விரைவில் சுயசரிதை (தொடராக)......
மரியாதைக்குரியவர்களே,
சாலைகள்.தாளவாடி-பனகஹள்ளி தூரம் 25கி.மீ.பயணநேரமோ ஒன்றரைமணி நேரம்.அந்தளவு மெதுவாக ஓட்டவேண்டிய கட்டாயம்.
(மோட்டார் வாகன சட்டம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ளாமல் சேவை செய்த காலம். மக்களின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்க)
பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு சமூகத்தை புரிந்துகொள்ளும் அற்புதமான பணி அதுவும் தாளவாடிமலைப்பகுதியில் பேருந்து ஓட்டும் பணி மனநிறைவினை வழங்கிய அற்புதமான பணி.
தாளவாடி வட்டார பொதுமக்களுக்கும்,அனைத்து பள்ளிகளுக்கும்,மீண்டும் நன்றியினை பதிவு செய்து பெருமையடைகிறேன்....
சத்தி கிளைக்கு மாறுதலாகி (அங்கும் ஓட்டுநர் பணிதாங்க) சென்றேன்.சத்தி கிளையிலும் சுமார் ஏழு ஆண்டுகள் ஓட்டுர் பணியாற்றிவந்த சூழலில் .நிர்வாக காரணங்களுக்காக மீண்டும் தாளவாடிகிளைக்கே அயல்பணி அடிப்படையில் சத்தி கிளை கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு தாளவாடிகிளையில் பேருந்து ஓட்டுநர் பணி.அயல்பணியின் சிரமம் மற்றும் குறைபாடு என்னவெனில் மலைப்பிரதேசப் படி இல்லை..ஆனால் எல்லா பேருந்துகளிலும் பணியாற்ற வேண்டும்.
இந்தச்சூழலிலும் சிக்கல் எழுந்தது.? நான் சத்திகிளையின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு தாளவாடியில் பணிபுரிகிறேன்.ஆதலால் எனக்கு தாளவாடி கிளைக்கே பணி இடமாறுதல் செய்து உதவ வேண்டும்.இல்லையேல் சத்திகிளையிலேயே பணிபுரிய அனுமதியளித்திட வேண்டும். என உரிமை கேட்டு விவாதம் செய்து சத்திகிளையிலேயே பணியாற்ற மீண்டும் அனுப்பப்பட்டேன்.மீண்டும் நிர்வாக உத்தரவுப்படி தாளவாடிக்கே அனுப்பப்பட்டு 30 ஆண்டுகள் முழுமையாக பணிநிறைவு செய்து கடந்த 2023 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியுடன் அறுபது வயது கடந்தவனாக பணிநிறைவு அடைந்தேன்.
இந்த இடத்தில் கிளைமேலாளர்களான திரு.முருகேசன் BM அவர்கள், திரு.நடேசன்BM,அவர்கள்,திரு.தென்னவன்BM அவர்கள்,திரு.ஆறுமுகம் BM இன்னும் சிலர்....இவர்களுக்கு ஜால்ரா பிடிக்காது.அவரவர்பணியினை அவரவர் செய்ய வேண்டும் என்பதில் கடமையாக இருந்த அதிகாரிகள்.
( நேர்மையாக பணியாற்றிய இன்னும் சில அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டு அவர்களையும் சிக்கலில் ஆளாக்க விரும்பவில்லை) ,
இவ்வாறான ஓட்டுநர் பணிக்கு இடையில் சுமார் பத்து ஆண்டுகளாக அதாவது 2010ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் அவர்களது அறிவுறுத்தல்படி, எழுத்தறிவுஇயக்கம் தொடங்கிய தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்கற்கும் பாரதம் நிகழ்ச்சியில் திரு.A.P.ராஜூ நடத்துநருடன் பங்கேற்று சமூகப்பணியில் என்னை இணைத்துக்கொண்டு பணிக்கு அப்பால் பத்து ஆண்டுகளாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு சவாலாக ஏற்றுசமூகப்பணிகளோடு ஓட்டுநர் பணியாற்றினேன்.
இப்படியான02-02-1993 முதல் 30-04-2023 வரையிலான முப்பது ஆண்டுகால மலைப்பிரதேச ஓட்டுநர் பணியில் மது,போதை,புகைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தனியாளாக என்று கூறுவதைவிட திரு ராஜூ நடத்துநர் போன்ற சமூக அக்கறையாளர்களின் ஆதரவுகளை போற்றியும்,
எனவே விரைவில் எனது ஓட்டுநர் பணியில் நேர்மையாக ,மக்களுக்காக,பயணிகளுக்காக,மாணவச்செல்வங்களுக்காக அத்தியாவசியபணி சேவகனாக பணியாற்றிய போது எனக்கு சமூகத்தைப்படித்து சமத்துவம் பெறு என்று வழிகாட்டிய சமூக சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள்,கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ,ஊடக நண்பர்கள், காவல்துறை அதிகாரிகள்,போக்குவரத்துத்துறை அதிகாரிகள்,தனியார் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள், நான் பணியாற்றிய போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றிய மிகச்சில அதிகாரிகள்,உடன் பணியாற்றிய நடத்துநர்கள், பற்றியும் பதிவிட்டு நன்றிக்கடன் செலுத்த உள்ளேன். இனி வருங்காலத்தில் மற்றவர்களுக்கும் சேவைப்பணி பற்றிய புரிதல் ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் எனது ஓட்டுநர் பணியுடன் சமூக சேவைப்பணி பற்றிய தொடர் விரைவில் எழுத உள்ளேன்.
என்றும் மக்கள் சேவகன்,
செ.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்.
தேதி 31-0802023