28 அக்டோபர் 2016

ஆலோசனைக்கூட்டம்-சத்தியமங்கலம்.

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.சத்தியமங்கலம் - விதைகள் வாசகர் வட்டம் 28-அக்டோபர் 2016ஆம் தேதி இன்று யாழினி ஆறுமுகம் அவர்களது தலைமையில்  நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில்  வருகிற 2016 நவம்பரில்  சத்தியமங்கலத்தில் புத்தகக்கண்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழா நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதுசமயம் விதைகள் வாசகர் வட்டத்திற்கு அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து சமூகப் பணியாற்றவும் தீர்மானிக்கப்பட்டது.
       இந்த ஆண்டு நாம் நடத்த இருக்கும் புத்தகக்கண்காட்சி முதலாம் ஆண்டு ஆதலால் எளிமையாகவும்,சிக்கனமாகவும்,சிறப்பாகவும் நடத்துவதற்காக தங்களது ஆலோசனைகளை எதிர்பார்த்து  வருகிற 2016நவம்பர் 4 ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள யாழினி புத்தக நிலைய வளாகத்தில் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.அதுசமயம் அனைவரும் தவறாமல் பங்கேற்று நல்ல கருத்துக்களை வழங்கி சமூகநலனுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் தொடர்புக்கு 9585600733 மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com  இந்தப்பதிவிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுவீர் 
என எதிர்பார்க்கிறோம். 
என அன்பன், 
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.

விதைகள் வாசகர் வட்டம்- சத்தியமங்கலம்

 அறிவை வளர்க்க நல்ல புத்தகங்களை வாசிக்க விதைப்போம்.
மரியாதைக்குரியவர்களே,
                                         வணக்கம். ஈரோடு மாவட்டம் நம்ம சத்தியமங்கலத்தில் புத்தக வாசிப்பை அனைவரின் மனதிலும் விதைக்கும் நோக்கத்தில், 'விதைகள் வாசகர் வட்டம்'துவக்கியுள்ளோம்.ஆர்வமுள்ளவர்கள் இணைந்துகொண்டு நற்பணியாற்ற அன்புடன் அழைக்கிறோம். 
என அன்பன், 
C.பரமேஸ்வரன்,
சமூக ஆர்வலர் மற்றும் 
அரசுப் பேருந்து ஓட்டுநர், 
சத்தியமங்கலம் -
 ஈரோடு மாவட்டம்..
தொடர்புக்கு 9585600733
 மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com

23 அக்டோபர் 2016

ஜாதகர்களே? ஜோதிட விவாதம் செய்யலாம் வாங்க!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
          ஜோதிடமா? ஜாதகமா? கிரகங்களா? லக்னமா?ராசிகளா?நட்சத்திரங்களா? தோஷங்களா?சூனியமா?செய்வினையா?பரிகாரமா? எந்திரங்களா?மந்திரங்களா?தந்திரங்களா?


                    இவையெல்லாம் சமூகத்தின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது...
இதற்கெல்லாம் பரிகாரம் தேட இணையத்திலுள்ள ஜோதிடர்களை இணைத்து முகநூல் வாயிலாக விவாதம் நடத்தி ஒருமித்த கருத்தினை வெளிக்கொணர திட்டமிட்டுள்ளேன்.வாங்க விவாதிப்போம்...
என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,
சமூக ஆர்வலர் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர்,
சத்தியமங்கலம்,
 ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு 
எனது அலைபேசி எண் +919585600733 மற்றும் 
எனது மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com

05 அக்டோபர் 2016

இதுக்குப்போய் முட்டையா?

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். முகநூல் பதிவிலிருந்து...
ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்ப
தாகவே நம்பினான்..!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!
(1)கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்
உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!
(2)கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!
(3)கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல்
இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!
(4)கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!
(5)கேள்வி;- இரவு- பகல்..
எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
உதிப்பதாலும் இரவு- பகல்
ஏற்படுகிறது..!
(6)கேள்வி;- மகாத்மா காந்தி..
எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!
(7)கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள்
செய்யும் அவரவர் வீட்டில்..!
(8)கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
(9)கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
இந்த மாணவன் பதிலில் சரியாக
தானே சொல்லிருக்கான்..???

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...