19 ஏப்ரல் 2013

எண்ணெய்க்குளியல் ஒரு அலசல்.



     மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
          கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் அவசியம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.         

       கடுமையான வேலை, மன இறுக்கத்திற்குப் பிறகு, நம்ம உடம்பை அமைதி நிலைக்குக் கொண்டு வர ஒரு சிறந்த தீர்வு, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான்.
       எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயிலில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் வெந்நீரில் கரைத்து வெதுவெதுப்பாக இருக்கணும்.சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய்க் குளியல் எடுக்கக் கூடாது. சூடான எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும்.

           வெந்நீரை உடம்பில் ஊற்றும் போது, உடம்பின் உட்புறக் குழாய்களில் உள்ள அழுக்குகள் கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை போன்ற கழிவுகளின்மூலமாக, வெளியேறத் தொடங்கும். 
        இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று கொண்டு கூடவே, எண்ணெய் இளஞ்சூட்டில் உள்ளபோதே உடம்பில் தேய்க்கணும்.
        இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமிடங்கள் வரைஎண்ணெய் ஊறலாம். 
      எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.
               இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்தப் பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.

          ஆனால், முடி கொட்டும் நிலை உள்ளவர்கள் தலையை அரக்கித் தேய்க்கக் கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவர்கள் எண்ணெயை பஞ்சில் ஊறவைத்து உச்சந்தலையில் வைக்க, எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.

        பெண்கள் கவனிக்கவும் மாதவிடாய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது.  
     எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.
                  திருமிகு. சுவாமிநாதன் அவர்கள்,
             ஆயுர்வேத மருத்துவர்,
   ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி டீன்,  
     (தினமலர் 13/01/2013 நாளிதழில்  கொடுத்த தகவல்.)
                    வணக்கத்துடன் 
                          கூடிய
                     நன்றிகளுடன்,
             தாளவாடி பரமேஸ் டிரைவர் 
                 சத்தியமங்கலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...