நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.
27 ஆகஸ்ட் 2012
20 ஆகஸ்ட் 2012
சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு-குறித்த தகவல்
மரியாதைக்குரிய நண்பர்களே,
வணக்கம். சென்னையில் வருகிற ஆகஸ்டு 26-ந்தேதி தமிழ்வலைப்பதிவர்கள் சந்திப்பு நடக்க இருப்பதை நேரடியாக நமது வலைப்பக்கத்திலேயே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி அன்று நிகழ்ச்சி நடக்கும்போதுதான் (நேரடி) ஒளிபரப்பு செய்யப்படும்.அதுவரை அந்தப்பகுதி OFF LINE என்றே இருக்கும்.
என்பது புரிந்து கொள்ளுங்கள்.ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நேரடி ஒளிபரப்பினை கண்டு களியுங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
நன்றிங்க! என
PARAMES DRIVER //
THALAVADY -
ERODE DISTRICT.

19 ஆகஸ்ட் 2012
16 ஆகஸ்ட் 2012
சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா
அன்பு நண்பர்களே,
இந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு ஏதோ வேடிக்கையாக எண்ணிவிடாதீர். ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் அடுத்து சென்னை வலைப்பதிவர்கள் குழுமம் -சென்னையில்''தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு'' ஏற்பாடு செய்துள்ளது.
இது முடிவல்ல ஆரம்பம்-அதாங்க தமிழர்கள் எளிய தமிழில் இணையத்தில் உலாவ,நல்ல தமிழ் நண்பர்களை இணைக்க, karppom.com, suthanthiramenporul.com வலைப்பதிவர் திரு.பலேபிரபு அவர்கள் போன்ற தமிழில் கணினி தொழில்நுட்ப நண்பர்களை & ஜாம்பவான்களை அறிமுகம் ஏற்படுத்திக்கொள்ள,பல்வேறு தொழில்துறைகள்,பணித்துறைகள்,நிர்வாகத்துறைகள்,என பல துறைகளைப்பற்றி- பல விசயங்களைத் தெரிந்துகொள்ள, குறிப்பாக நமக்குள் தமிழர் என்னும் உறவுப்பாலம் அமைத்து தமிழ்ச்சமூக ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள, ஒருவருக்கொருவர் பல விசயங்களை பரிமாறிக் கொள்ள அடுத்து பல தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள என இன்னும் ஏராளமான சிறப்பான நன்மைகள் பெறலாம்.
வணக்கம். கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
சென்னை வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக -சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு வருகிற ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நமது மாநில தலைநகராம் சென்னை மாநகரில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. அது சமயம் இந்த பதிவை பார்வையிட்ட நண்பர்கள் அனைவரும் வருகை தந்து நல்ல நண்பர்களை அறிமுகம் ஆகி & கலந்துரையாடிச் செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதோ சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா அழைப்பிதழ்..இந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு ஏதோ வேடிக்கையாக எண்ணிவிடாதீர். ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் அடுத்து சென்னை வலைப்பதிவர்கள் குழுமம் -சென்னையில்''தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு'' ஏற்பாடு செய்துள்ளது.
இது முடிவல்ல ஆரம்பம்-அதாங்க தமிழர்கள் எளிய தமிழில் இணையத்தில் உலாவ,நல்ல தமிழ் நண்பர்களை இணைக்க, karppom.com, suthanthiramenporul.com வலைப்பதிவர் திரு.பலேபிரபு அவர்கள் போன்ற தமிழில் கணினி தொழில்நுட்ப நண்பர்களை & ஜாம்பவான்களை அறிமுகம் ஏற்படுத்திக்கொள்ள,பல்வேறு தொழில்துறைகள்,பணித்துறைகள்,நிர்வாகத்துறைகள்,என பல துறைகளைப்பற்றி- பல விசயங்களைத் தெரிந்துகொள்ள, குறிப்பாக நமக்குள் தமிழர் என்னும் உறவுப்பாலம் அமைத்து தமிழ்ச்சமூக ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள, ஒருவருக்கொருவர் பல விசயங்களை பரிமாறிக் கொள்ள அடுத்து பல தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள என இன்னும் ஏராளமான சிறப்பான நன்மைகள் பெறலாம்.
14 ஆகஸ்ட் 2012
இந்திய தேசிய கொடி வரலாறு
மரியாதைக்குரிய நண்பர்களே,
சுதந்திர தின நல்வாழ்த்துக்களுடன் இனிய வணக்கம்.
இங்கு நமது தேசிய கொடி வரலாறு பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
இந்த தகவலை செய்தியாக வெளியிட்ட கடந்த 2010ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதியிட்ட கோவைப்பதிப்பு, தினமணி நாளிதழுக்கு சமூகம் சார்பாக முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
கொடி வரலாறு.
நமது தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கியவர் திரு.பிங்காலி வெங்கைய்யா என்பவர் ஆவார்.இவர் தையல்காரர் ஆவார்.
இவர் ஏறக்குறைய முப்பது நாடுகளின் கொடிகளை ஆராய்ந்தபின் , அன்றைக்கு பெரும்பான்மையாக இரண்டு இன மக்களைக்குறிக்கும் விதத்தில்
சிகப்பு மற்றும் பச்சை வர்ணங்களைக்கொண்ட ஒரு கொடியை உருவாக்கி அதனை 1921-ஆம் ஆண்டில் பெஸவாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தியடிகளிடம் கொடுத்திருக்கிறார்.
அதன் பிறகு நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அந்தக்கொடியின் நடுவே சிறுபான்மை இனத்தைக் குறிக்கும் விதத்தில் வெள்ளை நிறத்தைப் புகுத்தினார்.
அதன்பின் ஜலந்தரைச் சேர்ந்த திரு.ஹன்ஸ்ராஜ் அவர்கள் கொடியின் நடுவில் சக்கரத்தைப்பொறிக்கும் யோசனையைத்தெரிவித்தார்.
இந்த கொடி குறித்த தீர்மானம் 1931-இல் கராச்சியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இறுதியாக புத்த தர்மத்தை வலியுறுத்தும் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட பிறகு,
இந்தியாவின் தேசியக்கொடியாக 1947-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
நமது தேசியக்கொடிக்கு ஆரம்ப வடிவம் கொடுத்த தையல்காரர் திரு.பெங்காலி வெங்கைய்யா அவர்கள் அரசால் எந்த மரியாதையும் செய்யப்படாமல் வறுமையில் வாடி 1963-இல் மறைந்தார். நமது தேசியக் கொடியின் நடுவில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம் ''முன்னேற்றத்தை''க் குறிக்கிறது.
நள்ளிரவில் சுதந்திரம் ஏன்?
மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துவிட்டு இங்கிலாந்து பாராளுமன்ற அனுமதியும் பெற்றுவிட்டார், இதனை பத்திரிக்கையாளர் மத்தியில் அறிவிக்கும் போது ஒரு நிருபர் எப்போது சுதந்திரம் கொடுக்க நினைத்துள்ளீர்கள் என்று கேட்டார்.

அதுவரை சுதந்திரம் கொடுக்கும் தேதி பற்றி சிந்தனையில்லாமல் இருந்த
மவுண்ட்பேட்டன் நினைவுக்கு வந்தது ஆகஸ்டு 15-ந்தேதி.
காரணம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை சேர்ந்த 1,50,000 வீரர்கள் கிழக்கு ஆசியா கடற்படை கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் 1945 -ஆம் வருடம் ஆகஸ்ட் 15-இல் சரணடைந்தனர். எனவே ஆகஸ்ட் 15-ந்தேதி அவர் வாழ்நாளில் மறக்க முடியாத தேதி, அதனால் ஆகஸ்ட் 15 இல் இந்தியாவிற்கும் சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தார்.
இவர் இதனை அறிவித்தவுடன் இந்தியாவிலுள்ள நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாட்கள் பொறுமை காத்த நாம் இன்னும் இரண்டு நாட்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர்.
ஜவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. இனி திருத்தம் செய்ய முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது.

அதனால் நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர்.சோதிட பலன்கள் எல்லாம் சூரியன் உதயம் முதல் அஸ்தமனம் வரை மட்டுமே பலன் கொடுக்கும்.இரவில் பலன் அளிக்காது என்ற கருத்துப்படி இரவில் சுதந்திரம் பெற சம்மதித்தினர். அதன்படி நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம்.
இந்த வலைப்பக்கத்தின் 2012 பிப்ரவரி மாத பதிவான ''இந்திய தேசிய கொடி'' தலைப்பிட்ட பதிவினையும் பார்வையிடவும்.நன்றிங்க!
PARAMES DRIVER //
TAMIL NADU SCIENCE FORUM //
THALAVADY - ERODE Dt.
14-08-2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முத்தமிழ் என்றால் என்ன?
முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...
-
வாசிப்பை நேசிப்போம்.... வீட்டிற்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே.... அறிவிற்கு வெளிச்சம் வாசிக்கும் நூலே!!!! வாசிக்காமல் யார்க்கும் வ...
-
திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -09 ----------------------------------...