08 செப்டம்பர் 2024

2ஆம்ஆண்டு கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2024

கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு  

             அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

 சென்ற ஆண்டு கொளப்பலூர் புத்தகத் திருவிழா-பொதுமக்களனைவரின் ஒத்துழைப்புடன் பேரூராட்சி மன்றத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆதரவுடன்  சிறப்பாக நடைபெற்றது.

  தொடர்ந்து இந்த ஆண்டு புத்தகத்திருவிழா-2024 நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம்  2024 - 08 - 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 7.30 மணிவரை  கொளப்பலூர் J.S.மஹாலில் திரு.MG K.P. முத்துச்சாமி அவர்களது தலைமையில் நடைபெற்றது.

திரு. கொமரசாமி அவர்கள், திரு. சிவராஜ் அவர்கள், திரு.காளீஸ்வரன் அவர்கள்,திரு.அப்பாச்சி ஆசிரியர் அவர்கள், திருமதி.கலைச்செல்வி நூலகர் அவர்கள், திருமதி.கவிஞர்மணிமேகலை அவர்கள், திரு. ஜெய்சங்கர் அவர்கள், திரு.K.ராமன் அவர்கள், திரு K.முருகன் அவர்கள்,திரு. K.P.பழனிச்சாமி அவர்கள்,T.வேல்முருகன் அவர்கள்   உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

முதலாம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழாவின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.

2ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா-2024 வருகின்ற அக்டோபர் 5 & 6 ஆகிய தேதிகளில் சனி,ஞாயிறு இருநாட்கள் நடத்துவது என தீர்மானம் போடப்பட்டது.அதற்கான அனுமதி முறைப்படி மண்டப உரிமையாளர்களை நேரில் சந்தித்து அனுமதி கோருவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...