11 மே 2013

நம் பார்வை உலகமாகாது

மரியாதைக்குரிய நண்பர்களே,

வணக்கம்.
   கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
    இன்று சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 07-00 மணிக்கு மேற்கு மண்டலம்,ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் உட்கோட்டம் காவல்துறை அவர்களால் 
                  ''நம் பார்வை உலகமாகாது'' 
       என்ற தலைப்பில் விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை கருத்தரங்கு முகாம் நடத்தப்பட்டது.


                         தலைமை
       திருமிகு.இரா.தா.முத்துமாணிக்கம் M.A..,D.Pharm அவர்கள்,
                       துணைக் காவல் கண்காணிப்பாளர்,
                                      சத்தியமங்கலம்.
     
                                                       தன்னம்பிக்கை உரை
                                                            (சொற்பொழிவு)
                       திருமிகு.G.ஜெயசேகரன் பிள்ளை அவர்கள்,
                                                   NLP Master Practioner (U.K) 


                                                             மற்றும்
                          திருமதி. J.காயத்திரி ஜெயசேகரன் அவர்கள்,
                                                      NLP Practioner.


               வருகை புரிந்த பொதுமக்களில் ஒரு பகுதி இங்கு காண்க.

  
                                           வாழ்த்துரை,  
                              Dr.D. சசிக்குமார்  M.B.B.S.,M.S.,அவர்கள்,
                                            Vice President,Vasan Eye Care.

     

                                                      நன்றியுரை,
                          திருமிகு.சௌந்திரராஜன் அவர்கள்,
                                           காவல் ஆய்வாளர்,
                           சத்தியமங்கலம் காவல் நிலையம்.
                     


                 இந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து ஸ்ரீமீனாட்சி திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


மரியாதைக்குரிய வாசன் கண் மருத்துவமனை துணைத்தலைவர்  மருத்துவர் .D.சிவக்குமார் M.B.B.S.,M.S.,அவர்கள் மேற்பார்வையில் மருத்துவர்கள் குழு சிறப்பான கண் பரிசோதனை இலவசமாக செய்து ஆலோசனைகள் வழங்கியது.
இவ்விரு நிகழ்வுகளிலும் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.
   மோட்டார் வாகன ஆய்வாளர்கள்,ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நிர்வாகிகள்,ஓட்டுநர்கள்,வழக்குரைஞர்கள்,காவல்துறையினர், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் அவர்கள், பல்வேறு அரசுத்துறையினர்,பொதுமக்கள், இவர்களுடன்  நுகர்வோர் நலன் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் சார்ந்த பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.  இடையே குடும்ப உறவை மேம்படுத்தும் குறும்படம் ஒன்றும்,சமூக உறவை மேம்படுத்தும் குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...