10 மே 2020

அரிப்பு (சொரிதல் நோய்) FUNGAL INFECTIONS.....

                        படர்தாமரை,பூஞ்சை தொற்று,தோல் நோய்கள்...
                                                             Fungal Groin Infection 
                                       -------------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.அனைவரையும் கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.


   தொடை இடுக்குகள்,அக்குள் பகுதிகள்,தோல் பகுதிகள்,விரல் இடுக்குகள் போன்ற இடங்களில் நமக்கு பூஞ்சை தொற்று தாக்குகின்றன.அவை  படர் தாமரை,சேற்றுப் புண்,கரப்பான் நோய்,தோல் மடிப்பு நோய்,ஜாக் தொற்று,(konguthendral.blogspot.com)

                    இந்தப் பதிவில் பூஞ்சை தொற்றுகள் பற்றி அறிவோம்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியால் எதிர்க்கமுடியாதபோது நம்மை பூஞ்சைதொற்று பாதிக்கிறது.
  பூஞ்சை தொற்றுகள் காற்று,மண்,தண்ணீர்,தாவரங்கள்,விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் காணப்படுகின்றன.

அரிப்பு எதனால் ஏற்படுகிறது?
   அரிப்பு;
                  நமது உடலில் வேண்டாத பொருட்கள் நுழையும்போது நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அலாரம் போன்றது அரிப்பு.அதாவது ஒவ்வாமையின் வெளிப்பாடு அரிப்பு வாயிலாக நமக்கு உணர்த்துகிறது.
பேன்,பொடுகு,தேமல்,சிரங்கு,சொரியாசிஸ் போன்ற தோல்நோய்களால் அரிப்பு ஏற்படுகின்றன.
எறும்பு,குளவி,தேனீ,வண்டு,சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும் அந்த பகுதி சிவந்தும்,தடித்தும் அரிப்பு ஏற்படுகின்றன.
 பூஞ்சை தொற்றுகளும் நமக்கு அரிப்பை ஏற்படுத்துகின்றன.

 பூஞ்சை தொற்று...(konguthendral.blogspot.com)

         ஆண்களுக்கு குதம்,பிட்டம்,இடுப்பு பகுதிகளிலும்,உள்தொடை இடுக்கிலும்,அக்குள் பகுதிகளிலும் ஏற்படுகின்றன.

                 பெண்களுக்கு குதம்,பிட்டம்,உள்தொடை இடுக்குகளிலும்,இடுப்பு பகுதிகளிலும், அக்குள் பகுதிகளிலும், மார்புகளின் கீழ்ப்பகுதிகளிலும் ஏற்படுகின்றன.

இதன் அறிகுறி..
          எரிச்சல்,அரிப்பு,வெடித்த செதில் செதிலான தோல்,வட்ட வடிவில் சிவந்து இருத்தல்,தடித்தல் போன்றவையாகும்.

 பூஞ்சை தொற்று ஏற்பட காரணம்....
                    ஈரமான ஆடைகளை அணிவதாலும்,தற்போது நாகரீகம் என  நாம் அணியும் ஆடைகளாலும் பூஞ்சை தொற்று ஏற்படுகின்றன.மற்றும் பரவுகின்றன.(konguthendral.blogspot.com)

                 .அதாவது இறுக்கமான ஆடைகள், ஜட்டி,  பனியன் போன்ற உள்ளாடைகள் , டெனீம்ஜீன்ஸ்,  லெகின், போன்ற இறுக்கமான ஆடைகளை அணிவதால் காற்றோட்டமில்லாமல் பூஞ்சை தொற்று எளிதில் தாக்குகின்றன.
    மற்றவர்களின் ஆடைகள்,துண்டுகள்,சோப்புகளை பயன்படுத்துவதாலும் பூஞ்சை தொற்று பரவுகின்றன.அதிக வியர்வை,பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிப்  பெருக்கம்,அதிக வெப்பம்,ஈரப்பதம்,சுத்தமில்லமை,சுகாதாரமில்லாமை போன்றவற்றாலும் ,சொறிவதாலும் பரவுகின்றன.
     குறிப்பாக படர்தாமரை போன்ற பூஞ்சைகள்  தலை உட்பட உடலின் எல்லா பாகங்களிலும் பரவி அரிப்பை தந்து வேதனைக்கு ஆளாக்குகின்றன.
           
     பூஞ்சை தொற்றுகள் உட்புற பூஞ்சைதொற்று ,வெளிப்புற பூஞ்சைதொற்று என இரு பெரும்பிரிவுகளாக பரவுகின்றன.
                இவைகள் மொத்தம் 20இலட்சம் பூஞ்சை இனங்கள் இருப்பதாக தெரிகிறது.இவற்றில் 600க்கும் மேற்பட்டவை நோய்களை உருவாக்குபவை என்கிறார்கள்.பூஞ்சை தொற்றுகள் காற்றில் எளிதாக பரவும்.

                   பூஞ்சைக்கு சாதகமான இடங்களாவன....
            காற்றோட்டம் இல்லாத இடங்கள், ஈரப்பதம் உள்ள இடங்கள், வெதுவெதுப்பான சூடு உள்ள பகுதிகள் ஆகும்.(konguthendral.blogspot.com)

வெப்பமண்டல பகுதியான நம்ம தமிழ்நாட்டில் பருத்தி ஆடைகளே சிறந்தது.
சுகாதாரம் காத்தல் அவசியம் ஆகும்.மற்றவர்களின் ஆடைகள் மற்றும் சோப்பு போன்றவற்றை பயன்படுத்துவது தவிர்க்கவேண்டும்.ஈரப்பதமில்லாமல் துடைக்க வேண்டும்.காற்றோட்டத்திற்கான லேசான ஆடைகளை அணிதல்  வேண்டும்.இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிதல் வேண்டும்.
இனி மருத்துவ முறைகளை காண்போம்....
 (1)உப்பு குளியல்
 கடல்நீரில் குளிக்கு வேண்டும்.அல்லது  200கிராம் உப்பு கலந்த நீரில் குளித்து சிறிது நேரம் விட்டு நல்ல தண்ணீரில் குளிக்கவேண்டும்.உப்பு பூஞ்சையை ஒழிக்கும் தன்மையுடையது.
(2)தேங்காய் எண்ணெய் சிறந்த பூஞ்சை கிருமி நாசினியாகும்.ஆதலால் தேங்காய் எண்ணெய் தொடை இடுக்குகளிலும்,வெளிச்சமில்லாத மறைவிடங்களிலும் தடவி வரவேண்டும்.பூண்டு நசுக்கி போட்டு காய்ச்சியும் தடவலாம்.
(3)சோற்றுக் கற்றாழை ஜெல்.....(konguthendral.blogspot.com)

 சோற்றுக்கற்றாழை கூழ் (ஜெல்) எடுத்து நேரடியாக தடவி வரலாம்.
(4)வெங்காயம்...
 வெங்காயத்தை அரைத்து தடவி வரலாம்.
(5)பூண்டு தனியாக நசுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு வதக்கி வடித்து எடுத்த எண்ணெயை தடவி வரலாம்.
(6)குப்பைமேனி இலை...
 பெயரைக்கேட்டாலே அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும்.குப்பையான மேனியையும் சுத்தப்படுத்தும் மூலிகை என்று...
குப்பைமேனி இலை20 எடுத்து மஞ்சள்தூள்அரை டீ ஸ்பூன் சேர்த்து நன்கு இடித்து இரும்புச்சட்டியில் தேங்காய் எண்ணெய் இரண்டு டீ ஸ்பூன் ஊற்றி குப்பைமேனி இலையை போட்டு நன்றாக வதக்கி எடுத்து ஆறவைத்து வடித்து எடுத்த எண்ணெயை பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ஒரு வாரம் காலை,மாலை என இரு வேளைகள் சொறி,அரிப்பு,சிரங்கு உள்ள இடங்களில் தடவி வர குணமாகும்.
(7)முருங்கை இலை..
 முருங்கை இலை எடுத்து நன்கு பிழிந்து  எடுத்த சாற்றில் சிறிது உப்பு சேர்த்து படை உள்ள இடத்தில் இருவேளையும்  தடவி வந்தால் குணமாகும்.
(8)நல்லெண்ணெய்..
 நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து பூண்டு 25பல் எடுத்து நசுக்கி சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொண்டு காலையிலும்,மாலையிலும் இருவேளை படர்தாமரையில் தடவி 15நிமிடங்கள் கழித்து கழுவி வர குணமாகும்.
(9) கருந்துளசி..(konguthendral.blogspot.com)

கருந்துளசியுடன் மூன்று மிளகு சேர்த்து தினமும் காலையிலும்,மாலையிலும் சாப்பிட்டு வந்தால் அரிப்பு,தடிப்பு குணமாகும்.
(10)மருதாணி இலை..
மருதாணி இலை உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்,பூஞ்சைகளையும், பாக்டீரியா எனப்படும் நுண்கிருமிகளையும் அழிக்கும் மருத்துவ குணமுடையது.தோல் நோய்களையும் தடுக்கும்.
(11)பூவரசு...
 பூவரசு காய் பூஞ்சைகள்,நுண்கிருமிகளை அழிக்கும்.
(12)பனைமரத்துப் பால்..
 வண்டு கடி போன்ற பூஞ்சைகளுக்கு தினமும் பனைமரத்தை கொட்டினால் வடியும் பாலை எடுத்து தடவி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகும்.
(12)கருந்தும்மட்டிக்காய்
 இந்த காயை பறித்து புழுவெட்டு உள்ள இடத்தில் மூன்று நாட்கள்,இருவேளை  தடவி வந்தால் விரைவில் குணமடைந்து முடி நன்கு வளரும்.(konguthendral.blogspot.com)

இவை தவிர
(13) சித்த மருத்துவம்,
(14)ஆயுர்வேத மருத்துவம் சிறந்த பலனை கொடுக்கும்.
(15) அல்லோபதி  எனப்படும் ஆங்கில மருத்துவத்தில்  TABLETகளாலும்,CAPSULகளாலும்,CREAMகளாலும்,INJECTIONகளாலும்  குணப்படுத்தலாம்.


பொறுப்பாகாமை அறிவிப்பு...
                   (konguthendral.blogspot.com)
      அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தகவல் நோக்கத்துடன் வாசகர்களுக்கு பயன்படும்வகையில் இங்கு பதிவிடப்படுகிறது.இந்த பதிவுக்கு துல்லியம்,மற்றும் நம்பகத்தன்மை மற்றும் காலவரையறை உத்தரவாதம் தர இயலாதுங்க.ஆதலால் நம்பிக்கை இல்லாதபோது அருகிலுள்ள சித்த,ஆயுர்வேதம் அல்லது அல்லோபதி எனப்படும்  ஆங்கில மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுங்க.(konguthendral.blogspot.com)

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...