28 அக்டோபர் 2016

ஆலோசனைக்கூட்டம்-சத்தியமங்கலம்.

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.சத்தியமங்கலம் - விதைகள் வாசகர் வட்டம் 28-அக்டோபர் 2016ஆம் தேதி இன்று யாழினி ஆறுமுகம் அவர்களது தலைமையில்  நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில்  வருகிற 2016 நவம்பரில்  சத்தியமங்கலத்தில் புத்தகக்கண்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழா நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதுசமயம் விதைகள் வாசகர் வட்டத்திற்கு அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து சமூகப் பணியாற்றவும் தீர்மானிக்கப்பட்டது.
       இந்த ஆண்டு நாம் நடத்த இருக்கும் புத்தகக்கண்காட்சி முதலாம் ஆண்டு ஆதலால் எளிமையாகவும்,சிக்கனமாகவும்,சிறப்பாகவும் நடத்துவதற்காக தங்களது ஆலோசனைகளை எதிர்பார்த்து  வருகிற 2016நவம்பர் 4 ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள யாழினி புத்தக நிலைய வளாகத்தில் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.அதுசமயம் அனைவரும் தவறாமல் பங்கேற்று நல்ல கருத்துக்களை வழங்கி சமூகநலனுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் தொடர்புக்கு 9585600733 மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com  இந்தப்பதிவிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுவீர் 
என எதிர்பார்க்கிறோம். 
என அன்பன், 
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.

1 கருத்து:

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...