மரியாதைக்குரிய நண்பர்களே,
வணக்கம்.
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மனித வாழ்வின் தேவைகளில் உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இருப்பிடம்,அடுத்த நான்காவது இடத்தில் போக்குவரத்து என அத்தியாவசியத்தேவையாக உள்ளது.
அவ்வாறான போக்குவரத்தில் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் உலக வரலாற்றிலேயே மனித உயிர்களைப் பலி வாங்கும் அங்கீகாரம் பெறாத நிகழ்வாக,சமுதாயச் சீர்கேட்டின் ஒருபகுதியாக,நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது சாலை விபத்துதாங்க!.தற்போது சாலைவிபத்துக்கள் மனித சமுதாயத்தையே கதிகலங்க வைக்கிறது.
நோய்களால் இறப்பவர்களைவிட,இயற்கைச்சீற்றங்களால் இறப்பவர்களைவிட,தீவிரவாதம் போன்ற சமூகவிரோதச் செயல்களால் இறப்பவர்களைவிட சாலைவிபத்துகளால் இறப்பவர்களே மிக அதிகமாக உள்ளது..
அவ்வாறு ஏற்படும் சாலை விபத்துகளும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் குறிப்பாக இளைஞர்களால் ஏற்படுகிறது என்கிறது சாலைப்பாதுகாப்புக் குழுவின்ஆய்வறிக்கை.
அதன்படி மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் இந்த ஆண்டிற்கான விழிப்புணர்வு வாசகமாக ''உயிருடன் வாழ வேண்டுமெனில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதே'' என்னும் தலைப்பில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி மனித உயிர்களைக்காக்க,குறிப்பாக இளைஞர்களைக் காக்க உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தாளவாடி வட்டாரப்பகுதியில் சாலை விபத்து ஏற்படக்காரணங்கள், சாலை விபத்துக்களால் ஏற்படும் இழப்புகள்,பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணிகள்,பொதுக்கூட்டங்கள்,கருத்தரங்குகள்,விவாத மேடைகள்,கட்டுரைப்போட்டிகள்,பேச்சுப்போட்டிகள்,தெருமுனைப்பிரச்சாரங்கள்,
சுவரோட்டிகள்,துண்டுப்பிரசுரங்கள்,விளம்பர ஒட்டிகள் என பல்வேறு நிகழ்வுகளில் வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை விழிப்புணர்வு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில்
1)சத்தியமங்கலம் வட்டாரப்போக்குவரத்துத்துறை,
2)தாளவாடி காவல்துறை,
3)அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடிக்கிளை-ஈரோடு மண்டலம் , 4)மக்கள் பிரதிநிதிகள் தாளவாடி வட்டாரம்,
5) ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகள்
,6) நெடுஞ்சாலைத்துறை,
7) கல்வித்துறை.
8)மருத்துவத்துறை,
9) சட்டத்துறை,
10) வட்டார வளர்ச்சி மையம்,
11)வனத்துறை,
12)மின்வாரியம்,
13)பட்டு வளர்ச்சித்துறை,
14) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் &
J.S.S.தொழிற் பயிற்சி மையம்-தாளவாடி
(15)சமூக நல அமைப்புகளான (அ) ரோட்டரி கிளப்-தாளவாடி, (ஆ)ஒய்ஸ்மென் கிளப்-தாளவாடி, (இ)மைராடா-தாளவாடி, (ஈ)பாம்2-தாளவாடி, (உ)வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்,(ஊ)தொன்போஸ்கோ வழிகாட்டி மையம்-தாளவாடி,(எ) கிரிக்கெட் குழுக்கள்,(ஏ) கைப்பந்தாட்டக்குழுக்கள்,(ஐ) மகளிர் குழுக்கள்,(ஒ)சமூக ஆர்வலர்கள்,(ஓ)வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்-தாளவாடி,
என அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -தாளவாடி மையம்-( ஈரோடு மாவட்டம்) சாலைப்பாதுகாப்பு பிரச்சாரங்களை செய்யத்திட்டமிட்டுள்ளது.அதன்படி திட்ட வேலைகள் பின்வருமாறு;-
(1)01-ஜனவரி-2013 செவ்வாய்க்கிழமை-சாலைப்பாதுகாப்பு & மது,போதைகளின் தீங்குகள்.இளைஞர்களுக்கான விழிப்புணர்வுப்பிரச்சாரம்
(2) 02 -ஜனவரி-2013 புதன்கிழமை -சாலைப்பாதுகாப்பு கட்டுரைப் போட்டிகள்,பேச்சுப்போட்டிகள் - அனைத்து பள்ளிகளின் மாணவ,மாணவியருக்காக.
(3) 03-ஜனவரி-2013 வியாழக்கிழமை - மருத்துவப்பரிசோதனை & முதலுதவிப் பயிலரங்கு - ஈஷா யோகா மையம் மருத்துவக்குழுவினர்
பயனாளிகள் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிலாளர்கள்.
இடம்=தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி-ஈரோடு மண்டலம்.
(4) 04-ஜனவரி-2013 வெள்ளிக்கிழமை -சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு & விவாதக்களம்.
இடம் = J.S.S.தொழிற்பயிற்சி மையம்-தாளவாடி.
(5) 05-01-2013 சனிக்கிழமை- ஆசனூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை,வனத்துறை இவர்களுடன் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.பள்ளி மாணவ,மாணவியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை அனைத்து ஓட்டுனர்கள்.
இடம்= அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேனிலைப்பள்ளி -
(6) 06-01-2013 ஞாயிற்றுக்கிழமை=மருத்துவர்கள் மற்றும் வாழும் கலைப்பயிற்சி குழுவினர்.
யோகா, மனவளக் கலைப் பயிற்சி மற்றும் சுகாதாரம் மற்றும் உடல்நலப் பயிற்சி
இடம்=ஸ்ரீபண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகம்- தாளவாடி.
(7) 07-01-2013 திங்கட்கிழமை - அனைத்துப்பள்ளிகளின் மாணவ,மாணவியர் வழங்கும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி.
தாளவாடி காவல்நிலையத்திலிருந்து புறப்பட்டு தாளவாடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் தாளவாடி பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடை வரை வந்து நிறைவு செய்தல்.
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசு வழங்குதல்.கனரக வாகனங்களின் சிறந்த ஓட்டுனர்களுக்கு பாராட்டுகளும்,பரிசுகளும் வழங்குதல்
இடம் தாளவாடி பேருந்து நிலையம் .