05 ஏப்ரல் 2016

காலைக்கதிர் நாளிதழ் ஈரோடு பதிப்பு.......


தேர்தல் கமிஷனின் விதிமுறைகளும் சமூக ஆர்வலர்களின் எண்ணங்களின் பதிவுகளும்............

வருவது தெரியும்! போவது எங்கே?
பறக்கும்படைக்கு நுகர்வோர் சங்கம் சார்பாக எனது கேள்வி...
மரியாதைக்குரியவர்களே, அனைவருக்கும் வணக்கம்.சத்தியமங்கலம் வட்டம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவரும் பிரபல செய்தியாளருமான திரு.வேலுச்சாமி ஐயா அவர்களிடம் நான் முன் வைத்த கேள்வியும் அதற்கான பதிலை சேகரித்து நேற்றைய அதாவது2016 ஏப்ரல்5ந் தேதியிட்ட ஈரோடு பதிப்பில் 6 வது பக்கத்தில் வெளியான செய்தியும் தங்களது பார்வைக்காக பதிவிடுகிறேன்.(நாளிதழ் செய்தி நகலை பின்னர் பதிகிறேன்.)

வருவது தெரியும் போவது எங்கே?
பறக்கும் படைக்கு நுகர்வோர் சங்கம் கேள்வி

பணம் எடுத்துச்செல்வோரிடம் உரிய ஆவணம் கேட்கும் பறக்கும்படை அதிகாரிகள்அந்தப் பணம் எங்கு சென்று சேர்கிறது என்பதைக் கண்காணிக்காமல்,பணப்பட்டுவாடாவைத் தடுப்பது எப்படி? என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பின் மாநில செயலாளர் பரமேஸ்வரன் கூறியதாவது!

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பறக்கும்படையினர் வாகனங்களை சோதனை செய்து,ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது..இதில் அந்த பணம் கறுப்பு பணமா?இல்லையா? என்பதை மட்டுமே கண்டறிய முடியும்.ஆனால் தேர்தல் கமிஷனின் நோக்கமே வாக்களர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பதுதான்.அப்படியானால் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறியும் பறக்கும்படை அதிகாரிகள் அந்த பணம் எங்கு சென்று சேர்கிறது என்பதையும் தீவிரமாக கண்காணித்தால் மட்டுமே தேர்தலில் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க முடியும்.அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து பவானிசாகர் தேர்தல் அலுவலர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது,அவர் கூறியதாவது; பணத்தை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதற்கு தகுந்த ஆவணம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் பறிமுதல் செய்து உரிய ஆவணத்தை காட்டிய பிறகு ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்களுக்கு உத்தரவு.தேர்தல் கமிஷன் வகுத்துக்கொடுத்த விதிமுறைகளை நாங்கள் செயல்டுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறாக செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.தங்களது கருத்துக்களையும் இங்கு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஜனநாயகம்தழைக்க
சமூக நலன் கருதி
அன்பன் பரமேஸ்வரன்,9585600733

09 மார்ச் 2016

எளிதான பயணம், மோசமான விபத்தானது!


சிந்தியுங்க!
இது தலைவிதி அல்ல.சாலைவிதி மதியாமையே !..


மரியாதைக்குரியவர்களே,
                 அனைவருக்கும் வணக்கம். கடந்த 2016 மார்ச் 6 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கோபி அருகிலுள்ள பவளமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற எனது உறவினர் இல்ல திருமண விழாவிற்காக அன்றை அதிகாலை5.45 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து TN59/ 0304 எண்ணிட்ட பயணிகள் ஆட்டோவில் என் உறவினர் லோகநாதன்,சரஸ்வதி ஆகியோருடன் பயணித்தபோது கோபி - பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவு கறிக்கடை அருகில் சைக்கிளுடன் மோதி ஆட்டோ கவிழ்ந்து உருண்டதில் எனக்கு தலையில் ஆட்டோவின் இரும்பு பட்டா குத்தி வெட்டுக்காயமும்,இடுப்பில் மொக்கை அடியும்,காலிலும் கையிலும் சிராய்ப்புக்காயமும்,லோகநாதனுக்கு நெற்றியிலும் கையிலும் சிராய்ப்பு மற்றும் மொக்கை அடியும்,சரஸ்வதிக்கு தோள்பட்டையின் இரு பக்கமும் உள்ள முன் காரை எலும்புகளும் உடைந்தும் ,ஆட்டோ ஓட்டுநருக்கு காலில் அடியும்,சைக்கிள் ஓட்டிவந்தவருக்கு தோள்பட்டை அடிபட்டும் மோசமான விபத்து ஏற்பட்டுவிட்டது.தகவலறிந்த உடனே கோபி பேருந்துநிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் விரைந்து வந்து எங்களை மீட்டு கோபி அபி மருத்துவமனையில் சேர்த்தனர்.சைக்கிள் ஓட்டியை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
 


சரி...
        விபத்துக்கு காரணம் என்ன? என்பதை அறிவோம்.
நாங்கள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரின் எதிர்பார்ப்பில்லா இயக்கமும்,எதிரில் வந்த மற்ற வாகனங்களின் டிம் செய்யாத பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சமும்,சாலைவிதி அறியாத சைக்கிளோட்டியின் சாலையில் குறுக்கிட்டதும்தான்! மிக எளிதான சாலைப்பயணத்தை மிக மோசமான விபத்துக்கு ஆளாக்கிவிட்டன.
(1)ஆட்டோ ஓட்டுநர் எதிரில் வந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தால் கண் கூச்சமடைந்தபோது பாதையின் தன்மை தெரியாத சூழலில் ஆட்டோவின் வேகத்தை குறைத்து தற்காப்புடன் ஓட்டத் தவறியது.
(வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோ இருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது).
(2)எதிரில் வந்த வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தும் ஹெட்லைட்களின் வெளிச்சத்தை தாழ்த்தாமல் பிரகாசமான வெளிச்சத்துடன் ஓட்டியது.
(இரவு நேர இயக்கத்தில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு கண் கூசும் பிரகாசமான வெளிச்சத்தை தாழ்த்தி இயக்கியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)
(3)சைக்கிள் ஓட்டி வாகனங்களின் பின்னால் சாலையில் வரும் மற்ற வாகனங்களைக்கவனிக்கத்தவறி குறுக்கிட்டது. 

(வாகனங்கள் கடந்தவுடன் சாலையில் மற்ற வாகனங்கள் போக்குவரத்து செய்கின்றனவா?என இரு புறமும் கவனித்து சாலையை கடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)

           இது போன்ற காரணங்களால் ஆட்டோ ஓட்டுநர் மிக குறைந்த இடைவெளியில் கண்ட சைக்கிள் மீது மோதாமல் இருக்க தான் சென்ற வேகத்திலேயே வலது பக்கமாக திருப்பியும் சைக்கிள் மீது மோதி ஆட்டோ உருண்டு கவிழ்ந்து மிக மோசமான விபத்தை ஏற்பட்டது.இதனால் எங்கள் உறவினர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போனதுடன்,அன்றைய தினம் எனது பணியான பேருந்து இயக்குவதற்காக தாளவாடிக்கு செல்ல முடியாமல் போனது.என் உறவினர் லோகநாதனுக்கு சென்னை செல்லும் (மென்பொருள் பொறியாளர்) பணியும் தடைபட்டது.உறவினர் சரஸ்வதிக்கு இரு தோள்பட்டைகளும் எலும்பு முறிவு ஏற்பட்டு சொல்லமுடியாத வேதனையுடன் கோபிசெட்டிபாளையத்திலுள்ள  அபி S.K.மருத்துவமனையில் இருநாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் ஈரோடு அருகில் உள்ள பவானி பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள 
(டாக்டர் M.A.N.லோகநாதன் ,MBBS.,MS(Ortho)மருத்துவமனை-
            தொலைபேசி எண் 04256 - 231702) 
          விபத்து எலும்புமுறிவு,முதுகு தண்டுவட -மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனையில் இரு பக்க எலும்புகளும் அறுவை சிகிச்சை செய்யப்படுள்ளது.ஆட்டோவும் சேதம் ஏற்பட்டுள்ளது.ஆட்டோ ஓட்டுநரும் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக தகவல்...சாலைப்பயணத்தில் விபத்துக்கு காரணம் சாலையில் போக்குவரத்து செய்யும் அனைவரின் அலட்சியத்தால் பயணித்த நாங்கள் மருத்துவமனையிலும்,பணிக்கு செல்லமுடியாமலும்,உறவினர்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நேர இழப்பும்,அலைச்சலும்,மன வேதனையும் உடல் வேதனையும் என துன்பங்களோடு இழப்புகளையும் சந்திக்க நேர்ந்துவிட்டது...இது தலைவிதி அல்ல.சாலைவிதி மதியாமையே !..

07 ஜனவரி 2016

நூலகம் பேசுது



Friday, July 15, 2011

 

26) நூலகம் பேசுது-கோபி கலை & அறிவியல் கல்லூரி

                      + நூலகம் பேசுது+
    நூலகத் தந்தை; Dr.Shiyali Ramamrita Ranganathan (09AUG1892 -27SEP1972)
        



     1) என்னைத் தேடி நீ வந்தால்!, உன்னைத்தேடிஉலகம் வரும்!!    
    2)  கற்றோர் கற்கின்ற அறிவகம்!, கரங்கூப்பி வரவேற்கும் அன்பகம்!!
     3) அறிவுப் பசிக்கு விருந்தகம்! அறியாமைப் பிணிக்கு மருந்தகம்!!
    4) அறிவால் உயர்ந்து அரியாசனம் அமர்வோம்! நூலகம் நமக்கு ஓய்வு நேர உலகம்!!
    5)  புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம்! உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்!!
     6) வாசிப்போம்! மாத்தி யோசிப்போம்!!
         7)ஒரு தீக்குச்சியில் ஒளிந்திருக்கும் நெருப்பு என்னும் அபரிமிதமான ஆற்றலைப் போல் உன்னுள் ஒளிந்திருக்கிறது ஓராயிரம் ஆற்றல்!?! என்னைப்  பயன்படுத்தினால்! சிறு நெருப்பாற்றலால் அறையில் பரவும் வெளிச்சத்தைப் போல் பிரகாசிக்கும் உனது ஆற்றல்!!
     8)  திட்டமிடலும், நேர நிர்வாகமும் அவசியம்! குறிப்பெடுக்கக் கற்றுக்கொள்!!
  9) தன்னம்பிக்கை!, குறிக்கோள்!!, திறமை!!! இவையே  தகுதி ஆகும்.  
 
             நூலக வளங்களும்-வழங்கப்படும் சேவைகளும்
             கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி-கோபி


   அன்பு நண்பர்களே,
             paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
        நம்ம ஊர்க் கல்லூரியான கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்நூலகம் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
                 இது பாரதியார் பல்கலைக் கழகத்திலேயே சிறந்த இரண்டாவது நூலகம் ஆகும்.
              இந்த நூலகத்திற்கு Dr.K.S. JANAKARATHINAM MEMORIAL LIBRARY என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
          1) நூலகம் பரப்பளவு =  34,225 சதுர அடி ( கலைப் பிரிவு , அறிவியல் பிரிவு, கணிணிப் பிரிவு, பத்திரிக்கைகள் பிரிவு, ஆராய்ச்சிப் பிரிவு,சிவில் சர்வீஸ் , டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக்கொள்ள என்றே தனிப் பிரிவு ,பழைய கேள்வித்தாள்கள் சேகரிக்கப்பட்ட பிரிவு,பழைய பத்திரிக்கைகள்+ சஞ்சிகைகள் சேகரிக்கப்பட்ட பிரிவு ,முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள்  சமர்ப்பித்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் சேகரித்து வைத்துள்ள பிரிவு 

           என (256 பீரோக்கள்) ஏழு அறைகளில்  பாதுகாக்கப்பட்டு வருவதும், தேவைப்படும் மாணவர்களுக்கு உடனடியாக எடுத்துக் கொடுப்பதும் இக் கல்லூரியின் தனிச் சிறப்பு ஆகும்.)
   
        2)  இக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட  மென்பொருள் -நூலகம் எனப் பெயரிடப்பட்டு அதன்( NOOLAGAM-SOFTWARE )மூலம் இந்த நூலகத்தின் அனைத்துக் கணினிகளும் செயல்படுகின்றன. மற்றும்


      3)  அ) கையகப்படுத்துதல் -(Acquisition )
  ஆ)தகவல் சேகரிப்பு _ (Data base )
   இ) புத்தகங்களை சுழற்சி முறையில் வழங்கல் -( Circulation)
   ஈ) தேடல் - (Book Search)
  என நான்கு வகைகளில் ( Management )நிர்வகிக்கப்படுகிறது
        4)  மாணவர்களுக்கு புத்தகம் கொடுக்க மற்றும் திருப்பி வாங்க -  குறியீடு படிப்பி  என்னும் பார்கோடு (Bar coding System) முறையில்செயல்படுகிறது.
      5) இருக்கைகள்  அளவு = 700  (மாணவர்கள் அமர்ந்து படிக்க) எண்ணிக்கை (READING ROOM SEATING CAPACITY = 700 )
       6)வேலை நேரம் =  காலை 09.00மணி  முதல் மாலை 06.00மணிவரை
           (எந்நேரமும் நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி உண்டு )
        7)இருப்பில் உள்ள புத்தகங்கள் எண்ணிக்கை =  56,624  புத்தகங்கள் ஆகும்.  Number of Volumes = 45,681  இவை தவிர
         8)  ஒவ்வொரு துறைகளிலும் புத்தகங்கள் தனித்தனியாக ஆயிரக் கணக்கில் உள்ளன.
        9) REFERANCE SECTION - ல் விலை உயர்ந்த மற்றும் அரியவகை புத்தகங்கள் 4,000 எண்ணிக்கையில் உள்ளன.
       10)  பத்திரிக்கைகள்,சஞ்சிகைகள் ,செய்திக்குறிப்புகள்-   நடப்புகள் SHELF-ன் முன்பகுதியில் காணத்தக்கவகையிலும், பழையவைகள் SHELF-ன் உள்பகுதியில்(Trolley) இலகுவாக  எடுக்கும் வகையிலும்  அலமாரிகள்  (DISPLAY- RACK's ) -கள் அமைக்கப்பட்டுள்ளன.
         11)     மற்றும் BLIS  ;  MLIS மாணவர்களுக்கான செய்முறை வகுப்புக்குப் பயன்படும் அரியவகை கேட்லாக் புத்தகமும் (மதிப்பு ரூபாய்  =  35,000- 00) உள்ளது.   
       12)     நூலகத்தினை அதிகமாகப் பயன்படுத்தும் மாணவர்களில் ஒவ்வொரு வருடமும் இளங்கலை மாணவர்கள் பத்து நபர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் பத்து நபர்கள் வீதம் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பாக நூலகத்தைப் பயன்படுத்தியமைக்கான சிறப்பு விருது ( BEST USER AWARD ) வழங்கப்படுகிறது.
  
       13)   நூலகத் துறை சார்பாக  04-09-2009-ல் " CHANGE MANAGEMENT IN LIBRARY AND INFORMATION SERVICES " -என்னும் தலைப்பில் மாநில அளவிலான ஆராய்ச்சி மாநாடு மற்றும் 
      23-ந்தேதி மற்றும் 24-09 -2010 -ல் "INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY ( I.C.T ) IN LIBRARY SERVICE ; A GLOBAL SCENARIO " - என்னும் தலைப்பில் தேசிய அளவிலானஆராய்ச்சி மாநாடுஆக இரண்டு மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 


   .சென்னை,பெங்களூரு,மைசூரு,திருச்சி,கோவை,கரூர்,ஈரோடு,நாமக்கல்  உட்பட பல்வேறு ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான நூலகங்கள் , உதவி நூலகங்கள்,மாணவர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்புகளைத் தாக்கல் செய்து  பல்வேறு அமர்வுகளாக மாநாடு (SEMINAR )நடத்தப்பட்டுள்ளன. 


  14) அதேபோல் 31 -01 2009 - ல் " MODERN LIBRARY MANAGEMENT " என்னும் தலைப்பில் மாநில அளவிலான SYMPOSIUM ( நூலகத்தைப் பற்றி பல நூலகர்கள் ; மாணவர்களால்  எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு ) -நடத்தப்பட்டுள்ளது.
                 
    
    15)   இந்த நூலகம் பற்றி MLIS மாணவர்கள் இருவர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி உள்ளனர்.
    
      5) நூலக அலுவலர்கள் விபரம்;
       
        நூலகப் பொறுப்பாளர் =  ஒருவர்
        உதவி நூலகர்கள்  =  மூன்று நபர்கள்
       நூலக உதவியாளர் = ஒருவர்
      கணினியியலர் =  ஒருவர்
      எழுத்தர்                 =  ஒருவர்
      துப்புரவாளர்  =  ஒருவர்
  




7) புத்தக இருப்பு 15-07-2011-ன் நிலவரப்படி
    1) பொது மேலாண்மைத் துறை =9435 புத்தகங்கள்,
    2) கணினி அறிவியல் துறை      = 9318 புத்தகங்கள்,
    3) பொருளாதாரம் துறை             =  6693 புத்தகங்கள்,
     4)ஆங்கிலம் துறை                        =  5059 புத்தகங்கள்,
    5)  இயற்பியல் துறை                    =  4458 புத்தகங்கள்,
   6) கணிதம் துறை                             =  4310 புத்தகங்கள்,
   7) வேதியியல் துறை                      =2445 புத்தகங்கள்,
   8) தாவரவியல் துறை                  = 2184 புத்தகங்கள்,
   9) வரலாறு துறை                           = 1804 புத்தகங்கள்,
  10)  தமிழ்த் துறை                             = 1967 புத்தகங்கள்,
  11)  அரசியல் துறை                        = 1069 புத்தகங்கள்,
  12) உளவியல் துறை                     =0 911 புத்தகங்கள்,
 13) விலங்கியல் துறை                 =0899 புத்தகங்கள்.












என 56,624 புத்தகங்கள்  நூலகத்தில் மட்டும் உள்ளன.
இவை தவிர புத்தக வங்கி என்று தனிப் பிரிவு ஒன்று உள்ளது.இந்த புத்தக வங்கியில் உள்ள புத்தகங்கள் நன்கு படிக்கும் மாணவ,மாணவியருக்கும் மற்றும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கும் ஆண்டு முழுவதும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கு பதினைந்து நாட்கள் காலக்கெடு வைத்து அனுமதிக்கப்படுகிறது.
  




  முக்கியமாக சி.டி. நூலகமும் 2300 சி.டி. களுடன் சோதனைக்கான கணினியுடன் உள்ளது. இதில் NATIONAL GEOGRAPHIC-சி.டி.கள்  1888-ம் ஆண்டு முதல் வைத்து மாணவர் நலனுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
  
     பொது அறிவுக்கான புத்தகங்கள் GENERAL STUDIES, MANORAMA YEAR BOOK -1970-ம் ஆண்டு முதல் இன்று வரையிலான புத்தகங்கள், மற்றும் BANKING, UPSC, TNPSC, MAT, SAT, SLET, NET, GATE, GMAT, TOFEL, MBA, MCA,  போன்ற போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் அதிக அளவில் உள்ளன.

    


        தினசரிப் பத்திரிக்கைகள் (Journals),
      வார,இருவார,மாத,வருடப் பத்திரிக்கைகள்  (Magazines),
      செய்திக் குறிப்புகள் (Bulletin), ஆகியன 
     பன்னிரண்டு துறைகளுக்கும் சேர்ந்து  
     தேசிய அளவில்(National) = 130 பத்திரிக்கைகளும்,
    சர்வதேச அளவில் (International) = 13 பத்திரிக்கைகளும் இந்த நூலகத்திற்கு தருவிக்கப்பட்டு வழங்கப்படுவதுடன் , 
   1968-ம் ஆண்டு முதல் இன்று வரை சிறப்பான முறையில் கட்டு இடப்பட்டு (Binding) பாதுகாக்கப்பட்டு வருவது  
   இக் கல்லூரி நூலகத்தின் தனிச் சிறப்பு ஆகும்.
  
      LIBRARY NET WORKING  ; FUNCTIONING WITH 33 SYSTEMS = 1:1                                                                  1MB / SECOND


   
    






























புத்தகங்கள் தேடுவதற்கென்றே Searching Division-ல் ஆறு கணினிகள் இயக்கத்தில் உள்ளன.இங்கு    TO DAY 's Arrival என உள்ள  Searching Terminal -ல்  BOOK- Search / CD - Search / Book User List / Project Search பல பிரிவுகள் தேடும் பணிகளைச் செய்கின்றன. 
   BOOK SEARCH - பிரிவில் Book Title / Auther Name / Publisher Name / Subject code / Sub Title / Total Details -இவ்வாறு
         1)  எந்தத் துறை சார்ந்த புத்தகமாக இருந்தாலும்,
        2)   எந்த ஆசிரியர் எழுதியதாக இருந்தாலும்,
        3) எந்த பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருந்தாலும்,
        4) சர்வதேச அளவில் எழுதியதாக இருந்தாலும் ,
        5) தேடப்பட்ட குறிப்பிட்ட புத்தகம் எந்த அறையில் ,
            எந்த அலமாரியில் உள்ளது, 
          எந்த வரிசையில் உள்ளது, 
           எந்த இடத்தில்  உள்ளது,
           எத்தனையாவது எண்ணிக்கையில் உள்ளது . அல்லது
           எந்த மாணவரிடத்தில்,
          எடுத்துச் சென்ற தேதி மற்றும்
          திருப்பிக் கொடுக்கும் தேதி பற்றிய விபரம் நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ளும் விதத்தில்-
      ON LINE PUBLIC ACCESS CATALOGUE                         என்னும்  OPAC - SYSTEM      மிக நன்று!








     உதாரணமாக 
        ஜாவா பற்றிய புத்தகம் மட்டும் எத்தனை உள்ளன? என்று தெரிந்து கொள்ளலாம்.
   அல்லது பால குமாரன் ஆசிரியர் எழுதிய ஜாவா பற்றிய புத்தகம் எத்தனை உள்ளன?.என்று தெரிந்து கொள்ளலாம்.
        அல்லது பாலகுமாரன் ஆசிரியர் எழுதிய புத்தகங்கள் எத்தனை உள்ளன?.
     என்ற விபரங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் அறிந்து கொள்ளலாம். 
    இது போன்ற அனைத்து துறைகளின் புத்தகங்களின் நிலை பற்றிய விபரங்கள் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.






  


       புத்தகம் பைண்டிங் செய்யும் இந்த இயந்திரத்தின் மூலம் பழுதாகும் புத்தகங்களை உடனுக்குடன் சரி செய்து அலமாரியில் உரிய இடத்தில் ஒழுங்காக அடுக்கிவிடுவதால்  புத்தகம் தேடும் மாணவர்களுக்கு எவ்வித சிரமும் இல்லாமல் பயன்படுத்த முடிகிறது.அதற்காகவே  கல்லூரி நிர்வாகத்திற்கு   நன்றி சொல்ல வேண்டும்.


        கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்த SEMESTER தேர்வுகளின் அனைத்து துறைகளின் கேள்வித்தாள்கள் சேகரிக்கப்பட்டு BINDING செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
       தொல் பொருள் அருங்காட்சியகமும் உள்ளது.
       மருத்துவம் (medical) மற்றும் பொறியியல் (engineering)  சார்ந்த புத்தகங்களும் அதிக அளவில் வைக்கப்பட்டு உள்ளன.மருத்துவத் தாவரங்கள் பற்றிய புத்தகங்களும் உள்ளன.
paramesdriver.blogspot.com 
 எனக்கு அனுமதியளித்த கோபி கலை அறிவியல் கல்லூரியின் மரியாதைக்குரிய  முதல்வர் ஐயா அவர்களுக்கு நன்றிங்க.

30 டிசம்பர் 2015

மக்கள் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் ஐம்பெரும்விழா தொடர்ச்சி-03

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 2015டிசம்பர்30 ந் தேதி இன்று நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக  கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற 30வது தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் 27வது சாலை பாதுகாப்புவாரவிழா உட்பட ஐம்பெரும்விழா நிகழ்வுகளின் தொடர்ச்சி... 
  

நம்ம கோபியில்   10வது ஆண்டு துவக்கவிழா,30 வது ஆண்டு தேசிய நுகர்வோர் தினவிழா,27வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரவிழா,சிறந்த சமூக சேவகர்களுக்கு பாராட்டுவிழா,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா -









         கோபி நகரின் மூத்த குடிமகன் திருமிகு.K.S. பச்சியப்பன் ஐயா அவர்கள் துவக்கவுரையில்  தான் 1956 ஆம் ஆண்டு ஓட்டுநர் உரிமம் எடுக்க மகிழுந்து வாகனத்தை ஒரு பர்லாங் தூரம் பின்னோக்கி ஓட்டி சாலையில் வளைவுகளில்,சந்துகளிலும் பின்னாலேயே ஓட்டிச்சென்று அதற்கான கூடாரத்தில் நிறுத்திய பிறகே உரிமம் பெற்றதாக பழைய நினைவுகளைக் கூறி இன்றைய உரிமம் எடுக்கும் அவல நிலையையும் வேதனையுடன் எடுத்துக் கூறி சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.தம் தேவை கருதி எந்தப்பொருளையும் வாங்க வேண்டும் எனவும் அவ்வாறு வாங்கும்போது அவசியம் ரசீது கேட்டு வாங்கி பத்திரப்படுத்தவேண்டும் எனவும் கூறினார். நுகர்வோர் பாதுகாப்பு கல்வியும் சாலை பாதுகாப்பு கல்வியும் அவசியம் அனைருக்கும் கொடுத்து விழிப்படையச்செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.




 மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர்.தமது சிறப்புரையில்  மனிதவாழ்வில் நேயம் மிகுபட வேண்டும்.குறிப்பாக பெண்கள் அந்தரங்க விசயத்தில் கதை எழுதும் கதாசிரியர்கூட  தன் கதையின் பெண் கதாபாத்திரத்தில் தலையிடக்கூடாது.கோத்தகிரியில்  வரதட்சிணைக்கொடுமை சம்பந்த வழக்கில் திருமணமாக ஆறுமாதமே ஆன புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட காரணத்தையும் அதற்கு காரணமான கணவனுக்கு தண்டனை கொடுத்த நிலையையும் எடுத்துக்கூறியபோது சட்டம் வெற்றி பெற்றது ஆனால் சமூதாயம் தோற்றுவிட்டது என வேதனைபடக்கூறி அரங்கத்திலுள்ள அனைவரையும் சிந்திக்க வைத்தார்.

         சாலை பாதுகாப்பு உரையில், ஒரு  விபத்து நேரும்போது அனுபவிக்கும் வேதனைகளையும் இழப்புகளையும் எடுத்துக்கூறிய போது வாகன ஓட்டிகள் அனைவரும் தவறாமல் உரிமம் எடுப்பது அவசியம்.இன்றைய சூழலில் விபத்தின் இழப்புகளை நினைத்துப்பார்த்து படிக்கமாட்டேன் என்றாலும் பரவாயில்லை.தகுதியான வயது நிறைவு அடையும் முன்னர் தம் குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் மோட்டார் ஓட்டவோ,புதிய வாகனம் வாங்கிக்கொடுக்கவோ கூடாது.
சாலை விதிகளை மதிக்க வேண்டும்.போக்குவரத்துச்சட்டங்களை மதிக்க வேண்டும். உரிய காலத்தில் தம் உரிமத்தையும் வாகன காப்பீட்டையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றார்.


     திருமிகு. K.K.சொக்கலிங்கம் அவர்கள்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்றுநர்,குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தமிழ்நாடு  உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சிறப்புரையில், 

        நுகர்வோராகிய நமது எட்டு உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியபோது  தங்கம் விற்பனையில் நடைபெறும் மோசடிகள் பற்றி உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.அதேபோல தற்போதைய கறிக்கோழிகள் வேதிப்பொருட்களால் வளர்க்கப்படுவதால் விலை குறைவு என்று நோயை விலைகொடுத்து வாங்கி வருவதை தவிர்க்க வேண்டும்.
           வீட்டில் சாப்பிடுவதை விட்டுவிட்டு வீதியில் ருசியாக இருக்கிறதே என விலை கொடுத்து வியாதியை வாங்கும் அவலநிலை தவிர்க்க வேண்டும்.அதேபோல தெருவோரக் கடைகளில் சுகாதாரமின்றி நச்சுத்தன்மையுடன்  உணவுப்பொருட்கள் தயாரிப்பதை ஆதாரத்துடன் நினைவூட்டியபோது

                உதாரணமாக பஜ்ஜி போடுபவர் கையைக்கழுவிக்கொண்டு தம் மூக்கை குடைந்துகொண்டே இருப்பார் ,அதே கையில் பஜ்ஜியை நமக்கு பரிமாறுவதையும்,புரோட்டா மாஸ்டர்  சொறி,சிரங்கு இருந்தாலும் தம் முழங்கை வரை  புரோட்டா மாவை உருட்டிப்பிசைந்து தம் இடுப்பில் கட்டியுள்ள துண்டையே ஈரப்படுத்தி மாவின் மீது மூடுவதையும் எடுத்துகூறி புரோட்டாவின் தீங்குகளையும் விளக்கி அரங்கத்திலுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

          விளம்பர மோசடிகள் பற்றி விழிப்புணர்வு கொடுத்தபோது நடிகர்,நடிகைகள் பணத்துக்காக நடிப்பவர்கள்.அதனால் அவர்கள் மீதுள்ள மோகத்தில் உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் பொருட்களை வாங்கவோ,பயன்படுத்தவோ கூடாது என்றார்.

        கோகோ கோலா,பெப்ஸி போன்ற பானங்களில் கெடாமல் இருக்க40 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலப்பதாக கூறினார்.

          பால் போன்ற உணவுப்பொருட்களும் அதுபோலவே பால்  நீண்ட காலம் கெடாமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்கப்படுகின்றன அதுவே குறிப்பிட்ட நேரத்துக்குள் கெட்டுப்போனால்தான் நல்ல பால்  என்பதை தெளிவுபடுத்தினார்.

            விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு கட்டாயம் ரசீது கேட்டுப்பெற  வேண்டும்.சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் வாங்கும்போது கட்டாயம் அதிலுள்ள லேபிளைப்படித்துப்பார்க்க வேண்டும்.பொன்னி அரிசி குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்றால் அது ரேசன் அரிசியை பாலீஸ் செய்து இருக்கலாம்.அல்லது தற்போதைய  67 ம் நெம்பர் புதிய ரக நெல்லின் அரிசியாக இருக்கலாம்.வாங்கும்போது நமக்குத்தான் விழிப்புத்தேவை என்றார்.2006ம் ஆண்டு உணவுப்பாதுகாப்பு சட்டம்,2011ஆம் ஆண்டு லேபிள் சட்டம் பொதுமக்களாகிய,நுகர்வோராகிய நமது பாதுகாப்பு கருதியே இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் - பகுதி2

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 2015டிசம்பர்30 ந் தேதி இன்று நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக  கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற 30வது தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் 27வது சாலை பாதுகாப்புவாரவிழா உட்பட ஐம்பெரும்விழா நிகழ்வுகளின் தொடர்ச்சி... 
  

நம்ம கோபியில்   10வது ஆண்டு துவக்கவிழா,30 வது ஆண்டு தேசிய நுகர்வோர் தினவிழா,27வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரவிழா,சிறந்த சமூக சேவகர்களுக்கு பாராட்டுவிழா,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா -





கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில் கோபி சீதா கல்யாண மண்டப வாயிலில் ஆர்வத்துடன் வரவேற்கும் தன்னார்வலர்கள்..

                        முதன்மை அரங்கத்தில் ..........
 Dr.P.வெங்கடாச்சலம் B.A.,M.D.,(Acu) அவர்கள் பொது செயலாளர்
கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில் 
முன்னுரை ஆற்றிய காட்சி..

மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர். கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.


மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர். கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர். கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர். கோபியில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு விழாவில் திருமிகு. சித்ரா அம்மையார் , மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி பாராட்டிய காட்சி.
தொடர்ச்சி அடுத்த பக்கம் காண்க............

நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம்-கோபி செட்டிபாளையம்

                                            ஐம்பெரும் விழா-

                                
              சீதா கல்யாண மண்டபம் முதன்மை அரங்கம்
                            கோபிசெட்டிபாளையம். 
                            தேதி 2015டிசம்பர் 30ந் தேதி ,
  10வது ஆண்டு துவக்கவிழா,30 வது ஆண்டு தேசிய நுகர்வோர் தினவிழா,27வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரவிழா,சிறந்த சமூக சேவகர்களுக்கு பாராட்டுவிழா,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா -

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இன்று கோபி சீதா கல்யாண மண்டபத்தில் நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக 30வது தேசிய  நுகர்வோர் தினம் மற்றும் 27 வது சாலை பாதுகாப்புவாரவிழா பேரணி உட்பட ஐம்பெரும்விழா நடைபெற்றது.

         கோபி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு  திரு.S. முருகன்B.A., அவர்கள்,துணை காவல் கண்காணிப்பாளர் -கோபிசெட்டிபாளையம், மாலை 3.00 மணியளவில் துவக்கி வைத்த 27வது சாலை பாதுகாப்பு வாரவிழா-விழிப்புணர்வுப் பேரணி  புறப்பட்டு,வட்டாட்சியர் அலுவலகம், கச்சேரி மேடு,பெரியார் திடல்,தினசரிச்சந்தை, பேருந்து நிலையம்,புதுப்பாளையம்,அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வழியாக சீதா கல்யாண மண்டபம் சென்றடைந்தது. 
 27வது சாலை பாதுகாப்பு வாரவிழா பேரணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் திருமிகு சித்ரா அம்மையார் அவர்களும்,மோட்டார் வாகன ஆய்வாளர் திருமிகு N.தனசேகரன் அவர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும்,தன்னார்வ அமைப்பினர்களும்,காவல்துறை,போக்குவரத்து துறை,வருவாய்த்துறை மற்றும் சாரதா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள்,பேராசியர்கள்,ஆண்டவர் பாலிடெக்னிக் மாணவ,மாணவியர் இவர்களுடன் நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் தலைவர் மற்றும் பொதுசெயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும்,உறுப்பினர்களும்...
 நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம்-உறுப்பினர்கள்
  சாலை பாதுகாப்பு பேரணியில் வாகன ஒலிபெருக்கி விழிப்புணர்வு பிரச்சாரம்.திரு.C பரமேஸ்வரன் அவர்கள்.சத்தியமங்கலம்.
 கோபி வட்டாரத்திலுள்ள  கல்லூரி  மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள்.
          சாலை பாதுகாப்பு பேரணியில் சமூக ஆர்வலர்களின் பங்கேற்பு
  நுகர்வோர் நல வாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்..

  இதன் தொடர்ச்சி அடுத்த பக்கம் பார்க்கவும்............

27 டிசம்பர் 2015

கண்காணிப்பு கேமரா வகைகளும்,அவைகளை பொருத்தும் முறைகளும்

CCTV Camera என்றால் closed-circuit television அதாவது மறைக்கப்பட்ட மின்சுற்று தொலைக்காட்சிப் பதிவி என்று விளக்கம் எடுத்துக்கொள்ளுங்க.அல்லது தமிழாக்கத்தில் நல்ல பொருள் இருந்தால் பகிருங்க.

 
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். CCTV என்னும் கண்காணிப்பு கேமரா தற்போது அனைத்து பொது இடங்களிலும்,அதாவது,மருத்துவமனைகள்,போக்குவரத்து சாலைகள்,வங்கிகள்,வியாபார நிறுவனங்கள்,வணிக மையங்கள் நகைக்கடைகள்,பேருந்து நிலையங்கள்,புகைவண்டி நிலையங்கள்,போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களிலும், பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டு நம்மை கண்காணித்து வருகின்றன.நம்மை கண்காணிக்கும் கேமரா வகைகளைப்பற்றி எனக்குத்தெரிந்தவற்றை தங்களுக்காக பதிவிடுகிறேன்.தங்களுக்குத்தெரிந்தவற்றையும் கூறுங்க.பகிருவோம் மற்றவர்களுக்கும் பயனளிக்கட்டும்.
 ( இன்னும் சேகரித்து கூடுதலாக இந்தப்பதிவில் சேர்ப்பேன்,நீங்களும் உதவுங்க.)

கண்காணிப்புக்கேமரா
இதை IP  camera அதாவது INTERNET PORTOCOL CAMERA என்று கூறலாம்.கண்காணிப்புக்கேமரா NVR என்னும்  NETWORK VIDEO RECORDER  முறையில் செயல்படுகிறது.இது VIDEO AND ALARAM MANAGEMENT அதாவது காணொளி மற்றும் எச்சரிக்கை மணி ஒலிப்பு முறைகளைக்கூட  நிர்வாகம்  செய்யும்.கண்காணிப்புக்கேமரா சேகரிக்கும் தகவல்களை
PC/SERVER அதாவது நமது கணினி  NAS என்னும்  NETWORK ATTACHED STORAGE முறையில் தகவல்களை சேகரிக்கும்.
கண்காணிப்புக் கேமரா எட்டு வகைகள் உள்ளன.
அவை (1) Dome CCTV CAMERA,(2)Bullet CCTV CAMERA, இவையிரண்டும் PTZ Camera என்னும் PAN,TILT,ZOOM வசதியுள்ள வகையைச் சேர்ந்தவை.(3)C-Mount  CCTV CAMERA, (4)Infrared / Night vision  CCTV CAMERA, (5)Day/Night CCTV CAMERA, (6)Network/IP CCTV CAMERA, (7)Wireless CCTV CAMERA, (8) High Definision HD CCTV CAMERA, ஆகியன ஆகும்.
 கண்காணிப்புக்கேமராவின் நன்மைகள்.,
          கண்காணிப்புக் கேமராக்கள் கண்டிப்பாக பொய் சொல்லாது.நடப்பு நிகழ்வுகளை அப்படியே படம் பிடித்துப்பதிவு செய்யும்.ஒரு முறை குறைந்தபட்ச செலவு அதாவது சிறிய முதலீடு ஆனால் வாழ்நாள் முழுவதும்  பலனளிக்கும்.

(ஆனால் என்ன காரணத்தாலோ சில போக்குவரத்துக்கழகம் போன்ற கண்காணிக்க வேண்டிய  செலவு சிக்கனத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய அரசு நிறுவனங்களில்கூட பயன்படுத்த தாமதிக்கின்றனர்.கண்காணிப்புக்கேமரா பொருத்தினால் அனைவரும் பணியின்போது சோம்பலாகவோ,அரட்டை மற்றும் சொந்தவேலைகளை செய்யவிடாமலோ அதாவது பணியின் நேரத்தை திருடாமல் முறையாக பணி புரிய வைக்கும். ).

            கண்காணிப்புக் கேமராக்களில் தூரக்காட்சிகளை பெரிதுபடுத்தி துல்லியமாக பதிவு செய்யும் வசதிகள் உள்ளன. தேவையான பகுதியான குறிப்பிட்ட இடத்தை மட்டும் தெளிவாக பதிவு செய்யும் வசதிகள் உள்ளன. சுற்றுப்புறக்காட்சிகளை பார்வைக் கோண அளவை விட கூடுதலாக அதாவது அகல காட்சிகளை  360 டிகிரி என்னும் கோண அளவில் கூட பதிவு செய்யும் வசதிகள் உள்ளன, காட்சிகளை புகைப்படங்களாகவோ,காணொளிகளாகவோ பதிவு செய்யும் வசதிகளும் உள்ளன.இரவு அல்லது பகல் அல்லது இரவுபகலாக என 24மணிநேரமாக எல்லா நேரங்களிலும் பதிவு செய்யும் வசதிகள் உள்ளன.கலராகவோ,கறுப்பு வெள்ளையாகவோ பதிவு செய்யும் வசதிகளும் உள்ளன.ஒயர் இணைப்புகளுடனோ,ஒயர் இல்லாமல் வைபை வசதியுடனோ கண்காணிக்கும் வசதிகளும் உள்ளன.வீடுகளிலும்,கம்பெனிகளிலும்,தொழிற்சாலைகளிலும்,
கார்,பேருந்து ,மோட்டார் சைக்கிள் போன்ற போக்குவரத்து வாகனங்களிலும்,நடைபாதைகளிலும் என தேவைப்படும் இடத்திற்கேற்ப தூரத்திற்கேற்ப வசதிக்கேற்ப நாம் பொருத்திக்கொள்ளலாம்.மொபைல் மூலமாக எங்கிருந்துகொண்டும் கண்காணிக்கலாம்.ஒருவரே பல இடங்களை,பல வேலைகளை கண்காணிக்கலாம். 





நான் அறிந்தவரை,
 கண்காணிப்புக் கேமரா தயாரிக்கும் கம்பெனிகளின் பெயர்கள் இதோ.......
(1)Godrej CCTV Camera  (2)LG CCTV Camera  (3)Panasonic CCTV Camera  (4)Samsung CCTV Camera  (5) Hi-Focus CCTV Camera  (6) HikVision CCTV Camera  (7)Sony CCTV Camera   (8)Sparsh CCTV Camera  (9)Zicom CCTV Camera   (10)Canon CCTV Camera   (11)Bosch CCTV Camera  (12)Sanyo CCTV Camera  (13)CP Plus CCTV Camera  (14)Navkar CCTV Camera   (15) Endroid CCTV Camera   (16) Sampix CCTV Camera  (17),Maximus CCTV Camera  (18)Secure U CCTV Camera  (19)Dahua CCTV Camera  (20)Active Feel Free Life CCTV Camera   (21)Advision CCTV Camera   (22)Shine Tech CCTV Camera   (23)Zenex CCTV Camera    (24)USP CCTV Camera   (25)Simoco CCTV Camera   (26)iClear CCTV Camera  (27)Rega CCTV Camera  (28)Leopard CCTV Camera   (29)Laksh Tech CCTV Camera   (30)Compucare CCTV Camera   (31)Cadyce CCTV Camera   (32)BS SPY CCTV Camera     (33)Auric CCTV Camera   (34)Axis CCTV Camera
  • Sonitrol will install the right CCTV camera for your business (including IP, infrared, low-light, HD, verified, wireless, day/night, c-mount, bullet, dome, waterproof)
  • 24/7 CCTV camera monitoring at our remote monitoring station
  • DVRs (digital video recorders)
  • CCTV camera towers and columns
  • CCTV telemetry systems
  • Deterrent CCTV systems
  • Covert CCTV systems
  • Motion detection systems
  • Integrated audio / CCTV systems
  • Video Analytics/Predictive software
  • CCTV camera lenses
  • CCTV monitors
  • CCTV multiplexors
  • CCTV illumination
  • CCTV switchers
  • Fibre optic CCTV transmission
  • Networked CCTV transmission (IP CCTV transmission)
  • Wireless CCTV camera systems
  • Software systems for CCTV camera control, CCTV management & CCTV diagnostics

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொளப்பலூர் வருகை 14-09-2025

 அனைவருக்கும் வணக்கம்.  கொங்குத்தன்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.... 3ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா 13-09-2025 ...