மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். 2015டிசம்பர்30 ந் தேதி இன்று நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற 30வது தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் 27வது சாலை பாதுகாப்புவாரவிழா உட்பட ஐம்பெரும்விழா நிகழ்வுகளின் தொடர்ச்சி...
நம்ம கோபியில் 10வது ஆண்டு துவக்கவிழா,30 வது ஆண்டு தேசிய நுகர்வோர் தினவிழா,27வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரவிழா,சிறந்த சமூக சேவகர்களுக்கு பாராட்டுவிழா,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா -
கோபி நகரின் மூத்த குடிமகன் திருமிகு.K.S. பச்சியப்பன் ஐயா அவர்கள் துவக்கவுரையில் தான் 1956 ஆம் ஆண்டு ஓட்டுநர் உரிமம் எடுக்க மகிழுந்து வாகனத்தை ஒரு பர்லாங் தூரம் பின்னோக்கி ஓட்டி சாலையில் வளைவுகளில்,சந்துகளிலும் பின்னாலேயே ஓட்டிச்சென்று அதற்கான கூடாரத்தில் நிறுத்திய பிறகே உரிமம் பெற்றதாக பழைய நினைவுகளைக் கூறி இன்றைய உரிமம் எடுக்கும் அவல நிலையையும் வேதனையுடன் எடுத்துக் கூறி சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.தம் தேவை கருதி எந்தப்பொருளையும் வாங்க வேண்டும் எனவும் அவ்வாறு வாங்கும்போது அவசியம் ரசீது கேட்டு வாங்கி பத்திரப்படுத்தவேண்டும் எனவும் கூறினார். நுகர்வோர் பாதுகாப்பு கல்வியும் சாலை பாதுகாப்பு கல்வியும் அவசியம் அனைருக்கும் கொடுத்து விழிப்படையச்செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மாண்புமிகு நீதியரசர் A.முகமது ஜியாவுதீன் அவர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி,திருப்பூர்.தமது சிறப்புரையில் மனிதவாழ்வில் நேயம் மிகுபட வேண்டும்.குறிப்பாக பெண்கள் அந்தரங்க விசயத்தில் கதை எழுதும் கதாசிரியர்கூட தன் கதையின் பெண் கதாபாத்திரத்தில் தலையிடக்கூடாது.கோத்தகிரியில் வரதட்சிணைக்கொடுமை சம்பந்த வழக்கில் திருமணமாக ஆறுமாதமே ஆன புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட காரணத்தையும் அதற்கு காரணமான கணவனுக்கு தண்டனை கொடுத்த நிலையையும் எடுத்துக்கூறியபோது சட்டம் வெற்றி பெற்றது ஆனால் சமூதாயம் தோற்றுவிட்டது என வேதனைபடக்கூறி அரங்கத்திலுள்ள அனைவரையும் சிந்திக்க வைத்தார்.
சாலை பாதுகாப்பு உரையில், ஒரு விபத்து நேரும்போது அனுபவிக்கும் வேதனைகளையும் இழப்புகளையும் எடுத்துக்கூறிய போது வாகன ஓட்டிகள் அனைவரும் தவறாமல் உரிமம் எடுப்பது அவசியம்.இன்றைய சூழலில் விபத்தின் இழப்புகளை நினைத்துப்பார்த்து படிக்கமாட்டேன் என்றாலும் பரவாயில்லை.தகுதியான வயது நிறைவு அடையும் முன்னர் தம் குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் மோட்டார் ஓட்டவோ,புதிய வாகனம் வாங்கிக்கொடுக்கவோ கூடாது.
சாலை விதிகளை மதிக்க வேண்டும்.போக்குவரத்துச்சட்டங்களை மதிக்க வேண்டும். உரிய காலத்தில் தம் உரிமத்தையும் வாகன காப்பீட்டையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றார்.
திருமிகு. K.K.சொக்கலிங்கம் அவர்கள்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்றுநர்,குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சிறப்புரையில்,
நுகர்வோராகிய நமது எட்டு உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியபோது தங்கம் விற்பனையில் நடைபெறும் மோசடிகள் பற்றி உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.அதேபோல தற்போதைய கறிக்கோழிகள் வேதிப்பொருட்களால் வளர்க்கப்படுவதால் விலை குறைவு என்று நோயை விலைகொடுத்து வாங்கி வருவதை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் சாப்பிடுவதை விட்டுவிட்டு வீதியில் ருசியாக இருக்கிறதே என விலை கொடுத்து வியாதியை வாங்கும் அவலநிலை தவிர்க்க வேண்டும்.அதேபோல தெருவோரக் கடைகளில் சுகாதாரமின்றி நச்சுத்தன்மையுடன் உணவுப்பொருட்கள் தயாரிப்பதை ஆதாரத்துடன் நினைவூட்டியபோது
உதாரணமாக பஜ்ஜி போடுபவர் கையைக்கழுவிக்கொண்டு தம் மூக்கை குடைந்துகொண்டே இருப்பார் ,அதே கையில் பஜ்ஜியை நமக்கு பரிமாறுவதையும்,புரோட்டா மாஸ்டர் சொறி,சிரங்கு இருந்தாலும் தம் முழங்கை வரை புரோட்டா மாவை உருட்டிப்பிசைந்து தம் இடுப்பில் கட்டியுள்ள துண்டையே ஈரப்படுத்தி மாவின் மீது மூடுவதையும் எடுத்துகூறி புரோட்டாவின் தீங்குகளையும் விளக்கி அரங்கத்திலுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
விளம்பர மோசடிகள் பற்றி விழிப்புணர்வு கொடுத்தபோது நடிகர்,நடிகைகள் பணத்துக்காக நடிப்பவர்கள்.அதனால் அவர்கள் மீதுள்ள மோகத்தில் உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் பொருட்களை வாங்கவோ,பயன்படுத்தவோ கூடாது என்றார்.
கோகோ கோலா,பெப்ஸி போன்ற பானங்களில் கெடாமல் இருக்க40 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலப்பதாக கூறினார்.
பால் போன்ற உணவுப்பொருட்களும் அதுபோலவே பால் நீண்ட காலம் கெடாமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்கப்படுகின்றன அதுவே குறிப்பிட்ட நேரத்துக்குள் கெட்டுப்போனால்தான் நல்ல பால் என்பதை தெளிவுபடுத்தினார்.
விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு கட்டாயம் ரசீது கேட்டுப்பெற வேண்டும்.சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் வாங்கும்போது கட்டாயம் அதிலுள்ள லேபிளைப்படித்துப்பார்க்க வேண்டும்.பொன்னி அரிசி குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்றால் அது ரேசன் அரிசியை பாலீஸ் செய்து இருக்கலாம்.அல்லது தற்போதைய 67 ம் நெம்பர் புதிய ரக நெல்லின் அரிசியாக இருக்கலாம்.வாங்கும்போது நமக்குத்தான் விழிப்புத்தேவை என்றார்.2006ம் ஆண்டு உணவுப்பாதுகாப்பு சட்டம்,2011ஆம் ஆண்டு லேபிள் சட்டம் பொதுமக்களாகிய,நுகர்வோராகிய நமது பாதுகாப்பு கருதியே இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.