09 பிப்ரவரி 2011

அரசு சாரா நிறுவனம் -N.G.O.

                அரசு சாரா நிறுவனம்.-  N.G.O-என்றால் என்ன?
  
      ரசு சாரா அமைப்பு என்பது தனியாரால் அல்லது அரசு பங்களிப்போ,அரசு சார்ந்தோ இல்லாத நிறுவனங்களினால் சட்டப்படி உருவாக்குகிற அமைப்பு ஆகும்.
   
         ந்த அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திடம் முழுமையாகவோ,அல்லது பகுதியாகவோ நிதியுதவி பெற்றும் செயல்படுகின்றன.ஆனால் அரசுக்கு தமது அமைப்பில் எவ்விதமான  உறுப்பினர் உரிமையையும்  கொடுக்காமல்  தங்களது அரசு சார்பின்மையைக் காத்துக்கொள்கின்றன.
 
         ரசு சாரா அமைப்புகளானது இன்றைய சமூகப் பார்வையில் பல விதமாக,தவறாக விமர்சிக்கப்படுகின்றன.அதன் காரணங்களால் முடங்கியும் போய் விடுகின்றன.
          
           தற்கு   காரணங்கள்                                                                                                      
   
           (1) ரு திட்டத்தை முன்னின்று தொடங்கிச் செய்பவரோ,அல்லது

         (2)திட்டத்தில் அதிக உதவி செய்து முன்னணிப் பங்களிப்பாளராக இருக்கும் ஒருவரோ  அந்தத் திட்டத்தைத் தன்னோடு தொடர்பு படுத்தி ஒட்டுமொத்தப் பெயரினையும் அதாவது பெருமைகளை தானே எடுத்துக்கொள்வது,அல்லது முயற்சி செய்வது.மேலும்,                                                                                                       

      (3) க்கமுடன் தன்னார்வத்தொண்டுப் பணியாற்ற வரும் புதியவர்களைப் புறக்கணிப்பது.                                                                                                                              

     (4) மிகவும் முக்கியமான திட்டங்களை வகுத்து அதில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது ஆர்வம் மற்றும் சில காரணங்களால் அந்த செயல்பாட்டை இன்னொரு திட்டத்திற்கு பங்களித்து ,நமது பங்களிப்பைச் சிதறச் செய்து எந்தத்திட்டமும் முழுமையடையாமல் (இயலாமல்) நின்று போவது.                                                                                                                  

    (5) முக்கியமில்லாத திட்டங்களில் பங்களிப்பது ,                                                             

    (6 ) ரசு அல்லது பிற நிதிகளைத் தனது சுய நலனுக்காக எடுத்துக்கொள்வது.அல்லது முறைகேடாகப் பயன்படுத்துவது.
    
            போன்ற காரணங்களால் சமூகத்திடம் தவறான விமர்சனத்திற்கு  ஆளாக நேரிடுகிறது. எனவே,
             
        ன்னுடைய ஆக்கங்களைப் பிறருக்கும் கொடுக்க வேண்டும்.அப்போதுதான்,
           
        எந்த ஊதியமும் பெறாமல் உழைப்பு, திறமை,அறிவு போன்றவற்றைக் கொடுக்க முன் வருபவர்களை ஈர்த்துக்கொள்ள முடியும்
           
      .இந்த அமைப்பும் விரிவடையும்.அதன் காரணமாக,                                             
          இந்த சமூக முன்னேற்றத்திற்காக,நாட்டின் வளர்ச்சிக்காக அதிக சேவைகளைச் செய்ய முடியும்.
         

தன்னார்வத் தொண்டு நிறுவனம்-


                          தன்னார்வத் தொண்டு 
            ++++++++++++++++++++++++

நிறுவனம்-ஒரு அலசல்...
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


      
அன்பு நண்பர்களே,
=============================
                          ணக்கம்.தன்னார்வப் பணி அல்லது தொண்டுப் பணி என்பது பணம்,பொருள் என எவ்விதக் கைம்மாறு இல்லாமல் ஒரு நோக்கத்திற்காக அல்லது ஒரு கொள்கைக்காக தமது உழைப்பினை வழங்குவது ஆகும்.

              றவினர்களுக்கு உதவுவது முதலாக அமைப்புகளில்,படைத்துறைகளில்,அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது வரை எனப் பல்வேறு முறைகளில் தன்னார்வப் பணிகள் செய்யப்படுகின்றன.
    
          தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நோக்கமே மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மற்றும் பிற வாழ்க்கைத் தேவைகளை அனைவருக்கும் கிடைக்க வைத்து இந்த மனித சமூகம் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே ஆகும்.
       
             ன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் சமுதாயத்திற்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார்.

          பல தன்னார்வலர்கள் அரசு சாரா அமைப்பு மூலம் சேவை செய்கின்றனர்.சில வேளைகளில் இவர்கள் முறை சார்ந்த தன்னார்வலர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
      
          ன்னார்வலர்கள் தனக்காக எந்த வித நிதி மற்றும் பொருள்களை வாங்க மாட்டார்கள்.அதே சமயம் பொதுச்சேவைக்காக தனது பணத்தைச் செலவு செய்திருந்தால், அந்த (செலவு செய்த) சொந்தப் பணத்தை மட்டும் திரும்பப் பெற்றுக் கொள்வர்.
   
        ,ணமின்மை,நேரமின்மை,மனமின்மை,திறனின்மை,போன்ற காரணங்களைக் காட்டி பொதுச்சேவை செய்ய ,  தொண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றப் பெரும்பாலோர் முன் வருவதில்லை.இது வருத்தப் படக் கூடிய விசயமாகவே உள்ளது.
       
         நமது நாட்டில் பசி,நோய்கள்,கல்வியறிவு இல்லாமை,என உயிர் போகும் விசயங்கள் ஏகப்பட்டவை உள்ளன. அவைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்.அப்போதுதான் நம்நாடு பிற நாடுகளுக்கு இணையாக வளர முடியும்.            
                       நமது மக்கள் அனைவரும் சத்தான உணவு, சுகாதாரம்,ஆரோக்கியம்,சிறந்த கல்வி பெற்று பல விசயங்களைத் தெரிந்து அறிவில் சிறந்து விளங்கி ,நமது நாடும் அறிவியல் வளர்ச்சி பெற்று தன்னிறைவு அடைந்து மற்ற நாடுகளுக்கு இணையாக, வல்லரசு நாடாக சிறப்படைய முடியும்.
   
       னவே,நாம் நமது பொருளாதாரத்தைப் பெருக்கி ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து,வீண் செலவுகளைக் குறைத்து,சிக்கனத்தைக் கடைப்பிடித்து,சுகாதாரம் காத்து,உடல்நலம் காத்து
                    தன்னொழுக்கம் பெற்றவர்களாக,பிறருக்கு உதவி செய்பவர்களாக,அயராது தினசரி,வாரம் ஒருநாள்,மாதம் ஒருநாள்,வருடம் ஒருநாள் எனத்
             தங்களால் இயன்ற அளவு, இயன்ற நேரங்களில்,நம்மால் முடிந்த அளவு நமது சமுதாயத்திற்காக உழைத்து ,மனித நேயம் போற்றி,
              பிறருக்கு உதவி செய்து,இயற்கை வளங்களைக் காத்து, இளைய சமுதாயத்திற்கு நல்ல வழி காட்டி
                 அனைவரும் நிம்மதியாக வாழத் துணை நிற்போமாக.  
              ===========================================================

06 பிப்ரவரி 2011

பிரிவுகள்.

1.முதல் உதவி                                                                                        
2.மருத்துவப் பகுதி
3.மகளிர் மட்டும் 
4.உள்ளூர்த் தகவல்கள்  
5.குறளமுதம்
6.போக்குவரத்து , சாலை விதிகள்,(சாலை,ரயில்,விமானம் முன்பதிவு )
7.வழித்தடங்கள் ,கால அட்டவணை (சத்தி,கோபி,தாளவாடி வட்டாரம்)
8.சுற்றுலாத்தளங்கள் , ஈரோடு மாவட்டம்
9.காவல் துறை,ஆம்புலன்ஸ்,டாக்சி,கேஸ்,மருத்துவர்,தொலைபேசி எண்கள்
10.வாடகைக்கார்,ஆட்டோ,வங்கி,மின்சாரம்,திருமண மண்டபம்,லாட்ஜ்,ஓட்டல் தகவல்கள்.
11.இது நம்ம ஏரியா-தியாகிகள்,தலைவர்கள்,கொடைவள்ளல்கள்
12.இலவச விளம்பரங்கள் பகுதி

01 பிப்ரவரி 2011

தியாகி.லட்சுமண அய்யர் ,G.S,, கோபி செட்டிபாளையம்


       

சுதந்திரப் போராட்ட தியாகி  லட்சுமண அய்யர் கோபி செட்டிபாளையம்

அன்பு நண்பர்களே,வணக்கம்.

                         சுதந்திரப் போராட்டத் தியாகி மரியாதைக்குரிய லட்சுமண அய்யர் அவர்கள் 2011ஜனவரி02-ந்தேதியன்று கோபியில் மறைந்தார்.(இவருக்கு வயது 94).

       லட்சுமண அய்யர் அவர்கள் சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி அனைவரிடமும் சமமாகப் பழக்கம் உள்ளவர்.

       தீண்டாமையைக் கடுமையாக எதிர்த்தவர்.
                   
                        1931-ல் மகாத்மா காந்திஜியின் அழைப்புக்கிணங்க  

        அய்யர் அவர்களால் அரிஜன மக்கள் வீட்டுக்குள்ளும் அழைக்கப்பட்டனர்.விருந்தும் வழங்கப்பட்டது.

               இதனால்அவரது சமூகத்தாலும்,உயர் ஜாதியினராலும்,சொந்தங்களாலும் 1931முதல் 1936வரை ஒதுக்கப்பட்டார்.

       கேவலமான பேச்சுக்களுக்கும் அவரது குடும்பமே ஆளானது.
          
          1938முதல்1944வரையிலான காலகட்டத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில்பங்கேற்றார். அதனால் தியாகி லட்சுமண அய்யர் அவர்கள் 

           கோவை,அலிப்பூர்,பெல்லாரி,வேலூர்,பவானி எனப் பல்வேறு சிறைகளில் மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். 


        இவரது மனைவி,மாமனார்,மாமியார் கூட போராட்டத்தில் ஈடுபட்டு அய்யருடன் சிறை சென்றுள்ளனர்.
         
                  1944-ல் சுதந்திரப் போராட்டத்திற்காக  வார்தா சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்த லட்சுமண அய்யர்  அவர்கள் காந்திஜி அவர்களைச் சந்தித்தபோது 
   
     மகாத்மா காந்தி அவர்கள் மதிப்பிற்குரிய லட்சுமண அய்யர் அவர்களைப் பார்த்து  ''நீ  பிராமணன் தானே '' இங்கு சுதந்திரப் போராட்டத்திற்கு என்னுடன் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

      ஆகவே,நீ உடனே ஊருக்குத் திரும்பு! ஊருக்குத் திரும்பியதும் ஹரிஜன சேவை செய்யத் தொடங்கு.அதுவே 'எனது விருப்பம்' என ஆணையிட, 
காந்தியடிகளாரின் ஆணைப்படி

         தனது இறுதி ஆயுள்வரை காந்திஜியின் கட்டளையை நிறைவேற்றுவதில் அய்யர் அவர்கள் கவனமாக இருந்தார்

        துப்புரவுத் தொழிலாளர்களை ஊருக்குள் அழைத்து வந்து  இலவசமாக குடியிருப்புகளைக் கட்டித் தந்தவர் அய்யர் அவர்கள்.
           
               அரசியல் தலைவர்களைப் பொருத்தவரையில் அந்த நாட்களில் இவரது வீடு ஒரு சத்திரம் போலத்தான்.

        இவரது வீட்டில் எந்நேரமும் சமையல் நடந்து கொண்டே இருக்கும்.

       சித்தரஞ்சன் தாஸ்,பாபு ராஜேந்திரபிரசாத்,ராஜாஜி,அருணா ஆசப்அலி,டாக்டர் அன்சாரி,காமராஜர், தந்தைபெரியார் -என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
                    
              பிரிட்டிஷ்காலக் குற்றப்பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்த போது நரிக்குறவ இனத்தைச் சார்ந்த ஒரேயொரு சிறுவனைக் கொண்டு  

        கோபி வாய்க்கால் ரோட்டில் ஹரிஜன விடுதி ஒன்றினை  இலவசமாக  தனது  இடத்தில் ஆரம்பித்தார்  அய்யர் அவர்கள். அந்த விடுதியில் இன்றுவரை தலித் சமுதாய மாணவர்களே அதிகப் பயனடைந்து வருகின்றனர்.

                     இவரது தாராள உள்ளத்தால் இவரது  நன்கொடையால்- இன்று கோபி வட்டாரத்தில் வைரவிழா மேல்நிலைப் பள்ளி,பழனியம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி,டி.எஸ்.சாரதா வித்யாலயம்,விவேகானந்தா ஐ.டி.ஐ.

        மற்றும் ஸ்ரீராமாபுரம் ஹரிஜனக் காலனி,துப்புரவுத்தொழிலாளர்களுக்கானகாலனி என இயங்கி வருகின்றன.

       1952முதல்1955வரை மற்றும் 1986முதல்1992வரை   ஆக
   இரண்டுமுறை 
    கோபி நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார். 

      1955ல் கோபி நகர் குடிநீர்த் திட்டம் நஞ்சைப் புளியம்பட்டி ரோட்டிலுள்ள இவரது பூமியில்தான் நீரேற்று நிலையம் அமைத்து குடிநீர் கொண்டுவரப்பட்டது.

       இவ்வாறாக கோபி நகரம் மற்றும் அனைத்து தரப்பு சமூகத்தவரும் கணக்கில்லாத பயன்கள் அடைந்தனர்.

            இவ்வாறாக சமூகப் பணியாற்றி வந்த தாராள உள்ளம் கொண்ட சுதந்திரப் போராட்டத்  தியாகி திரு;லட்சுமண அய்யர் அவர்கள் மறைவு இந்த சமூதாயத்திற்கு பேரிழப்பாகும். 

       அய்யர் விருப்பப்படி அவரது இரண்டு கண்களும் தானம் செய்யப்பட்டது 

        .மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி அய்யர் அவர்கள் இயற்கையின் விதிப்படி இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அன்னாரது புகழ் என்றென்றும் மாறாது...இனியொரு தியாகி இவர் போல வரமாட்டார்.

         தியாகி லட்சுமண அய்யர் அவர்கள்  அவரது சமூகசேவையின் பயனாக நமது கோபி வட்டாரம் மிகவும் பயனடைந்துள்ளது.

     மரியாதைக்குரிய தியாகி அவர்கள்   நமது நினைவில் நீங்காது  இருக்க வேண்டும் என அவரை வணங்கிடுவோமாக..

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...