19 ஏப்ரல் 2013

தண்டுவடம் பிரச்சினைகள்




     மரியாதைக்குரிய நண்பர்களே,
            வணக்கம். இந்த வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்தப்பதிவில்
தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும் பற்றி காண்போம்.

          வாகன விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்கிறது ஆய்வு. மோசமாக பராமரிக்கப்படும் சாலைகளும், தரமாகப் பராமரிக்கப்படாத வாகனங்களுமே இதற்குக் காரணம் என்றும் விவரிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய முதுமைக்கு முன்னரே கழுத்து, மார்பு, இடுப்பு மற்றும் மூளை பகுதிகளில் பாதிப்பை வரவழைத்துக்கொள்கிறான்.
           மூளையும், தண்டுவடமும் இறைவன் நமக்களித்த கொடை என்றே சொல்லவேண்டும். தண்டுவடத்தைப் பொருத்தவரை, அதனை மூன்று பகுதிகளாக பிரித்து வைத்திருக்கிறோம். கழுத்துப் பகுதி தண்டுவடம், இடுப்பு பகுதி தண்டு வடம் மற்றும் மார்புப் பகுதி தண்டுவடம் என்று மூன்று பிரிவாக பிரித்து வைத்திருக்கிறோம். தண்டுவடத்தில் உள்ள எலும்புகளுக்கிடையே டிஸ்க் என்றழைக்கப்படும் மெத்தைபோன்ற பகுதி உள் ளது. இதன் பயன்பாடு மிக முக்கியமானது. விபத்தின்போது குறிப்பிட்ட சில எலும்புகள் பாதிப்பிற்குள்ளாகி தண்டுவடத்தின் மீது அழுத்தத்தைக் கொடுக்காமலிருப்பதில் இதன் பங்களிப்பு முக்கியமானது. முதுகெலும்பில் அடிப்பட்டாலும், அது ஏனைய எலும்புகளைப் பாதிக்காதவண்ணம் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த டிஸ்க்கில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் தண்டுவடம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கை, கால் பகுதிகள் பாதிக்கப்பட்டு செயலிழக்கும் நிலை உருவாகிறது. ஒரு சிலருக்கு தண்டுவடத்தைச் சுற்றிலும் ஏற்படும் கிருமித் தொற்றின் மூலமும் தண்டுவடம் பாதிக்கப்படலாம். புற்றுநோயால் கூட தண்டுவடம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
தண்டுவடம் பலவீனமாக இருக்கிறது என்பதையோ அல்லது தண்டுவடம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையோ எப் படி உணரமுடியும்?
மூளையில் உள்ள அனைத்து நரம்புகளும் தண்டுவடத்தின் வழியாகத்தான் உடலின் மற்ற பாகத்திற்கு எடுத்துச்செல்லப்படு கின்றன. தண்டுவடத்தின் மூலமாக செல்லும் நரம்புகளே நம்மை இயங்க வைக்கும் சக்தியைப் பெற்றிருக்கின்றன. தண்டுவடத்தில் ஏதேனும் ஒரிடத்தில் சிக்கல் என்றால், அப்பகுதியில் உள்ள நரம்புகளின் மூலம் செயல்படும் பகுதிகளில் அதன் பாதிப்பு தெரியவரும். குறிப்பாக அப்பகுதிகளில் உணர்ச்சி குறைவாக இருக்கும். சிறுநீர் கழிப்பதிலோ அல்லது மலம் கழிப்பதிலோ ஏதேனும் சிக்கல்கள் எழும். அதனால் நோயாளியை முழுமையாகப் பரிசோதித்த பின்னரே எப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறி முடியும்.
உடற்பருமன் மற்றும் முதுமை காரணமாக தண்டுவடம் பாதிக்கப்படுமா?
     கழுத்துப்பகுதி மற்றும் இடுப்புப்பகுதி தண்டுவடம் தேய்மானம் காரணமாக பாதிக்கப்படுவது இயற்கை. ஏனெனில் இவையிரண்டும் அதிகமாக பயன்படுத்தப்படும் உடலுறுப்பு பகுதிகள். கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுவடத்தில் தேய்மானம் ஏற்பட்டால் கை, கால்கள் செயலிழப்பதற்கான வாய்ப்பு உண்டு.

இடுப்பு பகுதியில் உள்ள தண்டுவடத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால் கால்களின் செயல்பாட்டைப் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. முதுமையின் காரணமாகவும், உடலில் கால்சியம் சத்தின் குறைவினாலும் தான் இவை ஏற்படுகிறது. முறையான உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகியவற்றினை ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்ந்தால் இதனைத் தவிர்க்க முடியும்.


இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு கழுத்துப்பகுதியில் ஏற்படும் பாதிப்புக்கு, அப்பகுதியில் அணியக்கூடிய பட்டை ஒன்றை வழங்கி நிவாரணம் தருகிறார்கள். ஆனால் இதனைத் தொடர்ந்து அணியக்கூடாது என்கிறார்களே ஏன்?
கழுத்துப்பகுதி தண்டுவடத்தில் ஏழு எலும்புகள் உள்ளன. இரு சக்கர வாகனத்தில் உள்ள ஷாக் அப்ஸர்களில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது கரடுமுரடான பாதைகளில் தொடர்ந்து பயணித்தாலோ கழுத்துப்பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானமடைந்து பாதிக்கப்படுகின்றன. இதில் கழுத்தில் உள்ள எலும்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அதனிடையே உள்ள பாதுகாப்பான பகுதியான  டிஸ்க் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டலோ அதிலிருந்து தற்காலிக நிவாரணம் பெறவே கழுத்துப் பகுதியில் அணியக்கூடிய பட்டையை அதாவது சர்வைகல் காலரை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். கழுத்துப்பகுதியில் வலி அதிகமாக இருக்கும் போது மட்டுமே இதனை பயன்படுத்தவேண்டும். தொடர்ந்து பயன்படுத்தினால் கழுத்துப் பகுதியில் இயற்கையாக நடைபெறும் செயல்பாடுகளில் சமச்சீரின்மை ஏற்படும்.


இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது தலை கவசத்தை அவசியம் அணிந்துக் கொள்ளுங்கள். நான்கு சக்கர வாகத்தை ஓட்டும் போது சாரதியும், உடன் பயணிப்பவர்களும் அவசியம் பாதுகாப்பு உறையை அணிந்தகொண்டே பயணிக்கவேண்டும். ஏனெனில் வரும் முன் காப்பதில் கவனம் செலுத்துவது தான் சிறந்தது.


    . இதயம், மூளை மற்றும் முதுகொலும்பிலான தண்டுவடம் ஆகியவற்றிலான எவ்வித நலக்குறைவுகளும் மிக சிக்கலானதாக எண்ணப்படுகின்றன. ஆனால் தண்டுவடத்தில் ஏற்படும் சிதைவால் அல்லது காயத்தால் தொடர்பற்று போகின்ற மூளை அனுப்பும் செய்தி தொடர்புகள் சிறு நரம்பு இழைகளால் தன்னிச்சையாகவே குணமாக்கப்படுகின்ற திறன் நமது உடலில் உள்ளது என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளது மருத்துவத் துறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்னலாம்.
மனதில் நினைக்கப்பட்ட ஒரு செயல் நிறைவேற்றப்பட மூளை உடல் உறுப்புகளுக்கு கட்டளையிடுகிறது. இந்த கட்டளை செய்திகள் நரம்பு மண்டலம் மூலம் உடல் உறுப்புகளுக்கு அனுப்பப்படுகிறது. கட்டளைகளை எடுத்துச் செல்லும் நீளமான நரம்பு இழைகள் மற்றும் சிறு நரம்பு இழைகள் நமது இயங்குதிறனில் மிக முக்கிய பங்கு ஆற்றுபவை. குறிப்பாக தண்டுவடப்பகுதியில் அதிக அளவிலான இத்தகைய முக்கிய நரம்பு இழைகள் அமைந்துள்ளன. தண்டுவடத்தில் ஏதாவது சிதைவு ஏற்பட்டுவிட்டால் அது நரம்பு இழைகளை பாதிப்படைய செய்வதோடு நமது இயக்குதிறனிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

இவ்வாறு தண்டுவடத்தின் மேலும் கீழுமாக அமைந்துள்ள நரம்புகள் திரும்பபெற முடியாத அளவு முடமாகி போகின்ற காயங்களை கூட கடந்து இயங்க கூடியவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய நரம்பு மண்டலம், மூளைக்கும் நமது இயக்கங்களை கட்டுபடுத்தும் நரம்பு இழைகள் உயிரணுக்களுக்கும் இடையில் சிறிய நரம்பு வழிப்பாதைகளை உருவாக்கி தடைப்பட்ட செய்தித்தொடர்புகளை தானாகவே மாற்றியமைக்கும் திறன் கொண்டது என தெரிய வந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கல்போர்னியா பல்கலைக்கழகத்தில் சோதனை எலிகளின் மீது நடத்தப்பட்ட முடிவுகள் இதனை முதல் முறையாக எடுத்துக்காட்டியுள்ளது. திகைப்புட்டக்கூடிய இந்த கண்டுபிடிப்பு சிதைவுற்ற தண்டுவடத்திற்கு புதிய சிகிச்சை முறைகளுக்கான பாதைகளை திறப்பதோடு, வலிப்பு மற்றும் பலவித நரம்புதசை நோய்களின் காரணத்தையும் அறிய செய்யும். மூளை நடப்பது அல்லது ஓடுவது ஆகியவற்றை கட்டுபடுத்தும் செய்திகளை நீளமான நரம்பு இழைகள் மூலம் அனுப்புகிறது. சாலை அல்லது விளையாட்டு விபத்தில் இந்த நீளமான நரம்பு இழைகள் நசுக்கப்பட்டால் அல்லது காயப்படுத்தப்பட்டால் செய்தி தொடர்புகளுக்கான பாதை தடைபடுகிறது. விளைவு இயக்கம் குறைகிறது அல்லது முடம் ஏற்படுகிறது. பிறப்பிலேயே மூளை அமைக்கப்பட்டுள்ளது என்றும் சிதைவை அல்லது காயத்தை ஏற்கும் திறன் அதற்கு கிடையாது என்றும் இதுவரை எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் மூளை காயங்களுக்கு தக்க பதிலளித்து தன்து வழிமுறைகளை மாற்றி அமைத்து கொள்ளும் சிறந்த திறன் கொண்டது என இந்த புதிய கண்டுபிடிப்பு எண்பித்துள்ளது என்று இவ்வாய்வை நடத்திய நரம்பியல் நிபுணர் மைக்கிள் சொஃரோனைவ் AFP செய்தியில் தெரிவித்துள்ளார். இதனை விளக்குவதற்காக மூளையிலிருந்து தண்டுவடத்தின் கீழ்ப்பகுதி வரை இருக்கக்கூடிய நீளமான நரம்பு இழைகளையும் அதனோடு அதே வேலையில் உதவி செய்கின்ற சிறு நரம்பு இழைகளையும் ஒப்பிட்டு கூறியுள்ளார். நெடுஞ்சாலைகளில் விபத்து அல்லது வாகன நெரிசல் ஏற்பட்டுவிட்டால் அதிக நேரம் காத்திருப்பதற்கு பதிலாக வாகன ஓட்டுனர்கள் சுற்று அல்லது மாற்றுப்பாதைகளில் புகுந்து கடந்து செல்வதுண்டு. இத்தகையப் பாதைகள் நேரான நெடுஞ்சாலையில் பயணம் செய்வதைவட சிறிது அதிக நேரம் எடுத்தாலும் ஓட்டுனர்கள் சென்று சேர வேண்டிய இடங்களை அடைய உதவுகிறது. அதைபோல தண்டுவடம் என்பது நமது உடலிலான நெடுஞ்சாலை. அதில் ஏதாவது சிதைவு ஏற்பட்டுவிட்டால் இவ்வாறு மேலும் கீழுமாக செல்லக்கூடிய சிறு நரம்பு இழைகள் மாற்றுப்பாதைகளை அமைக்கின்றன. இந்த மாற்றுப்பாதைகள் மூளை அனுப்புகின்ற செய்திகளை முறையாக பெற செய்வதோடு முடமாவதை தடுத்து நம்மை இயங்க செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தண்டுவட சிதைவு பிரச்சனை என்பது நமக்கில்லையே ஏன் நாம் கவலைப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? உலக அளவில் தண்டுவடப் பகுதியில் ஏற்படும் சிதைவு முக்கியமான பிரச்சனையாக வளர்ந்து வருகிறது
தண்டுவட பிரச்சனை ஏற்பட்டதென்றால் தன்னிச்சையாக சிறு நரம்பு இழைகள் அதனை குணப்படுத்தும் என பாராமுகமாய் இருந்து விடாதீர்கள். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ துறைக்கு அதிக சவால்களை கொடுத்து நாம் நலம் பெறும் கால அளவை குறைப்பதை ஏதுவாக்கும். இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் நாம் முடமாகி போவோம் என்ற எதிர்மறையான நம்பிக்கைகளை தகர்த்து மறுவாழ்வு பெறக்கூடிய ஆழமான நம்பிக்கைகளை ஏற்படுத்த முடியும்

நன்றிங்க என 
        THALAVADY PARAMES DRIVER 
              SATHYAMANGALAM

            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...