30 ஜனவரி 2011

உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் 01-12-2010 தாளவாடி

அன்பு நண்பர்களே,                                                                                                                          
          
            ணக்கம், நமது தேனீக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பாக கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து தாளவாடி வட்டாரத்தில் உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்  மேற்கொள்ளப்பட்டது.
                                         ரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் திரு;பி.எஸ்.சுப்பராயன் எம்.பி.பி.எஸ்.,அவர்கள் பையனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் எயிட்ஸிலிருந்து நம்மைப் பாதுகாப்பது பற்றியும்,எயிட்ஸ் நோய்க்கு ஆளானவர்களிடம் அன்பாக அணுகி நடந்துகொள்வது பற்றியும் நோயாளிகள் முறையான சிகிச்சை மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழும் முறை பற்றியும் விவரித்தார்.                     
     
             ங்கு சுமார் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.இந்த இயக்கத்தில் கோபி கலை&அறிவியல் கல்லூரி இளஞ்செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் பேராசிரியர்கள் திரு;சீனிவாசன் மற்றும் திரு;விஜயக்குமார் இவர்களுடன் இணைந்து தேனீக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.2000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்தும், தாளவாடி வட்டாரத்தில் சுவற்றில் ஒட்டியும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒரு வார காலம் செய்யப்பட்டது.      என.......
               
HONEY BEES SOCIAL ORGANIZATION                                

                                       SATHY & THALAVADI

29 ஜனவரி 2011

தேனீக்கள் சமூக சேவை அமைப்பு-சத்தி&தாளவாடி


                     
               

        
      தேனீக்கள் சமூக சேவை அமைப்பு - 86 / 2010                                           தாளவாடி மற்றும் சத்தி- (பதிவு)                                                                                                                                                                                                                                           னைவருக்கும் எங்களது HONEY BEES SOCIAL ORGANIZATION சார்பாக வணக்கம்.                                                                                                                               நாம் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் நமக்காக,நமது குடும்பத்திற்காக,நமது உறவினர்களுக்காக,நமது நண்பர்களுக்காக,நமது ஊருக்காக,நமது நாட்டிற்காக நம்மால் இயன்ற அளவு உதவிகளை, சிறுகச்செய்தாலும் சிறக்கச்செய்ய வேண்டும்! என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்த  தேனீக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.    

                தேனீக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம்-என்ற இந்த சமூக சேவை அமைப்பு கடந்த 15-07-2010 அன்று 'கல்வித்தந்தை' கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்கள் பிறந்த நாளாம் கல்வி வளர்ச்சி நாளன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 
   
             ந்த அமைப்பை எக்காரணம் கொண்டும் சுயநலனுக்காகவோ,தவறாகவோ, அரசியல் ஆதாயத்திற்கோ பயன்படுத்தக்கூடாது என்ற உறுதிமொழி ஏற்போமாக.
                                              என                                                                                                                                                                                                                                                  
           ,HONEY BEES SOCIAL ORGANIZATION / SATHY & THALAVADI.                   
                                                                       நன்றி!

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...