16 ஆகஸ்ட் 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

  அன்பு நண்பர்களே,
          வணக்கம். கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
             சென்னை வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக -சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு வருகிற ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி  நமது மாநில தலைநகராம் சென்னை மாநகரில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. அது சமயம் இந்த பதிவை பார்வையிட்ட நண்பர்கள் அனைவரும் வருகை தந்து  நல்ல நண்பர்களை அறிமுகம் ஆகி & கலந்துரையாடிச் செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
          இதோ சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா அழைப்பிதழ்..

         இந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு ஏதோ வேடிக்கையாக எண்ணிவிடாதீர். ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் அடுத்து சென்னை வலைப்பதிவர்கள் குழுமம் -சென்னையில்''தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு'' ஏற்பாடு செய்துள்ளது.
              இது முடிவல்ல ஆரம்பம்-அதாங்க தமிழர்கள் எளிய தமிழில் இணையத்தில் உலாவ,நல்ல தமிழ் நண்பர்களை இணைக்க, karppom.com, suthanthiramenporul.com வலைப்பதிவர் திரு.பலேபிரபு அவர்கள் போன்ற தமிழில் கணினி தொழில்நுட்ப நண்பர்களை & ஜாம்பவான்களை அறிமுகம் ஏற்படுத்திக்கொள்ள,பல்வேறு தொழில்துறைகள்,பணித்துறைகள்,நிர்வாகத்துறைகள்,என பல துறைகளைப்பற்றி- பல விசயங்களைத் தெரிந்துகொள்ள, குறிப்பாக நமக்குள் தமிழர் என்னும் உறவுப்பாலம் அமைத்து தமிழ்ச்சமூக ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள, ஒருவருக்கொருவர் பல விசயங்களை பரிமாறிக் கொள்ள அடுத்து பல தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள என இன்னும் ஏராளமான சிறப்பான நன்மைகள் பெறலாம். 

10 கருத்துகள்:

  1. நீங்கள் எங்கள் வலை தளத்தில் இட்ட இந்த பின்னூட்டம் பார்த்தோம். உங்கள் மெயில் முகவரி தெரியாததால் இங்கு வந்து சொல்கிறேன்

    Paramesdriver said...
    மரியாதைக்குரிய நண்பரே,இனிய வணக்கம்.தாளவாடி மலைப்பகுதியில் அரசுப்பேருந்தில் ஓட்டுனர் பணி புரியும் நான் அவசியம் ஆகஸ்டு 26-இல் புண்ணியகோட்டி மண்டபத்தில் இருப்பேன்.எனக்கும் ஒரு இடம் ஒதுக்கமுடியுமா?
    *****
    பரமேஸ் டிரைவர் அவர்களே
    உங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தந்தது. அவசியம் கலந்து கொள்ளுங்கள் நண்பர்கள் அனைவரிடமும் சொன்னேன். அனவைரும் மிக மகிழ்ந்தனர். உங்களை சென்னையில் சந்திக்க ஆவலாக உள்ளோம்

    மேலும் உங்கள் மெயில் மற்றும் தொலை பேசி எண் எங்களுக்கு மெயில் மூலம் தெரிவிக்கவும்

    எனது இ மெயில்: snehamohankumar@yahoo.co.in


    மோகன் குமார்
    சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.தங்களது அழைப்பிற்கு மிகவும் நன்றிங்க! அவசியம் வருகிறேன்.என PARAMES DRIVER - THALAVADY - ERODE DISTRICT.

      நீக்கு
  2. உங்களையும் சக வலைபதிவு சகோதரர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய ஜெய் அவர்களே,வணக்கம். தங்களது அழைப்பிற்கு மிக்க நன்றிங்க! என பரமேஸ் டிரைவர் - தாளவாடி - ஈரோடு மாவட்டம்.

      நீக்கு
  3. வருக வருக அன்போடு அழைக்கிறோம்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய அம்மையீர்,வணக்கம்.தங்களது அழைப்பிற்கு மிக்க நன்றிங்க!என Parames Driver Thalavady -Erode dt

      நீக்கு
  4. பதிவர் சந்திப்புக்கு வருக வருக என நானும் வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.தங்களது அழைப்பிற்கு மிக்க நன்றிங்க! அவசியம் வருகிறேன்.என Parames Driver. Thalavady

      நீக்கு
  5. வருக வருக அன்போடு அழைக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம். சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கான தங்களது அழைப்பிற்கு மிக்க நன்றிங்க!.என PARAMES DRIVER - THALAVADY - ERODE DT.

      நீக்கு

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...