையும்,விழிப்புணர்வுகளையும் மக்களிடையே கொடுக்க வேண்டும்.

            (1)இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்  நோய் பற்றிய ஓர் கண்ணோட்டம்.
சமுதாயத்தின் தேவை;-
              இதயத்தின் இயக்கநிலை குறித்த விழிப்புணர்வு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்குமானால் மக்கள் உண்மையிலேயே இதயத்தை மிக்க கவனத்துடன் பாதுகாப்பார்கள்.நாட்டிலும் இதய நோய் காரணமாக ஏற்படுக்கூடிய இறப்பு கணிசமாக குறையும்.இந்நோய்களை ஆரம்ப நிலையிலேய கண்டறிந்து தகுந்த மருத்துவம் மற்றும் உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களினால் இந்நோய்களின் பின்விளைவுகளையும்,அதனால் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகள் மற்றும் பொருளாதார இழப்புகளையும் தவிர்ர முடியும்.மேலும் பொதுமக்கள் ஆரோக்கியமான உணவு,உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றங்களை கடைப்பிடித்தால் இதயநோய்,உயர் இரத்த அழுத்தம் வராமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இதய நோய்(Cardiovascular Diseases)
           இதயத்தில் உள்ள இரத்தக்குழாய்களில் அதிக கொழுப்பு சத்து,உயர் இரத்த அழுத்தம்,புகைப்பழக்கம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பின்விளைவுகள் ஆகிய அனைத்துமே இதயநோய் என்று அழைக்கப்படுகிறது.
இதயநோயை மாற்ற இயலாத காரணிகள்,மாற்றக்கூடிய காரணிகள் என இரண்டுவகைகளாக பிரிக்கலாம்.;-
                 (அ) மாற்ற இயலாத காரணிகள்;-
           (1)வயது;-வயது அதிகரிப்பதற்கு ஏற்ப தொற்றா நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது.
(2)பாலினம்;-ஆண்களுக்கு இதயநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
(3) குடும்ப பின்னணி;-குடும்பத்தில் யாருக்காவது இதய சம்பந்தப்பட்ட நோய்கள் அல்லது பக்கவாதம்(Stroke) தந்தை அல்லது சகோதரர்கள் யாருக்காவது 55வயதுக்கு முன்னும்,தாய் அல்லது சகோதரிகள் யாருக்காவது 65வயதுக்கு முன்னும் பக்கவாதம் வந்து இருந்தால் அதுவும் ஒரு காரணியாகும்.
(4)மரபியல் காரணிகள்;-

       (ஆ) மாற்றக்கூடிய காரணிகள்;-
         ( நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்)

        (1)எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணுதல்,துரித உணவுகள்,சிப்ஸ்,(2)அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை உண்ணுதல்,(3)இனிப்பகத்தில் கிடைக்கக்கூடிய அதிக கொழுப்புள்ள தின்பண்டங்கள்,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களான கேக்,பப்ஸ் போன்றவைகளை உண்ணுதல்,(4)உப்பு அதிகமுள்ள பொருட்கள்(உப்பு அதிகம் சேர்த்தில்,ஊறுகாய்,கருவாடு),(5)உடல் உழைப்பு இல்லாமை,சோம்பலான வாழ்க்கைமுறை,(6)உயரத்திற்கேற்ற எடையின்மை மற்றும் உடல் பருமன்,(7)புகை பிடித்தல்,(8)மன அழுத்தம்,(9)இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல் மற்றும் இரத்தக்குழாய்களில் அடைப்பு,(10)உயர் இரத்த அழுத்தம்,(11)சர்க்கரை நோய்,(12)மதுப்பழக்கம்,போன்ற  நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்து விழிப்படைந்தாலே இதயம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்-Changes in Life Style . (1) புகை பிடித்தல்Smoking,அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் மற்றும் அதிக கலோரி உணவுகளை உட்கொள்ளுதல்Abundance of fatty fiid and high calorie food ,& உடல் உழைப்பு இல்லாமை அல்லது உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை Sedentary Life Style  . இதனால் உடல் எடை கூடுகிறதுObesity.உடல் எடை கூடுவதால் இரத்தத்தில்  கொழுப்பின் அளவு அதிகரிக்கிறதுHyperlipidaemia.இதனால் இதயத்திற்கு கொண்டுசெல்லும் கொரோனரி தமனியின் உட்சுவற்றில் கொழுப்பு படிமம் ஏற்படுகிறது Coronary athrosclerosis.இதனால் கொரோனரி தமனியில்1 அடைப்பு ஏற்படுகிறது Coronary Occlusion.புகை பிடித்தலால் தமனியில் அடைப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுகள் அதிகரிக்கிறது Increased catecholamines thrombotic tendency.இதனால் கொரோனரி தமனியில்2 அடைப்பு ஏற்படுகிறது Coronary Occlusion.மன அழுத்தம் Stress&Emotional distubances ,முதுமை மற்றும் பிற காரணங்களால்Agingand other factors உடல் பருமன் அதிக உடல் உடல் எடையால்  உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது Hypertension.இதனால் தமனியின் உட்சுவற்றில் அடைப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள்Changes in Walls of arteries உருவாகிறது.இதனால் கொரோனரி தமனியில் 3அடைப்பு Coronary Occlusionஏற்படுகிறது .கொரோனரி Coronary Occlusion தமனியில் அடைப்பு ஏற்பட்டால் இதய தசைகளுக்குத்தேவையான ஆக்ஸிஜன் குறைந்து இதய தசைகளுக்கு பாதிப்பு Myocardial ischaemia ஏற்படுகிறது.இதயதசைகள் பாதிப்படைவதால் இதய தசைகள் அழிந்து மாரடைப்பு Myocardial infarction ஏற்படுகிறது.

இதயம் காக்கும் பஞ்சதந்திரம் அல்லது பஞ்ச கவசங்கள்;-
 அளவான உப்புடன் சத்தான உணவு,புகை பழக்கமின்மை மற்றும் மது அருந்தாமை,உயரத்திற்கேற்ற எடை, சாந்தமான மனநிலை அல்லது மகிழ்ச்சியான உள்ளம்,சுறுசுறுப்பான உடல் இயக்கம்.

                  இருதய நோயினால் பாதிக்கப்படாமல் இருக்க....
            பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை தினமும் உண்ணுதல்,நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல்,மன அழுத்தத்தை தவிர்த்தல்,தினசரி யோகா&தியான பயிற்சி செய்தல்,புகை பிடிக்கக்கூடாது,மது அருந்தக்கூடாது. கொழுப்புச்சத்து நிறைந்த மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்ணக்கூடாது.முழு தானியங்களையும்,பச்சைக்காய்கறிகளையும் உண்ணுங்கள். உட்கொள்ளும் உணவின் அளவினை கட்டுப்படுத்துங்கள்.துரித உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,குளிர்பானங்கள்,பேக்கரி உணவுப்பொருட்கள் இவற்றை தவிர்க்கவும்.அசைவ உணவுகள்,எண்ணெய்,உப்பு,சர்க்கரை குறைவாக உட்கொள்ளவும்.உடல் உழைப்பை அதிகரிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக