04 ஆகஸ்ட் 2014

Ilove sathy-இணையதள நண்பர்கள் குழு-சந்திப்பு நிகழ்ச்சி.

மரியாதைக்குரிய நண்பர்களே,
          வணக்கம்.

      

         
                    I LOVE SATHY -இணையதள நண்பர்கள் குழு- நிறுவனர் திரு.சதீஷ்குமார் அவர்களது ஆலோசனைப்படி வருகிற ஆகஸ்டு 15ஆம் தேதி காலை11 மணிக்கு இடம் தற்போதைக்கு,''லோகு டிரைவிங் ஸ்கூல்''வளாகம்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.
   ( நண்பர்கள் வருகையை பொறுத்து இடம் மாறுதலுக்குட்படலாம்). 
       நம்ம சத்தியமங்கலத்தில்,அரசியல்,மதம்,இனம்,சாதி,மொழி என்ற வேறுபாடின்றி மனித சமூகம் என்ற பொது நோக்கில்,அறிமுகம் மற்றும் முதல் நிகழ்வாக, '' இணையதள நண்பர்கள் குழு'' சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அது சமயம் இன்றைய சூழலுக்கேற்ப நம்ம சத்தியமங்கலத்திற்கு சமுதாய நலனுக்கான பணிகள் மற்றும் இளைய சமுதாயத்திற்கு எதிர்காலத்திற்கான வழிகாட்டும் முறைகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.அப்போது சத்தியமங்கலம் பற்றிய தகவல் சிற்றேடு ஒன்றும் வெளியிடலாமா? என்பது போன்ற விவாதங்கள் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்களும் வாங்க! உங்களுக்குத்தெரிந்த நண்பர்களையும் அழைத்து வாங்க!! நட்பில் இணைந்தவர்கள் மட்டுமே வரவேண்டும் என்பதில்லைங்க,அன்றைய தினம் கூட நேரில் வந்து இணையலாம்!!!!....... 
http:// www. ilovesathy.blogspot.com 
                  என்ற வலைப்பக்கத்தினையும் கொஞ்சம் பார்வையிடுங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக