சிந்தியுங்க!
இது தலைவிதி அல்ல.சாலைவிதி மதியாமையே !..
மரியாதைக்குரியவர்களே,
அனைவருக்கும் வணக்கம். கடந்த 2016 மார்ச் 6 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கோபி அருகிலுள்ள பவளமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற எனது உறவினர் இல்ல திருமண விழாவிற்காக அன்றை அதிகாலை5.45 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து TN59/ 0304 எண்ணிட்ட பயணிகள் ஆட்டோவில் என் உறவினர் லோகநாதன்,சரஸ்வதி ஆகியோருடன் பயணித்தபோது கோபி - பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவு கறிக்கடை அருகில் சைக்கிளுடன் மோதி ஆட்டோ கவிழ்ந்து உருண்டதில் எனக்கு தலையில் ஆட்டோவின் இரும்பு பட்டா குத்தி வெட்டுக்காயமும்,இடுப்பில் மொக்கை அடியும்,காலிலும் கையிலும் சிராய்ப்புக்காயமும்,லோகநாதனுக்கு நெற்றியிலும் கையிலும் சிராய்ப்பு மற்றும் மொக்கை அடியும்,சரஸ்வதிக்கு தோள்பட்டையின் இரு பக்கமும் உள்ள முன் காரை எலும்புகளும் உடைந்தும் ,ஆட்டோ ஓட்டுநருக்கு காலில் அடியும்,சைக்கிள் ஓட்டிவந்தவருக்கு தோள்பட்டை அடிபட்டும் மோசமான விபத்து ஏற்பட்டுவிட்டது.தகவலறிந்த உடனே கோபி பேருந்துநிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் விரைந்து வந்து எங்களை மீட்டு கோபி அபி மருத்துவமனையில் சேர்த்தனர்.சைக்கிள் ஓட்டியை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
சரி...
விபத்துக்கு காரணம் என்ன? என்பதை அறிவோம்.
நாங்கள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரின் எதிர்பார்ப்பில்லா இயக்கமும்,எதிரில் வந்த மற்ற வாகனங்களின் டிம் செய்யாத பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சமும்,சாலைவிதி அறியாத சைக்கிளோட்டியின் சாலையில் குறுக்கிட்டதும்தான்! மிக எளிதான சாலைப்பயணத்தை மிக மோசமான விபத்துக்கு ஆளாக்கிவிட்டன.
(1)ஆட்டோ ஓட்டுநர் எதிரில் வந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தால் கண் கூச்சமடைந்தபோது பாதையின் தன்மை தெரியாத சூழலில் ஆட்டோவின் வேகத்தை குறைத்து தற்காப்புடன் ஓட்டத் தவறியது.
(வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோ இருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது).
(2)எதிரில் வந்த வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தும் ஹெட்லைட்களின் வெளிச்சத்தை தாழ்த்தாமல் பிரகாசமான வெளிச்சத்துடன் ஓட்டியது.
(இரவு நேர இயக்கத்தில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு கண் கூசும் பிரகாசமான வெளிச்சத்தை தாழ்த்தி இயக்கியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)
(3)சைக்கிள் ஓட்டி வாகனங்களின் பின்னால் சாலையில் வரும் மற்ற வாகனங்களைக்கவனிக்கத்தவறி குறுக்கிட்டது.
(வாகனங்கள் கடந்தவுடன் சாலையில் மற்ற வாகனங்கள் போக்குவரத்து செய்கின்றனவா?என இரு புறமும் கவனித்து சாலையை கடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)
இது போன்ற காரணங்களால் ஆட்டோ ஓட்டுநர் மிக குறைந்த இடைவெளியில் கண்ட சைக்கிள் மீது மோதாமல் இருக்க தான் சென்ற வேகத்திலேயே வலது பக்கமாக திருப்பியும் சைக்கிள் மீது மோதி ஆட்டோ உருண்டு கவிழ்ந்து மிக மோசமான விபத்தை ஏற்பட்டது.இதனால் எங்கள் உறவினர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போனதுடன்,அன்றைய தினம் எனது பணியான பேருந்து இயக்குவதற்காக தாளவாடிக்கு செல்ல முடியாமல் போனது.என் உறவினர் லோகநாதனுக்கு சென்னை செல்லும் (மென்பொருள் பொறியாளர்) பணியும் தடைபட்டது.உறவினர் சரஸ்வதிக்கு இரு தோள்பட்டைகளும் எலும்பு முறிவு ஏற்பட்டு சொல்லமுடியாத வேதனையுடன் கோபிசெட்டிபாளையத்திலுள்ள அபி S.K.மருத்துவமனையில் இருநாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் ஈரோடு அருகில் உள்ள பவானி பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள
(டாக்டர் M.A.N.லோகநாதன் ,MBBS.,MS(Ortho)மருத்துவமனை-
தொலைபேசி எண் 04256 - 231702)
விபத்து எலும்புமுறிவு,முதுகு தண்டுவட -மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனையில் இரு பக்க எலும்புகளும் அறுவை சிகிச்சை செய்யப்படுள்ளது.ஆட்டோவும் சேதம் ஏற்பட்டுள்ளது.ஆட்டோ ஓட்டுநரும் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக தகவல்...சாலைப்பயணத்தில் விபத்துக்கு காரணம் சாலையில் போக்குவரத்து செய்யும் அனைவரின் அலட்சியத்தால் பயணித்த நாங்கள் மருத்துவமனையிலும்,பணிக்கு செல்லமுடியாமலும்,உறவினர்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நேர இழப்பும்,அலைச்சலும்,மன வேதனையும் உடல் வேதனையும் என துன்பங்களோடு இழப்புகளையும் சந்திக்க நேர்ந்துவிட்டது...இது தலைவிதி அல்ல.சாலைவிதி மதியாமையே !..