29 செப்டம்பர் 2016

அரசு மேல்நிலைப் பள்ளி - ஒலகடம் (பவானி வட்டம்) .

நேற்றிரவு அரசு மேல்நிலைப்பள்ளியில்,
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
  கடந்த 2016 செப்டெம்பர் 29 ந் தேதி வியாழக்கிழமை அதாவது நேற்று மாலை 5.00மணியளவில் பவானி வட்டம்,ஒலகடம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சேவையாற்றும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் ஆறாவது நாள் விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு பற்றி சிறப்பாக உரையாற்றினேன்.அது சமயம் மாணவர்களும் ,ஆசிரியப்பெருந்தகைகளும் நல்ல ஆதரவு கொடுத்து வரவேற்றனர்.மாலை5.00மணியளவில் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் திருமிகு.த.சரவணன் அவர்கள் சிறப்பு முகாமில் என்னை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.சிறப்பு முகாமின் திட்ட அலுவலர் திருமிகு.ப.க.வெள்ளிங்கிரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரைநிகழ்த்தினார்.

           என்னை ஓட்டுநராகப் பாராமல் சிறப்பு விருந்தினராகப் போற்றி மதிப்பிடமுடியாத பொன்னாடை போர்த்தி வரவெற்று உபசரித்தனர்..
              முகாமில் சுவையான சுக்கு காப்பியும்,ஆரோக்கியமானஇரவு உணவும் என விருந்தோம்பல் அமர்க்களமாக இருந்தது.அன்றிரவு10.00மணி வரை மாணவர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்களைச்செய்தும்,மாணவர்களோடு ஆடல் பாடல் என கொண்டாட்டம்தான்! இவ்வாறாக அன்றிரவு முழுவதும் நானும் மாணவர்களோடு மாணவனாக தங்கி  மனநிறைவு பெற்றேன். 
 

  என்னுரையில்;
          மாணவர்களாகிய நீங்கள்  கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் சமூக சேவையுடன் தொடர்புள்ளவர்களாக,தங்களது நேரத்தின் ஒரு பகுதியினை தன்னார்வ அடிப்படையில் செலவிட வேண்டும் என்ற அடிப்படையில்,''எனக்காக அல்ல உனக்காக'' என்ற கோட்பாட்டுடனும்,குறிக்கோளுடனும் சமூக சேவையின் மூலம் மாணவர்களாகிய உங்களிடம் சமூக சேவையின் மூலம் ஆளுமைப்பண்பினை வளர்க்கும் நோக்கத்துடன் திட்ட அலுவலரும்,இப்பள்ளி முதுகலை ஆசிரியருமான திருமிகு.ப.க.வெள்ளிங்கிரி M.A.,B.Ed அவர்களின் தலைமையில்,நாட்டின் நலனுக்காக பணி செய்யும் சிறப்பு முகாமினை நடத்திவரும் தங்கள் அனைவருக்கும்,இப்பள்ளிக்கும் நான் சார்ந்துள்ள ,'நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு'' அமைப்பின் சார்பாக முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துகொண்டு வாழ்த்துகிறேன்.
      இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவரின் நலனும் தனி மனித நலனாக அமையாமல் முழு சமூகத்தின் பொது நலனைச்சார்ந்தே இருக்கிறது.ஆதலால் நாம் ஒவ்வொருவரும் சமூகத்தோடு சேர்ந்தே வாழவேண்டிய கட்டாயமாகி உள்ளது.இதனால் பல்வேறு பிரச்சினைகளையும்,தொல்லைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இம்மாதிரியான சமுதாயப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது சகித்துக்கொண்டு,பொறுமையுடன் சமூகத்தோடு ஒத்திசைந்து வாழும் பக்குவத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.அதற்கு முன்னதாக நாம் நம்மை காத்துக்கொள்ளத்தெரிந்து கொள்ள வேண்டும்.நமது உடலையும் காக்க வேண்டும்.மனதையும் காத்துக்கொள்ள வேண்டும்.அப்படியானால் நம் உடலையும்,மனதையும் பாதிக்கும் விசயங்களை தெரிந்துகொண்டால்தான் அவைகளை தவிர்க்கும் வழிகளை அறிந்துகொள்ள முடியும்.
 எனக்கு  கொடுத்துள்ள தலைப்பு,''சாலை பாதுகாப்பு'  அப்படியானால் சாலை பாதுகாப்பு என்றால் என்ன?எதற்காக
 சாலை பாதுகாப்பு? என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
 நமது அத்தியாவசியத்தேவைகளான உணவு,உடை,இருப்பிடம்,பொழுதுபோக்கு மற்றும் நமது சுகபோகத்திற்காகத்தேடிக்கொண்ட சில தொழில்நுட்ப வசதிகள்  என இவைகளைப்  பெற  நாம் தினந்தோறும் பயணிக்கிறோம்.சாலையில் போக்குவரத்து செய்கிறோம்.நாம் உயிர்வாழ்வதற்கானத்தேவைகளைப்பெற போக்குவரத்து செய்யும் சாலையில் நமது அறியாமையினாலும்,அஜாக்கிரதையினாலும்,பொறுமையின்மையினாலும்,போட்டி மனப்பான்மையினாலும்,சாலை விதிகளை மீறுவதாலும்,சுயநலப்போக்காலும்,தன் விருப்பம்போல பயணிப்பதால் விபத்து ஏற்பட்டு நாமும் பாதிக்கப்படுகிறோம்.சாலையில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதிப்புக்கு ஆளாக்குகிறோம்.இதனால் உடலும் கெட்டு மனமும் கெட்டு பெரிய இழப்புகளுக்கும்,தொல்லைகளுக்கும் ஆளாகிறோம்.
    .சாலை பாதுகாப்பு நமது பாதுகாப்பு என்பதால்தாங்க போக்குவரத்து செய்யும் சாலையில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.என்பதை வலியுறுத்துகிறேன்.
 முதலில் விபத்து எப்படி ஏற்படுகிறது?விபத்து ஏற்பட்டால் என்னென்ன விளைவுகளும்,இழப்புகளும் ஏற்படுகிறது?விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சூழ்நிலை எவ்வளவு மோசமாகிறது? என்பதை சற்று கவனமாக சிந்திக்க வேண்டும்.என்னமாதிரியான பாதுகாப்புமுறைகளை கடைப்பிடித்தால் சாலையில் விபத்தை தவிர்க்க முடியும் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.முதலில் சாலையின் வகைகளை தெரிந்துகொள்வோம். சாலைகளை எக்ஸ்பிரஸ் சாலை ,தேசிய நெடுஞ்சாலை,மாநில நெடுஞ்சாலை,பெரிய மாவட்ட சாலை,மற்ற மாவட்ட சாலை,கிராமச்சாலை,வீதிகள் என பலவகைகளாகப்பிரிக்கலாம்.தேசிய நெடுஞ்சாலைகளில் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதியில் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருக்கும்.தேசிய நெடுஞ்சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் பச்சை வர்ணம் பூசப்பட்டிருக்கும்.பெரிய மாவட்ட சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் நீல வர்ணம் பூசப்பட்டிருக்கும்.மற்ற மாவட்டச்சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் ஊதா வர்ணம் பூசப்பட்டிருக்கும்.கிராமச்சாலைகளின் கிலோமீட்டர் கற்களின் தலைப்பகுதிகளில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருக்கும்.போக்குவரத்தின் வசதிக்கேற்ப ஒவ்வொரு சாலைகளும்அகலப்படுத்துதலும், பராமரிப்புகளும்,உறுதிப்படுத்துதலும் வேறுபட்டிருக்கும்.. அடுத்ததாக சாலையின் பாகங்களைப்பற்றித்தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு சாலைகளும்,பொதுவாக வாகனங்கள் ஓடுவதற்கான பாதை இருக்கும்.அதையடுத்து பக்கவாட்டில் புயங்கள் என்றுசொல்லக்ககூடிய பக்கவாட்டப்பாதை இருக்கும்.காப்புக்கற்கள் இருக்கும்,பிரதிபலிப்பான்கள் இருக்கும்,பாலங்கள் இருக்கும்,வேகத்தடை இருக்கும்.காப்புச்சுவர்கள் இருக்கும்,சாலை பிரிப்பான்கள் இருக்கும்,
   சாலையில் பாதசாரிகளாகப்பயணிக்கும்போது  சாலையிலும் நாம் நடந்துசெல்லும் பாதையிலும் நிரந்தரமாக கவனம் செலுத்த வேண்டும்.பார்வை மறைவுப்பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.சாலையை கடக்கும்போது வாகனம் போக்குவரத்து இல்லாத போது வேகமாகவும் கவனமாகவும் கடந்துசெல்ல வேண்டும்.சாலை சந்திப்புகளிலும்,வளைவான பகுதிகளிலும்,பார்வை மறைத்திருக்கும் பகுதிகளிலும் சாலையை கடக்காமல் சாலையின் இரு புறமும் பார்வைக்கு கிடைக்குமாறு உள்ள இடத்தில் கடக்க வேண்டும்.படியில் பயணம் செய்யக்கூடாது.ஓட்டுநருக்கு இடையூறு செய்யக்கூடாது.கைகளையும்,தலையையும் வெளியே நீட்டக் கூடாது. சாலையில் விளையாடிக்கொண்டும்,கைகோர்த்துக்கொண்டும் சாலையை அடைத்துக்கொண்டு செல்லக்கூடாது.நாமும் சைகை காட்டி நடக்க பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.ஓட்டுநர்களின்  சைகைகளை புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

  அடுத்ததாக வாகனங்களின் பொதுவான பாகங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம்.முக்கியமாக வாகனங்கள் அனைத்தும் இயற்கைவிதிகளான இயக்க சக்திகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. அதாவது உந்து சக்தி,புவி ஈர்ப்பு சக்தி,மார்க்க சக்தி,மைய நோக்கு விசை,திருப்பங்களில் பக்கவாட்டு விசை ஆகியவைகளை சமநிலைப்படுத்தி வாகனங்களை ஓட்ட வேண்டும்.மோட்டார் வாகனச்சட்டப்படி எந்த வாகனத்தை ஓட்டத்தெரிந்திருந்தாலும் அந்த வாகனத்தை ஓட்டுவதற்கான அத்தாட்சி அதாவது லைசென்ஸ் என்று சொல்லக்கூடிய ஓட்டும் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.16வயது நிரம்பியவர்கள் கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களை ஓட்ட உரிமம் பெறலாம்.18 வயது நிரம்பியவர்கள் கியர் உள்ள மோட்டார் சைக்கிள் உட்பட நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெறலாம்.20வயது நிரம்பியவர்கள் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்று ஓராண்டு நிறைவடைந்திருந்த பிறகு பேட்ஜ் பெற்று கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெறலாம்.பொது போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் பெறலாம்.உரிய லைசென்ஸ் இல்லாமல் ஒரு வாகனத்தை ஓட்டினால் மோட்டார் வாகனச்சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.வாகனம் ஓட்டுவதற்கு முன்னதாக  வாகனத்தை பரிசோதனை செய்து பழகிக்கொள்ள வேண்டும்.டயர்களில் காற்றழுத்தம்,எரிபொருள்,பிரேக்,கிளட்ச்,ஸ்டியரிங்,இன்டிகேட்டர்,ஹெட்லைட்,ஆர்ன்  போன்றவற்றை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.நாம் ஓட்டும் வாகனத்திற்கு மூன்றாம் நபர் பாலிசியாவது இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.வாகனக்காப்பீடு ஆண்டிற்கு ஒரே தவணையாக ஒவ்வொரு ஆண்டும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்.சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வாகனத்தில் வெளியேற்றும் புகையையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இனி சாலையுடன் பேசுவோமா?
 ஆமாங்க சாலையுடன் நாம் பேசலாம்.அதற்காக சாலையின் மொழியினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.சாலையில் வரையப்பட்டுள்ள கோடுகளும்,குறியீடுகளும்,சாலையோரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உத்தரவு,எச்சரிக்கை,தகவல் போன்ற போக்குவரத்துச்சின்னங்களும்,சாலையோரத்தில் நடப்பட்டுள்ள காப்புக்கற்களும்,பிரதிபலிப்பான்களும் ,ஓட்டுநரின் சைகைகளும்,காவலரின் சைகைகளும்,விளக்குச்சைகைகளும்,சாலையின் மொழிகளே..
என சாலையின் மொழிகளைப்பற்றி விரிவாக எடுத்தரைப்பட்டது.ஆயுள் காப்பீடு மற்றும் வாகனக்காப்பீடு அவசியம் பற்றி விளக்கப்பட்டது.வளைவுகளில் மெதுவாக நுழைந்து வேகமாக வெளியேறு  என்ற விதியை செய்முறை விளக்கங்களோடு எடுத்துக்கூறப்பட்டது.சாலை சந்திப்புகளிலும்,கிளைச்சாலையிலிருந்து மெயின் சாலைக்குள் நுழையும் முன்பாக நின்று கவனித்து பாதுகாப்பாக செல்லவேண்டும்.பார்வை மறைவுப்பகுதிகளை அடையாளம் கண்டு கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கடக்க வேண்டும்.வாகனம் ஓட்டும்போது M.S.M.P.S.L.முறையை கடைப்பிடிக்க வேண்டும்.சாலை எப்படி உள்ளது?சாலை மேல் என்ன உள்ளது?.அடுத்து நாம் என்ன வேண்டும்?என நிரந்தரக்கவனத்தோடு பயணிக்க வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.சீருந்துகளில் அதாங்க கார்களில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதும் நமக்குப்பாதுகாப்பு என்று விளக்கப்பட்டது.
    லோகு டிரைவிங் ஸ்கூல் சார்பாக வழங்கப்பட்ட ஓட்டுநர்களுக்கான பயிற்சிக்கையேடு,வேகக்கணிப்பீடு பற்றிய துண்டு பிரசுரங்கள்,போதைப்பொருட்களை தவிர்ப்போம் நம்மை நாமே காப்போம் பற்றிய துண்டு பரிசுரங்கள்,நெகிழியின் தீங்கு பற்றிய துண்டுபிரசுரங்கள்,புத்தக வாசிப்பின் அவசியம் பற்றியும் குறிப்பாக,நமது நாடு அடிமைப்பட்டதும் சுதந்திரத்துக்காக கொடுமைப்பட்டதும் பற்றியும் உரையாடினோம்.ஹெலன்கெல்லரின் வாழ்க்கை வரலாறு,கணித மேதை ராமானுஜனின் வரலாறு,சமகால அறிவியலறிஞரான,ஸ்டீவ்ஜாப்ஸ் வரலாறு பற்றியும் எடுத்துரைத்த்தோடு.தேவையே தேடலுக்கு அடித்தளம் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது.கூடவே மருத்துவத்தாவரங்கள் பற்றியும் கருத்துரையாடல் நடத்தப்பட்டது.
          (  பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்).

24 செப்டம்பர் 2016

தமிழ் எண்கள் ஒரு பார்வை


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது*.
----------------------------
*தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
----------------------------

23 செப்டம்பர் 2016

காவிரி ஆறு-

 மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
          பதிவிட்ட முகநூல் நண்பர் திருமிகு.செல்வி மாறன் அவர்களுக்கு நன்றிங்க..
காவிரி நீர்:
பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.
ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.
அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.
"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)
"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.
""அதாவது KRS அணை பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா" ? என்றேன்.
"அதுவும்தான்" என்றார். எனக்கு புரை ஏறிவிட்டது.
"காவிரியை விச்வேஸ்வரய்யா கட்டினாரா?" என்றேன்.
அவர் குழப்பத்துடன் "பின்னே" என்றார்.
அவரிடம் இருந்த குழப்பமே, மீதி இருந்த ஆறு MBAக்களிடமும் இருந்தது.
நான் உடனே சொன்னேன், "நந்து, இதற்குப் பதில் பின்னால் சொல்கிறேன். முதலில் உங்களுக்கு அரை நாள் விடுமுறை தருகிறேன். உங்கள் வேலையை நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கூகிள் இல் உட்காருங்கள். நான் இப்போது எழுதிக்கொடுக்கும் பத்து வார்த்தைகளைத் தேடி, விக்கிபீடியாவில் அவை எல்லாம் முழுதாகப் படித்து விட்டு, மாலை என்னிடம் வரவேண்டும்" என்றேன்.
"சரி சார்" என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.
Cauvery River, Chola Kingdom, Kallanai, Karikaal Chola, Raja Raja Chola, Tanjore, Coorg, Upper Riparian State, Lower Riparian State, KRS Dam
மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். "எல்லாம் படித்து விட்டேன். நீங்கள் சொல்ல ஏதும் இல்லை சார். சாரி" என்று சென்று விட்டார்.
"ஒரு நிமிடம்.... நந்து, நீங்கள் படித்ததையெல்லாம் உங்கள் மீதி நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்றேன்.
நான் மேலே சொன்னதை நம்புபவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள், கர்நாடகாவில் யாரிடமாவது காவிரி பற்றிப் பேசிப் பாருங்கள்.
-----
நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.
அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது.
அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.
ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.
KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.
அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
(KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)
நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.
புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது.
அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.
அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.
நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.
அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.
கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.
ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.
இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.
ஆம். கேள்வி சரிதான்.
கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.
காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.
ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.
டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.
உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.
இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.
நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!
முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?
------
குருமூர் என்பவரது பதிவு.. :)

கவிஞர் இரவா- கபிலன் அவர்களிடம் இருந்து பகிரப் பட்டது

16 செப்டம்பர் 2016

கோபிசெட்டிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்16 செப்டெம்பர் 2016

கர்நாடகாவில் தமிழர்களையும் தமிழர் வாகனங்களையும்,தமிழர்களின் வணிக நிறுவனங்களையும் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று ஒருநாள் கடையடைப்பு மற்றும் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில்
கண்டன ஆர்ப்பாட்டம்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
16.09.2016வெள்ளிக்கிழமை

.                இன்று காலை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை-ஈரோடு மாவட்டமும்,கொங்குநாடு மக்கள்தேசிய கட்சியும் இணைந்து கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஈரோடு மாவட்ட தலைவர் திருமிகு. B.தேவதாசன் தலைமை தாங்க,ஈரோடு மாவட்ட செயலாளர் திருமிகு.S.பொன்பாண்டி அவர்கள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மாவட்ட பிரமுகர்கள் முன்னிலை வகிக்க ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டு உச்சநீதிமன்ற உத்தரவினை மதிக்காமல் அவமதித்த கர்நாடகா அரசை கண்டித்தும்,மெத்தனமாக இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அனைவரும் கேட்டுக்கொண்டற்கு இணங்கி நான்(பரமேஸ்வரன்)துவக்கி வைத்து முன்னுரையில் கர்நாடகா வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு தரக்கோரியும்,நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் போக்குவரத்து வாகனங்களின் ஓட்டுநர்களை தாக்கியவர்கள் மீது உச்சநீதிமன்றம் தானே தன்னிச்சையாக வழக்கினை எடுத்து வீடியோ காட்சியை ஆதாரமாக வைத்து வன்முறையாளர்களைகைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.இந்தியாவின் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படவைக்கும் முயற்சியினை தடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.
(காவிரி பற்றிய விவரங்களை
(1)Cauvery River, (2)Chola Kingdom, (3)Kallanai,(4) Karikaal Chola,(5) Raja Raja Chola, (6)Tanjore, (7)Coorg, (8)Upper Riparian State, (9)Lower Riparian State,(10) KRS Dam  - ஆகிய தலைப்புகளில் விக்கிப்பீடியாவில் தேடிப்பாருங்க,வ்வரம் தெரிஞ்சுகொள்ளுங்க) 

அன்பன்,
C.பரமேஸ்வரன்,
செயலாளர்
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.9585600733

கருத்து

11 செப்டம்பர் 2016

தந்தை! எதுக்கு யார் தந்தை?

மரியாதைக்குரியவர்களே,
                              வணக்கம்.உருவாக்கப்பட்ட அனைத்திற்கும் மூல காரணம் ஒருவரோ அல்லது பலரோ இருக்கிறார்கள்.அவரை அவற்றின் தந்தை என்கிறோம். இதோ ''துளிர் கல்விச்சேவை'' பதிவிட்ட பயனுள்ள குறிப்பு தங்களுக்கும் பயன்படட்டும்...
 *1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
 paramesdriver@gmail.com
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?*கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?*அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
paramesdriver@gmail.com
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?*பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?*ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?*சிக்மண்ட் பிரைடு
paramesdriver@gmail.com
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?*இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம் 
நன்றி;-துளிர் கல்விச்சேவைக்கு...................

04 செப்டம்பர் 2016

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்-2016




ஆசிரியர் பணி அறப்பணி!அதற்கே உன்னை அர்ப்பணி!!
மரியாதைக்குரியவர்களே,

      வணக்கம்.
                 சமூகம் தீமையிலிருந்து விலகி நன்மையில் நடந்திட, அதனை நடத்திட பெரிதும் நம்புவது ஆசிரியர்களையே! நன்றாக படிப்பவன் கடைசியில் கவனிக்கப்பட வேண்டியவன். மோசமாய் படிப்பவன் எமர்ஜென்சி கேஸ்; உடனே கவனிக்கப்பட வேண்டியவன். படிப்பில் ஆர்வம் இல்லாதவன் பியூஸ் போன பல்பு போன்றவன். கூடு இருக்கும் ஆனால், உயிர் இராது. அங்கே விஞ்ஞானி போல ஆராய்ந்து உயிரை ஊட்டுபவர் ஆசிரியர்.. சுமாராய் படிப்பவன் லோ வோல்டேஜில் எரியும் பல்பு. வோல்டேஜை சரி செய்தால் போதும். நன்றாய் படிப்பவன் பளிச்சென பகல் போல எரியும் பல்பு. திடீரென ஈசல்கள் மண்டாதபடி மட்டும் பார்த்து க் கொள்பவர் ஆசிரியர்.அதனால், தவறே செய்யக்கூடாதோர் பட்டியலில் ஆசிரியர்கள் முதலிடம் பெறுகின்றனர். ஆசிரியரின் தவறு, மனிதனின் ஆதார நம்பிக்கை அடிப்படையையே ஆட்டம் காண செய்துவிடும். ஆசிரியர் மேல் இச்சமூகம் மிகுந்த மரியாதையை, மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது. அதனால்தான் சமூகம் தனது சந்ததியை தனது எதிர்காலத்தையே ஆசிரியரிடம் அளித்து உள்ளது. மாணவனும், ஆசிரியரை மலை போல் நம்புகிறான் . ர்களே!.அதனால்தான் "எந்தவொரு குழந்தையையும் என்னிடம் 7 ஆண்டுகள் விட்டு வையுங்கள். அதன் பிறகு எந்த சாத்தானும், ஏன் கடவுளும் கூட அவனை அவனது குண நலன்களை மாற்ற முடியாது!'என்று கிரேக்க ஆசிரியர் கூறினார்.ஆசிரியரின் நடை, உடை, பாவனை, பேச்சு, பாடம் நடத்தும் பாங்கு, வாகனம் என எதை வேண்டுமானாலும் எடுத்து கொண்டு கிண்டல் செய்யும் சில மாணவர்கள் உண்டு. ஆசிரியரின் மேன்மையை பற்றி தெரியாதவர்கள் அவர்கள். அவர்களை சும்மா விட்டு விட முடியாது. குரு பீடத்தின் மகிமையை எடுத்து காட்ட வேண்டும். ஆசிரியர் என்றால் பெரிய ஆளா என்ன? என கேட்கும் மாணவனுக்கு ஒரு சவால்!
ஒரு ஐந்து வயது குழந்தைக்கு பொறுமையாய், மகிழ்வாய், அன்பாய், "அ, ஆ, இ' சொல்லி கொடுங்கள் பார்க்கலாம். அப்படி நீங்கள் படிக்கும்போது ஆசிரியரின் உயர்வு விளங்கும். கண்கள் பணிக்கும்; கரங்கள் துதிக்கும்; மனம் மன்னிப்புக்கு மன்றாடும். ஆசிரியர், அம்மா, அப்பா, நண்பன் என்று எல்லாமாய் இருப்பவர் ஆசிரியர். மாணவர்களின் மனதில் உள்ள ஆற்றல் வளங்களை வெளிக்கொணர்பவர்கள் ஆசிரியர்களே! இந்த நன்னாளில் ஆசிரியர் பெருமக்களை வணங்கி வாழ்த்துவோம்..
சமூகம் தீமையிலிருந்து விலகி நன்மையில் நடந்திட, அதனை நடத்திட பெரிதும் நம்புவது ஆசிரியர்களையே! அதனால், தவறே செய்யக்கூடாதோர் பட்டியலில் ஆசிரியர்கள் முதலிடம் பெறுகின்றனர். ஆசிரியரின் தவறு, மனிதனின் ஆதார நம்பிக்கை அடிப்படையையே ஆட்டம் காண செய்துவிடும். ஆசிரியர் மேல் இச்சமூகம் மிகுந்த மரியாதையை, மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது. அதனால்தான் சமூகம் தனது சந்ததியை தனது எதிர்காலத்தையே ஆசிரியரிடம் அளித்து உள்ளது. மாணவனும், ஆசிரியரை மலை போல் நம்புகிறான் . என்பதையும் ஆசிரியர்களுக்கு உணர்த்துவோம்...........

வாழ்த்துக்களுடன் 
அன்பன்,
C.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுநர்,
தாளவாடி கிளை
 ஈரோடு மாவட்டம்-
தொடர்பு எண்; 9585600733
 paramesdriver@gmail.com

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...