27 நவம்பர் 2012

மொபைல் போன் கதிர்வீச்சு-


                          அன்பு நண்பர்களே,
                                                 வணக்கம்.

          மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க !!!

         (1)மொபைல்
போனை அளவோடு பயன்படுத்தவும்.

       (2)
கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.

       (3)
போனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும்.

       (4)
மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ளதா? பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.

       (5)
குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும்.

       (6) முடிந்தால் 
டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும். பேசுவதனைத் தவிர்க்கவும்.
      (7)இரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம்.

    (8)
பயன்படுத்தும் அல்லது வாங்கப் போகும் போனின், கதிர்வீச்சு எந்த அளவில் இருக்கும் என்பதனைப் பார்க்கவும். கதிர்வீச்சு அளவு தெரியாத போனைப் பயன்படுத்த வேண்டாம். ஆபத்து அளவிற்குள்ளாக உள்ள போனை மட்டுமே பயன்படுத்தவும்.
         (9)உங்கள் அருகே லேண்ட் லைன் போன் உள்ளதா? மொபைல் போனுக்குப் பதிலாக அதனையே பயன்படுத்தவும்.

  (10)
உங்கள் கேசம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை.

  (11)
குழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது. அவர்களின் உடல் எலும்புகள், மிக மிருதுவாக இருப்பதால், கதிர்வீச்சினை வெகுவாக ஈர்த்துக் கொள்ளும். எனவே அவர்கள் போன் பயன்படுத்துவது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

ஆகாயவிமானம் பறப்பது எப்படி?


மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். இங்கு அறிவியலையும் காண்போம்.


                விமானம் பறப்பது எப்படி?



இன்று
வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்




ஒரு
பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A-
ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B-
முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C
-கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D-
பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு
விமானம் ஒரே உயரத்தில் , நேராகப் பறக்க இந்தக் கணிதக் கூற்று சமமாக இருக்க வேண்டும்

Weight=Lift


Drag=Thrust


த்ரஸ்ட்
, டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக்
த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின்
எடைலிப்ட்விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின்
லிப்ட்விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி
பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே
போல விமானத்தில்டிராக் விசையை கொடுப்பதுகாற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே காரணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.அதாவது வேகம் குறையாது.
                    விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன?. காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வைத் தடுப்பதற்காகத்தான் உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது.
            விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை .
விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது? னப் பார்ப்போம்.

ஹெலிகாப்டரின்
மேலெழும்பு விசை அதன் மேலிருக்கும் விசிறி சுழலுவதால் கிடைக்கிறது.ஆனால்  விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது? என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில்
விமானத்தின் மேலெழும்பு விசையைத்  தருவதும் அதே எஞ்சின்தான்சற்று மறைமுகமாக!!

விமானத்தின்
மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் (1)இறக்கை,(2) விமானத்தின் வேகம், மற்றும்(3) காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் மேலெழும்பும் (தூக்கும்) சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின்
இறக்கையைக்  கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று  மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்ப்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையைப் பார்த்தால் கூட கண்ணுக்கு எளிதாகத் தெரியாது, அதை தொட்டுப் பார்த்தால்தான் தெரியும்.

இந்த
மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
            காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறத்தில்  ஒரு குறைந்த காற்றுஅழுத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்ப்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிகக் காற்றழுத்தம் மற்றும்  ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழுத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
       விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்.
       அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவு உள்ளதாக இருக்கும்.
       இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மானிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மானிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான்
விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகாப்டருக்கு வராது)

இது
எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம்
ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிக்கும்போது, சில ஓட்டு வீட்டு கூரைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான்
குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு
டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

22 நவம்பர் 2012

20-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு-2012










அறிவியல் அறிவு-01


மரியாதைக்குரியவர்களே,
                                        வணக்கம்.
         இதற்கு கருத்துரை தேவையில்லை என நினைக்கிறேன்.







  

மரியாதைக்குரியவர்களே இது எனது முகநூல் பதிவில் எடுத்த படம்.எனவே தாங்கள் தயவுசெய்து  அதன் வாசகங்களை மட்டும் படிக்க வேண்டாம்.கருத்துக்களை புரிந்து கொள்ளுங்கள். நன்றிங்க!


முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...