மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.நமது இந்தியா சுதந்திரம் பெற்று வருகிற 2016ஆகஸ்டு15 ந் தேதியுடன் அறுபத்தொன்பது ஆண்டுகள் நிறைவடைந்து எழுபதாவது சுதந்திர தினவிழாவினை கொண்டாட இருக்கிறோம்.இந்த மகிழ்வான தருணத்தில் தேச விடுதலைக்காக போராடியவர்களில்,
நமது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தலைவர்கள் உட்பட வீரர்களையும் வீர மங்கைகளையும் பெயர்,ஊர்,ஆண்டு,பங்களிப்பு மற்றும் அவர்களது குடும்ப விவரம் பற்றி சேகரித்து தொகுக்கும்வகையில்-
ஈரோடு மாவட்ட பள்ளிகளின் மாணவ,மாணவிகளுக்காக
''வெளிச்சத்துக்கு வராத தேச விடுதலைப் போராட்ட வீரர்களை வெளிப்படுத்தும் போட்டி''
என்ற தலைப்பில்
சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக, READ என்னும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் பொறுப்பில் போட்டி நடத்துகிறோம்.
அதிக எண்ணிக்கையில் தியாகிகள் விவரங்களைத் தொகுத்து எழுதி அனுப்பும் மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுச்சான்று வழங்கப்படும்.ஆதலால் ஒவ்வொரு பள்ளியிலும் எழுதிப் பெற்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர் பட்டியலில் அதிக எண்ணிக்கை அடிப்படையில் இரண்டினை தேர்வு செய்து 2016ஆகஸ்டு 31ந் தேதிக்குள்,
''பொறுப்பாளர்,
மாணவர் நூலகம்-தாளவாடி
(சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சேவை)
ஈரோடு மாவட்டம் -638461"
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என,
சமூக நலனில் அக்கறையுள்ள,
C. பரமேஸ்வரன்,
ஒருங்கிணைப்பாளர்,
சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு,
தாளவாடி வட்டம்- ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு 9585600733
மற்றும் paramesdriver@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக