மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தங்களை கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்....எழுத்துப்பிழைகளை பொருட்படுத்தாமல் தகவல்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்க ...
நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தங்களை கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்....எழுத்துப்பிழைகளை பொருட்படுத்தாமல் தகவல்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்க ...
கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2023 சாதனைபடைத்த வரலாறு....
-----------------------------------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
கோபிசெட்டிபாளையத்திலிருந்து திருப்பூர்,தாராபுரம் சாலையில் 8வது கி.மீ.தொலைவில் அமைந்துள்ள கிராமம் நம்ம கொளப்பலூர் பேரூராட்சி....
என்னை ஈன்ற மண்ணல்லவா......
உறவினர் இல்ல நிகழ்வு ஒன்றில் முருகன் மற்றும் பொன்னுசாமி அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் நம்ம கொளப்பலூரிலும் சுற்றுவட்டார கிராமப்பகுதி மக்கள் பயன்படுத்தும்வகையில் புத்தகக் கண்காட்சியை திருவிழாவாக நடத்தலாம் என முடிவெடுத்தோம்.சுமார் நாற்பது ஆண்டுகால இடைவெளி ஏற்பட்ட கொளப்பலூர் தொடர்பு காரணமாக உறவினர்களும்,நண்பர்களும் தவிர எல்லோருமே புதிய முகங்களாகவே தெரிந்தன.இருப்பினும் புத்தகக்கண்காட்சியை நடத்தியே தீருவது.என முடிவெடுத்து ஆகும் செலவினங்களை மூவரும் பங்குபோட்டுக்கொள்வது என களத்தில் இறங்கினோம்.
முதலில் சந்தித்தது எங்க உறவினர் திரு.அப்பாச்சி ஆசிரியர் அவர்களைத்தாங்க...அடுத்தது திரு.K.C.சிவராஜ் அவர்களை சந்தித்தோம்...இவங்க ஆலோசனைப்படியே கொளப்பலூரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான திரு.M.G.என்றழைக்கப்படும் K.P.முத்துசாமி அவர்களை சந்தித்தோம். தேனீக்கள் இலவச பயிற்சி மையம் நடத்தி வரும் திரு. (தேனீக்கள்) A. பார்த்திபன் அவர்களைச் சந்தித்தோம்.சமூக ஆர்வலரும் பெற்றூர் ஆசிரியர் கழகத் தலைவரான திரு. K.ராமன் அவர்களையும் சந்தித்தோம். வசந்தம் ஆயில் கடை நடத்தி வருகின்ற திரு. P.கோபால் அவர்களையும் சந்தித்தோம். மேற்படி நால்வரும் கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2023 -ன் நான்கு தூண்கள் போன்று செயல்பட்டு வெற்றிபெற உதவினர் என்ற தகவலை இந்நேரத்தில் நினைவுபடுத்தியே ஆகவேண்டும்...
இவர்களில் திரு.முத்துசாமி ஐயாஅவர்கள் ’மரமே வளம் இயக்கம்’ நிறுவி பத்தாயிரம் மரங்கள் நடுவது இலக்கு....இலட்சம் மரங்கள் நடுவதே இலட்சியம் .... என்ற கொள்கையை பிரகடனப்படுத்தி அதன்படியே இரண்டு அடர்வனங்களை உருவாக்கி பராமரித்து வருபவர். சமூகத்தின் மீது அக்கறைகொண்டவர் ஆதலால் ,புத்தகத்திருவிழா நடத்துவதற்கும் உடனே சம்மதித்து அதற்கான அடிப்படை ஆதார வேலைகளை சுறுசுறுப்பாக நடத்துவதற்கும் ஆரம்பமானார்.
திரு.M.G. (எ) K.P.திரு.முத்துசாமி அவர்களின் குணம் யாதெனின் வயது வித்தியாசம் பாராமல் வசதி வித்தியாசம்பாராமல் அனைவரையும் கடவுளே என்று மரியாதையுடன் அழைப்பது தனிச்சிறப்புவாய்ந்த குணமாகும்...மக்கள்பணியில் ஈடுபட்டால் அதனை செம்மையாக செய்து முழுமையடைய வைப்பதில் வல்லவராவார்.
தேனீக்கள் A.பார்த்திபன் அவர்களைப்பற்றி அறிமுகப்படுத்தவேண்டுமெனில் அதற்காக தனி பக்கமே பதிவிட வேண்டும்.அந்தளவுக்கு குடும்பமே சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திரு.K. ராமன் அவர்களும், திரு.P.கோபால் அவர்களும் சமுதாய அக்கறைகொண்டு செயல்படும் இளைஞர்கள்...
இவ்வாறாக சந்தித்த நான்குநபர்களுமே பொதுச்சேவையில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்த காரணத்தால் எவ்வித தொய்வுமின்றி சிறப்பாக அனைத்து பணிகளையும் நிறைவேற்றிட முடிந்தது.
இவர்களின் துணையுடன்
கொளப்பலூர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தி புத்தகக்கண்காட்சியினை ஓவியக்காட்சி,மாணாக்கருக்கான தனித்திறன் போட்டிகள் நடத்துதல், மாணாக்கர்களை சமூகப்பணியில் ஈடுபடுத்துதல்,சிறந்த கல்விச்சேவை நிறுவனங்களுக்கும்,இராணுவசேவையாளர்களுக்கும்,சமூகசேவையாளர்களுக்கும்,சாதனையாளர்களுக்கும்,பாராட்டுகளுடன் விருதுகளும் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்துதல் , முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துதல், நடனங்கள் உட்பட எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி நூல்களை வெளியிட்டு , மாலை நேரத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பு பேச்சாளர்களை வரவழைத்து சிறப்புரை நடத்தி மக்களின் அறிவுக்கு,கண்களுக்கு,காதுகளுக்கு கலை இலக்கிய விருந்தளித்தல் என அறிவுசார் திருவிழாவாக கொளப்பலூர் புத்தகத்திருவிழா-2023 நடத்தலாம்என்ற தகவல்களை அறிவித்து பகிர்ந்தோம்.
கொளப்பலூரில் அமைந்துள்ள J.S.மஹால் திருமண மண்டபத்தை இலவசமாக கேட்டுப்பார்க்கலாம் என முடிவுசெய்து திரு. முத்துசாமி அவர்கள், திரு.அப்பாச்சி ஆசிரியர் அவர்கள், திரு. பார்த்திபன் அவர்கள், திரு. ராமன் அவர்கள் ஆகியவர்களோடு நானும் சேர்ந்து மேற்படி மண்டப உரிமையாளரான கோபியிலுள்ள புவனமஹால் திருமண மண்டபத்தின் அருகிலுள்ள வழக்கறிஞர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களை சந்தித்தோம்.
தகவலறிந்த வழக்கறிஞர் திரு. பாலசுப்பிரமணியம் எயா அவர்கள் உடனே சிறிதும் மறுப்பேதும் கூறாமல் இதுபோன்ற மக்களுக்குபயன்படும் அறிவுசார்ந்த நிகழ்வுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்க.என்று மகிழ்ச்சிபொங்க கூறியதுடன் இத்தனை திட்டங்களை நிகழ்த்துவதாக சொல்கிறீர்களே?, இரண்டுநாட்களில் சாத்தியப்படுமா! இல்லையேல் இன்னும் சில நாட்களை கூடுதலாக எடுத்துக்கொள்ளுங்கள்.என்று சம்மதம்தெரிவித்தார்.
kolappalur book fair - 2023 கொளப்பலூர் புத்தகத்திருவிழா-2023
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.ஈரோடு மாவட்டம் கொளப்பலூரில் முதன்முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா-2023 மற்றும் ஓவியக்காட்சி நடைபெற்றது.
ஒவ்வொரு நிகழ்வும் மிகச்சரியான நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.
அடுத்தபக்கத்தில் விரிவாக காண்போம்.
தொடரும்.....
தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி ஈரோடு மாவட்டம் தொடக...